dimanche 1 février 2015

" அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)




              பட உதவி: தினமலர்




தாய், தந்தை, மனைவி, மகன் என்னும் நான்கு சுவற்றுக்குள்ளே வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்பவன் வரதன். வழக்கமாக வீடு, வீடு  விட்டால், அலுவலகம் !
என்று இருந்தவனுக்கு இப்பொழுது  இருக்கும் ஒரே கவலை அட்மிஷன் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு இடத்திற்கு பதிலாக நான்கு இடத்திற்குமேல் அப்ளிகேஷன் போட்டாச்சு!
ஒன்னும் பதில் இல்லையே ஏன்மிகவும் குழப்பமான மனநிலையோடு அலுவலகம் வந்தவனை பார்த்ததும்!
வா வரதா!  என்னப்பா ஆச்சு?  ஏதேனும் வாய்ப்பு வந்ததா இல்லையா? என்றான் அவனது,
அலுவலக நண்பன் முகேஷ்.
சென்ற வாரம் நடந்தேறிய நேர்முகக் காணலிலும் முழு திருப்தி என்றாயே?
ஏன் இன்னும் பதில் இல்லை? ஒரு வேளை ?........

அவனது வாயில் இருந்து அவசகுனமிகு வார்த்தை வருவதை தடுக்கும் தவிப்போடு,
பேச்சை திசை திருப்பி  "பிப்ரவரி 13"  திருச்சி இடைத் தேர்தல் பற்றி பேச
முற்பட்டான் அவன்.

அட விடுப்பா அது தெரிந்த முடிவுதான். ஆனால் உன்னுடைய ரிசல்ட்தான் எனக்கு!
திரில்லாய் இருக்குது என்றான்.
சற்றும் யோசிக்காமல் சட்டை பையிலிருக்கும் செல்போனை எடுத்தான். தொடர்பு கொண்டு பேசிமுடித்தான்.
என்னப்பா ஆச்சு! நல்ல முடிவுதானே?

தெரியவில்லை! சொல்ல மறுக்கிறார்கள். பதில் எனக்கு அனுப்பி விட்டார்களாம்.
சரி! கவலை படாதே! நிச்சயம் இடம் கிடைக்கும்.
சென்ற வருடம் நீ ! எனக்கு சொன்ன இதே வார்த்தையைதான் 
இப்பொது நான் உனக்கு சொல்லுகிறேன்  என்றான் முகேஷ்.
அலுவலகம் முடிந்ததும் அவனது அட்மிஷன் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதற்காக, கோவிலுக்கு சென்று வழி பட்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தான்.
ஒருவிதமான தவிப்போடு கடிதப் பெட்டியை (letter box)  திறந்தான்.
கடிதம் கண்டான்! பிரித்தான்படித்தான்

வணக்கம்!
தங்களது விண்ணப்பம் நீண்ட பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. 

தாங்கள் குறிப்பிட்ட முதியோரை,  எதிர் வரும்......... தேதியில் நேரில் அழைத்து வந்து  சேர்க்கும்படி  வேண்டுகிறோம்.

நன்றி!

அன்பு நிலா முதியோர் இல்லம்
திருச்சி.


மழையை வேண்டி தவம் செய்தோம் அன்று!

" அவன் ஒரு குடையைத் தேடி"



மழையை அழைத்துச் சென்றான் இன்று!
 

புதுவை வேலு

 

 

 

38 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    கதை மிக அற்புதமாக நகர்த்தியுள்ளீர்கள் தொடக்கிய விதமும் முடித்தவிதமும் நன்று.. வாழத்துக்கள்..
    இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்கள் பற்றி தொகுப்பு BBCயில் வாரத்துக்கு ஒரு முறை சிறப்பு தொகுப்பாக வேர்களைவெறுக்கும் விழுதுகள் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்படுகிறது கேட்டுப்பாருங்கள் படும் வேதனைகளை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      சிறுகதையினை சிறப்பித்து சீர் கருத்து புரிந்தமைக்கும்
      "BBC" பற்றிய தகவல்களை தந்தமைக்கும்,
      வருக! கருத்தினை தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சுருக்கமாக எனினும்
    மனதிற்கு மிகவும் நெருக்கமாக...
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பின் இனிய அருங்கருத்து அளித்த அய்யாவுக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. முடிவு எதிர்பாராதது. அதே போல் அப்ளிகேஷன அவன் மானும் போடாமலா போகப் போறான்?
    கவிதை கண்கலங்க வைக்கிறது

