samedi 10 janvier 2015

"கோதை கண்ட தமிழ்ப்பாதை"

"திருப்பாவை"

 




கோதை கண்ட தமிழ்ப்பாதை:


 
அரங்கனை ஆட்கொண்டதால் கோதை  "ஆண்டாள்" என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள்.

பூமாலை சூடிக் கொடுத்த ஆண்டாள் பாமாலை சூட்டவும் தவறவில்லை. வடமொழிச் சொல்லை கலவாமல் தூய தமிழில் திருப்பாவை, திருமொழி பாடல்களை தமிழுக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார்.




ஆண்டாளுக்கு கிளி ஏன்?


கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள்கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவேஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள்.




திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?


ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட
ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி,
 மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கான காரணம் இதுதான்.

ஆண்டாள்,  கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின் போதுகள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது என்று சொல்லப் படுகின்றது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவைகிளியும் கொண்டு செல்லப்படுகிறது.




 திருஷ்டிக்காக பாடிய பாடல்:


 ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார்

"பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்,

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
 உன் சேவடி செவ்வி திருக்காப்பு 

என்று துவங்கி

"திருப்பல்லாண்டு பாடினார்.


அதுவரையில் "விட்டுசித்தன் (விஷ்ணு சித்தர்) என்று அழைக்கப்பட்ட இவர்  "பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார்.

இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றும் தினமும் பாடப்படுகிறது.




  திருப்பாவை/ தொடர்ச்சி:

 

 

பாடல் 27



கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.





பொருள்:
 

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.





விளக்கம்:

 
"கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது.

இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.





பாடல் 28



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.



பொருள்:


 குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.



விளக்கம்:
 
 "குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.











பாடல் 29



சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.




பொருள்:
 

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.








பாடல் 30



வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.



பொருள்:


 அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
                                                                                                                                                                                                                                               -முற்றும் 
                                                                                                                       

                                                                             
                                                               
.புதுவை வேலு
நன்றி: தினமலர்

24 commentaires:

  1. விளக்கங்கள் மிகவும் அருமை....

    RépondreSupprimer
    Réponses
    1. தெய்வீக மனங்கமழும் கோதை வகுத்த தமிழ்ப் பாதையாம்
      திருப்பாவையின் முப்பது பாடல்களையும் தப்பாது படித்துணர்ந்து
      விளக்கமறிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! வார்த்தைச் சித்தரே!
      தொடர் வருகை புரிக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. விளக்கங்கள் தகவல்கள் அறிந்து கொண்டோம். என்ன ஒரு அருமையான தமிழ்....ஆண்டாளின் படைப்பில்!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாள் அருளிய திருப்பாவையின் தமிழ் பாசுரங்களை நெஞ்சில் நிறைத்து நற்கருத்து நல்கிய ஆசானே போற்றுகிறோம் உமது தமிழ் தொண்டினை!
      தொடர்க!
      சிறக்கட்டும் உமது சிறப்பு பணி அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பாடல்களுக்கான விளக்கங்களும் படங்களும் அருமை.
    நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்னெறி அறிந்து அழகு தமிழ் பாராட்டிய அருமை நண்பர் சொக்கருக்கு
      இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கூடாரவல்லி என்ற சொல் எவ்வாறு வந்தது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன். வழக்கம்போல் பாடல்களுடன் கூடிய விளக்கம் அருமையாக இருந்தது. நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!
      கூடாரவல்லி என்ற சொல் எவ்வாறு வந்தது என்பதை அறிந்துணர்ந்து அருங்கருத்தினை
      நல்கிய தங்களின் கருத்திற்கு குழலின்னிசையின் கரங்கூப்பிய வணக்கமும் நன்றியும் அய்யா!
      தங்களின் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள், எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக. நல்ல விளக்கம் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. ஆன்மீக கருத்தின் நன்னெறியை போற்றும் வகையில்
      சிறப்பான கருத்தினை நல்கிய நண்பர் சத்தியா அவர்களுக்கு குழலின்னிசை நன்றி இசை இசைகின்றது.
      தொடர் வருகை தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கூடாரவல்லி தினத்தில் சிறப்பான விளக்கங்கள்! அருமையான பதிவு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பைந்தமிழ் பாசுரத்தை /பைங்கிளி ஏந்திய ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு சிறந்த கருத்தினை நல்கிய நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  7. விளக்கவுரை அருமை நண்பரே....

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய பெருமைமிகு நண்பருக்கு
      குழலின்னிசையின் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா.
    பாடலும் விளக்கமும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களது கருத்து பகிர்விற்கு
      அருந்தமிழ் நன்றி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. விளக்கங்களை மிகவும் ரசித்தேன். லயித்தேன். பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தெய்வீக அன்பின் ஆழத்தை அறிந்து
      அருங்கருத்து அளித்தமைக்கு குழலின்னிசை
      நன்றி நவில்கின்றது!
      வருக! தொடர் கருத்தினை தருக அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஒவ்வொரு பாடல்களுக்கான விளக்கமும் அருமையாக இருந்தது.கூடுதல் தகவல்கள் இப்பதிவிற்கு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. சூடிக் கொடுத்த சுடர் கொடியின் முப்பது பாடல்களையும் பொருள் விளக்கத்துடன் அறிய தந்ததற்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தெய்வீக அன்பின் ஆழத்தை அறிந்து
      அருங்கருத்து அளித்தமைக்கு குழலின்னிசை
      நன்றி நவில்கின்றது!
      வருக! தொடர் கருத்தினை தருக
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நண்பரே மோதகமும், அதிரசமும் சுவைக்க வருவீரே...

    RépondreSupprimer
    Réponses
    1. சுவைத்தேன்!
      "தேன்"
      நன்றி
      புதுவை வேலு

      Supprimer
  12. பொங்கலுக்கு பொங்கல் (பதிவு) கிடைக்குமா....????

    RépondreSupprimer
    Réponses
    1. உண்டு தோழரே! நன்றி
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer