vendredi 13 février 2015

காதலர் தினம் (கவி மனம்)



 காதல்




முகம் பார்த்து

வரும் காதல்

மூழ்கிடும் கப்பலடா

மூடா!

அகம் பார்த்து

வரும் காதல்

முதுமை வரை வாழும்

உயிர்! மெய்'யடா

தோழா!




 



இதயத்தில்

உதயமாகும்

இயற்கை நிலைபாடு

காதல்








காதலின்

கருப்பொருள்

நேசம்!


ஊடலும்

கூடலும்

உட்பொருளாய்

அன்பினை

ஆழ்ந்து

அகம் மகிழ்ந்து

பேசும்!







இருமனம்

இரண்டற கலந்து

திருமணம் புரிந்து

வாழ வழி செய்யும்

காதலை!
வாழ்த்துவோம்!

இனிய இந்நாளில்

வாரீர்!


புதுவை வேலு

23 commentaires:

  1. நல்ல கவிதை.
    உண்மையான காதல் இந்தியாவில் இல்லை.
    இங்கு அது ஒரு விளையாட்டாய்ப் போய்விட்டது.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!

      விளையாட்டுக் காதலின் விபரீத போக்கை குறிப்பால்
      உணர்த்திய உயரிய கருத்தினை தந்தமைக்கு பாராடுக்களும்,
      நன்றிகளும்!

      மேலும் பதிவினை கூகுள் வரை கொண்டு சேர்த்தமைக்கும் மிக்க நன்றி!

      வருகை தொடர்க அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கவிதை அருமை நண்பரே
    இன்றைய காதல்
    முகம் பார்த்து வரும் காதல்தான்
    பெற்றோர் மனம் பதைபதைக்கச்
    செய்ய வரும் காதல்தான்

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள கரந்தையார் அவர்களே!

      இன்றைய காதலர்களின் நிலையினை
      பின்னூட்டக் கருத்ததாக பதிவு செய்து உள்ளீர்கள்!
      போற்றுகிறேன்!

      இனிய கருத்து இன்பம்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. “அகம் பார்த்து வரும் காதல் முதுமை வரை வாழும்”
    சரியாய் சொன்னீர்கள். கவியரசர் கண்ணதாசன் கூட
    ‘முழுமை பெற்ற காதல் எல்லாம்
    முதுமை வரை ஓடி வரும்’ என்று சொல்லியிருக்கிறார்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் அய்யா!

      கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரியினை

      ‘முழுமை பெற்ற காதல் எல்லாம்
      முதுமை வரை ஓடி வரும்’

      அறிய தந்தமைக்கும்

      எனது கவிதை வரியினை

      "அகம் பார்த்து வரும் காதல் முதுமை வரை வாழும்”

      சரியாய் சொன்னீர்கள். என்று பாராட்டி பின்னூட்டம் தந்தமைக்கும் நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
      வாருங்கள்!
      பின்னூட்டப் புயல் குழலின்னிசையை மையம் கொண்டு கருத்திட வந்தமைக்கு வார்த்தைச் சித்தருக்கு வழங்கி மகிழ்கின்றேன் நன்றியினை பரிசாக!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. "அகம் பார்த்து வரும் காதல் முதுமை வரை வாழும்" அருமை! உண்மையும் கூட!

    காதலர் தினத்திற்கான அருமையான கவிதை.வாழ்த்துக்கள்!
    நன்றி !

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      திருமதி ராஜாவின் ரோஜா அவர்களே!

      எண்ணற்ற பணிகளுக்கிடையே "குழலின்னிசை" பக்கம் வந்து
      ஊக்கம் தரும் உன்னதமான உயர்வான கருத்தினை தந்தமைக்கு
      நன்றி பாராட்டி வணங்குகிறேன்!

      "அகம் பார்த்து வரும் காதல் முதுமை வரை வாழும்" அருமை! உண்மையும் கூட!"
      உயர்வை தரும் பாராட்டு!

      குழலின்னிசைக்கு மேலான ஆதரவு தொடர்ந்து நல்கி வர வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. வணக்கம் சகோதரி!

      தங்களது அழகிய கருத்து
      ஆனந்தத்தை அள்ளித் தந்தது!
      அன்பிற்கு அளப்பறியா நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஒவ்வொரு கவிதையும் அருமை. வாருங்கள் அங்கேயும் கவிதை உண்டு.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சகோதரி!

      அருமை பாராட்டி பின்னூட்டம் இட்டமைக்கு இனிய நன்றி!

      தங்களது வலைப் பூ பக்கம் வந்து மலர்ச்செண்டு தந்தேன்!
      தங்களது நல்ல கவிதை கண்டு இன்புற்று!
      தொடர்க!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமை நண்பரே அனைத்து வரிகளும் பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா!
      நட்பைக் கூட கற்பை போல் கருதும் கில்லர்ஜி அவர்களே!
      வரிக்கு வரி பாராட்டை கவிதை வரிகளுக்கும் வழங்கியுள்ளீர்கள்.
      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    நாள் உணர்ந்து கவிதை புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன் அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் திரு ரூபன் அவர்களே!

      அறிய தரும் அடியேனின் சிறிய பதிவுகளை, படைப்புக்களை பாராட்டி
      தாங்கள் தரும் பின்னூட்டம் குழலின்னிசையை முன்னோட்டத்தை நோக்கி முந்தி செல்ல வழி வகுக்கும்.

      தங்களது கவிதை/சிறுகதை போட்டிகளுக்கு இயன்றால் குழலின்னிசையையும் இணைத்துக் கொள்ளலாமே?

      வருகைக்கும் வாழ்த்திற்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. வணக்கம் திரு சுப்பு தாத்தா அவர்களே!

      நல்ல கவிதை என்று நற்சான்றிதழ் நல்கியதை!
      நாமகளின் நல்லருள் பெற்ற நீங்கள் வழங்கியதை!
      நான் பெற்ற நற்பேராக கருதுகிறேன் அய்யா!

      வழி நடத்தி செல்லும் நல்லெண்ணமிக்க தங்களின்
      அன்பும் ஆதரவும் தொடர்ந்து குழலின்னிசைக்கு குவிய வேண்டும்
      என்று வேண்டுகிறேன்!

      மிக்க நன்றி!

      நமஸ்காரம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. உண்மை, ஆனால் பொய் கலந்த உண்மை, இல்லை இல்லை பொய், ஆனால் உண்மை கலந்த பொய், இல்லவேயில்லை, உண்மையே... மனம்படும் பாடு - புதுவை வேலு அவர்களே,

    sattia vingadassamy

    RépondreSupprimer
  12. நண்பர் சத்யா அவர்களே!

    தங்களது கருத்தின் கூற்று மெய்யா? அல்லது பொய்யா?

    பொய் கலந்த மெய்யை பெண்மை நேசிக்கும் என்பதைத்தான்
    இப்படிக் கூறுகிறீர்களோ?

    தங்கத்தோடு செப்பை சேர்த்து அழகிய
    ஆபரணங்களை வடிவமைப்பதை போன்று!

    மனம் படும் பாட்டை மாதவன் அறிவதைக் காட்டிலும்,
    மாதர் குலம் அறிவதன்றோ அன்பின் சிறப்பு!

    விழி எழுப்பும் வினாக்களுக்கு
    விடை தேடும் விந்தை ஒரு தொடர் கதை!

    வருகைக்கு நன்றி சத்யா அவர்களே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. காதலர் தினத்திற்கான சிறப்புக் கவிதை நன்று.

    பாராட்டுகள்.

    RépondreSupprimer