    RépondreSupprimer
    Réponses

    1. இன்றைய நிகழ்வு நாளை வரலாறாக மாறும்போது,
      நீங்கள் சொல்வதுபோல்

      (முடிவு எதிர்பாராதது. அதே போல் அப்ளிகேஷன அவன் மகனும் போடாமலா போகப் போறான்?)

      நிகழும் என்பதே நிதர்சனமான உண்மை அய்யா!
      நற்கருத்தை நல்கியமைக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எதிர்பார்க்கல இப்படியொரு முடிவை அருமைமா.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி,
      Geetha M,

      சிறு கதையின் முடிவினை பாராட்டியமைக்கு,
      தொடர்க!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நச்சென்று மனதில் பதியுமளவு உள்ளது. எதிர்பாரா முடிவாக இருப்பினும் மனம் நிறைவாக, சுமை குறைந்ததுபோல உள்ளது.

    RépondreSupprimer
    Réponses
    1. உள்ளதை உள்ளபடி உணர்த்திய உன்னதமான கருத்தினை உரைத்த அய்யா அவர்களுக்கு, மிக்க நன்றி!
      நெறிபடுத்த நெறியாளராய் தவறாது வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. மனம் கனக்கிறது.....

    சிறு கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை.

    காலம் எப்படி யெல்லாம் போகிறது...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      வலைச்சரம் ஆசிரியை அவர்களே!
      வருகைக்கு மிக்க நன்றி!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. உண்மையிலேயே சிறியகதை ஆனால் தெளிவான கதை.வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "தெளிவான கதை.வாழ்த்துக்கள்"
      G.M Balasubramaniam

      தங்களது பின்னூட்டம் ஊட்டத்தையும், ஊக்கத்தையும் உயர்ந்தளிக்கின்றது!
      ஏற்று உழைப்பினை உயர்வடையச் செய்ய முல்கின்றேன் அய்யா! நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எதிர்பார்க்கவில்லை முடிவை. மனம் கனக்கின்றது. காலம் போகும் போக்கைப் பார்த்தால்....கதையைச் சொல்லிய விதம் அருமை...

    RépondreSupprimer
    Réponses
    1. "எதிர்பார்க்கவில்லை முடிவை. மனம் கனக்கின்றது. காலம் போகும் போக்கைப் பார்த்தால்....கதையைச் சொல்லிய விதம் அருமை.."
      Thulasidharan V Thillaiakathu,


      தங்களது பின்னூட்டம் ஊட்டத்தையும், ஊக்கத்தையும் உயர்ந்தளிக்கின்றது!
      ஏற்று உழைப்பினை உயர்வடையச் செய்ய முல்கின்றேன் அய்யா! நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. எதற்காக அப்ளிகேஷன் என்ற யோசித்துக் கொண்டே படித்து கொண்டிருக்கையில் கதையின் முடிவு மனதை கனக்க செய்தது. சிறுகதைக்குள் எவ்வளவு பெரிய வலி நிறைந்த கதை.மிக அருமை!
    "நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில் நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்..!!" மிக அருமையான அதே நேரத்தில் மனதை வலிக்க செய்த வரிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. ( " அவன் ஒரு குடையைத் தேடி",
      "சிறுகதைக்குள் எவ்வளவு பெரிய வலி. மிக அருமை!)
      நன்றி சகோதரி,
      கதையினை ஆழ்ந்து படித்து, உள்வாங்கி உள்ளபடி உண்மை கருத்தை
      உரைத்தமைக்கு,
      இதை படித்து ஒரு சிலராவது பாடம் கற்றால் நலம்! இல்லையாயின்,
      டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று, அவர்கள் சொன்ன கருத்து பலிக்கவும் வாய்ப்பு உள்ளது.
      வருக! கருதினை புனைக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. முடிவு மனதை கணக்க வைத்து விட்டது நண்பரே... இன்றைய அவல நிலை இதுதான்.

    RépondreSupprimer
    Réponses
    1. "முடிவு மனதை கணக்க வைத்து விட்டது நண்பரே... இன்றைய அவல நிலை இதுதான்."
      KILLERGEE Devakottai,
      தங்களது பின்னூட்டம் ஊட்டத்தையும், ஊக்கத்தையும் உயர்ந்தளிக்கின்றது!
      ஏற்று உழைப்பினை உயர்வடையச் செய்ய முல்கின்றேன் நண்பரே . நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்? மனதைக் கனக்கச் செய்த வரிகள்! எதிர்பாராத திருப்பத்தோடு கதை அருமை!

    RépondreSupprimer
    Réponses





    1. நன்றி!
      வலைச்சரம் ஆசிரியை அவர்களே!
      வருகைக்கு மிக்க நன்றி!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நல்ல கதை புதுவை வேலு அவர்களே.
    ஏன் அனைவரும் ஒரே மாதிரி இருட்டறை வாழ்கையை பற்றியே பேசுகிறார்கள் ?
    கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில், பிள்ளைகள் பள்ளிக்கு காலை சென்று மாலை திரும்பும் சுழ்நிலையில், பெரியோர்கள் வீட்டில் தனியாக பாதுகாப்பும் இல்லாமல், பொழுதுபோக்கும் இல்லாமல், இருட்டறையில் வாழ்வதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. இதைவிட முதியோர் இல்லம் எவ்வளவோ மேல். இப்படியும் வரதன் நினைத்து இருக்கலாம் அல்லவா ?
    நன்று.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      "ஏன் அனைவரும் ஒரே மாதிரி இருட்டறை வாழ்கையை பற்றியே பேசுகிறார்கள்?"

      சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள்!
      அதுபோல் சமூகமும், சமூகம் சார்ந்த குடும்பமும் இருட்டறை ஆகி விடுமோ என்ற அச்சத்தால் இருக்கலாமோ என்னவோ?
      இருட்டறையில் இணையும் வாழ்க்கைக்கு வாடிக்கையாளராக போய் விடும் பட்சத்தில்தான் இதுபோன்ற இழி நிலைகள் ஏற்புடையதாக மாறி வருகிறது என்று எண்ணுகிறேன்.

      மேலும், உறவுகளின் முகம் பார்த்து அகம் மறைத்து வாழவே
      பல முதியோர் இல்லத்தை விரும்புகிறார்கள்.

      "கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில், பிள்ளைகள் பள்ளிக்கு காலை சென்று மாலை திரும்பும் சுழ்நிலையில், பெரியோர்கள் வீட்டில் தனியாக பாதுகாப்பும் இல்லாமல், பொழுதுபோக்கும் இல்லாமல், இருட்டறையில் வாழ்வதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. இதைவிட முதியோர் இல்லம் எவ்வளவோ மேல். இப்படியும் வரதன் நினைத்து இருக்கலாம் அல்லவா ?"

      சரி நண்பரே !

      அப்படியாயின் "ஆதரவற்ற முதியோர் இல்லம்" என்று ஏன் பெயர் வந்தது?

      வாழ்வின் இரு பக்கத்தையும் பார்த்து கருத்திடும் தன்மை போற்றுதலுக்குரியது.
      நற்கருத்தை துணிவுடன் வழங்கிய நண்பரை போற்றுகிறேன்.
      தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. ஆதரவற்ற முதியோர் இல்லம் என்பது, என் கருத்தில் அனாதை விடுதி போன்றது. அவர்களுக்கு வாழ்வாதாரமே இல்லை. இதில் மத அரசியல் இருக்க வாய்ப்பு இருக்க சாத்தியமே.(யோசித்து பார்த்தல் தெரியும் - யார் நடத்துகிறார்கள் என்று)
      கதைப்படி வரதன் ஒருவன் இருக்கிறான். ஆதரவற்ற வார்த்தை உடைகிறது. தன்னை விட பெற்றோராவது நிம்மதியாக பொழுதை கழிக்கலாம் என்று நினைக்கலாம் அல்லவா, புதுவை வேலு அவர்களே.

      sattia vingadassamy

      Supprimer
    3. வரதனின் நிலைக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம் என்று சொன்னதன் மூலம்
      என்னை விட அதிகம் நித்திரை இல்லாமல் சிந்த்திப்பீர்கள் போல் உள்ளதே! நண்பரே!
      நண்பரே உள் நோக்கத்துடன் செய்யும் தொண்டுக்கு என்ன பெயர்?
      சிந்திக்க வைத்து விட்டீர்கள்! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. Réponses

    1. "கலங்காதிரு மனமே" பாடலை எங்களுக்கு தந்து
      கலக்கத்தை போக்குங்களேன்! வார்த்தைச் சித்தரே!
      உண்மையை உரைத்தது உங்கள் கருத்து!
      வருகைக்கு நன்றி! தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. கதையின் முடிவு மனதை தொட்டது. பழையபடி கூட்டுக் குடும்ப வாழ்க்கை வந்தால் இந்த அவலம் இருக்காது.

    RépondreSupprimer

  15. பழையபடி கூட்டுக் குடும்ப வாழ்க்கை வர வேண்டும்
    வந்தால் வையகம் வளம் பெறும் மேலும் நலம் பெறும்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. மனதைத் தொட்ட கதை. பல வீடுகளில் இந்நிலை தான் இன்று.

    RépondreSupprimer
  17. உண்மை நண்பரே!
    உள்ளதை சொல்லி உள்ளத்தை தொடவே இந்த முயற்சி!
    அயற்சியை அழித்தது தங்களது தவறாத வருகை! இன்பம்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  18. என்னுடைய வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

    RépondreSupprimer
    Réponses

    1. வாழ்த்தியமைவது வளர் சிறப்பன்றோ
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  19. கதையின் முடிவில் மனது மிகவும் நொறுங்கி போனது.ஆனால் இன்றைய காலகட்டத்துக்கு கதையின் முடிவு மிகவும் பொருந்தும்.

    RépondreSupprimer
  20. " அவன் ஒரு குடையைத் தேடி",

    கதையினை ஆழ்ந்து படித்து, உள்வாங்கி உள்ளபடி உண்மை கருத்தை
    உரைத்தமைக்கு, நன்றி சகோதரி,
    இதை படித்து ஒரு சிலராவது பாடம் கற்றால் நலம்!

    தங்களது முதல் வருகைக்கு குழலின்னிசையின் நற்றமிழ் நல்வணக்கம்!
    வருக! குழலின்னிசையை தொடர்க!

    நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  21. கதையில் இடம் பெற்ற முதல் படத்தை வைத்தே முடிவு செய்து விட்டேன். கடைசியில்
    உள்ள தாய் பேசுவது போல் உள்ள வாசகம் கலங்க வைத்து விட்டது. இப்போது மகன்கள் வைத்துக் கொள்ள விருப்பபட்டாலும் தனியாக வாழ விரும்பும் பெற்றோர்களும் உண்டு.
    குழந்தைகள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்களுடன் போய் இருக்க முடியாதக் காரணத்தால் தனியாக இருப்பதற்கு இது போல் இடங்களில் முதியோர்கள் இணைந்து இருக்கிறார்கள். காலம் செய்யும் முடிவு இது.

    RépondreSupprimer
  22. நன்றி சகோதரி,
    சிறு கதையின் முடிவினை பாராட்டியமைக்கு,
    தொடர்க!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer