உலக மகளிர் தினம்
19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய
ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர்
திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டங்களின்
ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க்
என்னும் மன்னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்
ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, “உலக மகளிர் நாள்” என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு,
மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.
பெண்கள் பற்றிய பாரதியின் பாடல்கள்
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)
3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)
4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)
5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)
6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)
7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)
8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
பெண்களுக்கு வேண்டிய உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், இவையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத காலத்திற்கு முன் சிந்தித்த , தீர்க்க தரிசனமும், பெருமையும் பாரதியாரைச் சாரும்.
பெண்மை பெருமை குறித்து பாரதி:
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பநற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்!
"போற்றித்தாய்" எனத் தாளங்கள் கொட்டடா!
"போற்றித்தாய்’ எனப் பொற்குழல் ஊதடா!
காற்றிலேறி அவ்விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே...
எனப் பாடுவார்!
பெண்மை என்பது என்ன?
அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது, சூரப் பிள்ளைகளைப் பெறுவது, வலிமை சேர்ப்பது தனது முலைப் பாலால், மானஞ்சேர்க்கும் வார்த்தைகள், கலிஅழிப்பது, கைகள் கோர்த்துக் களித்து நிற்பது! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூற்றுப்படி சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் பாரதி.
"தையலை உயர்வு செய்" என்பது பாரதியின் புதிய ஆத்திசூடி.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் என அவர் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்துகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கும்மி அடிக்கின்றனர். எதைப் பாடி?
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி! என!
பெண்களின் நிலை ஒருவகையில் மேம்பட்டிருந்தாலும், இன்னும் நமது சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறைந்த பாடில்லை. தெருக்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் மகிழ்வோடும், அமைதியாகவும் இருக்க முடியாது அவதிப்படும் நிலை இன்னும் நீடிப்பது வேதனைக்குரியது.
அண்ணல் காந்தி அடிகள் கூறினார்: " நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது" என்று!
பெண்மையின்றி அமையாது பேர் உலகு
சங்க கால பெண்பாற் புலவர்கள் அரசர்களுக்கே அறம் உரைக்கும் ஆற்றல்மிகு
கவிதைகளை புனையும் துணிவினை அன்று பெற்றிருந்தனர். அத்தகைய ஆற்றலை மேம்படுத்தம் வகையில் ஆண் பெண் சமம் என்னும் சமத்துவம், கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, சுதந்திரம், மற்றும் 'அரசியல் அவைகளில்', சம நிலை கண்டு,
பெண்ணினம் பேர் உவகை புரிய,
"உலக மகளீர் தினத்தில் (மார்ச் 8) வாழ்த்துவோம் வாருங்கள்!
புதுவை வேலு
பட உதவி: (கூகுள், நன்றி: தி இந்து)
நன்னாளில் நல்ல பதிவு, அதிக செய்திகளுடன், நிறைவான கவிதையுடன். நன்றி.
RépondreSupprimer"உலக மகளிர் தினம்" நன்னாளில்,
Supprimerமுண்டாசுக் கவிஞரின் கவிதையை பாராட்டி,
முதலாவதாய் வந்திருந்து, முத்தமிழில்
பின்னூட்டம் இட்டமைக்கு
முண்டாசுக் கவிஞரின் கவிதையை பாராட்டி,
முதலாவதாய் வந்திருந்து,
முத்தமிழில் பின்னூட்டம் இட்டமைக்கு,
முனைவர் அய்யாவுக்கு,
நன்றி என்னும் நாரெடுத்து தொடுக்கின்றேன்
புகழ் மாலை!
நட்புடன்,
புதுவை வேலு
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரின்
Supprimerவாழ்த்து வாக்கு
தமிழ் மணம் வாக்கை போல்
தேக்காய் செழிக்கட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
நிறைவான பதிவு..
RépondreSupprimerமகளிர் பெருமை மேலோங்கட்டும்!..
"மகளிர் பெருமை மேலோங்கட்டும்!
Supprimerபெண்மையின் பெருமையை உலகறியும் செய்யும் வகையில்
நல்ல பதிவை (இன்று மார்ச் 8)
நீங்களும் தந்துள்ளீர்களே! அய்யா!
வாழ்த்துகள்!
வாழக வளமுடன்!
புதுவை வேலு
உலக மகளிர் தின வருகையொட்டி நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்..நன்றி
RépondreSupprimerவாழ்க வளமுடன்...
"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"
Supprimerவருகைக்கு வளமான நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
நகையணிந்த பெண்களை விடுங்கள் நகையில்லா பெண்களே தெருக்களில் நடமாட மடியவில்லையே..இன்றைய நாளில்...
RépondreSupprimer
Supprimer"நகையணிந்த பெண்களை விடுங்கள் நகையில்லா பெண்களே தெருக்களில் நடமாட முடியவில்லையே? இன்றைய நாளில்."
தோழரே!
பெண்களிடம் கற்பு என்னும் விலை மதிப்பற்றது உள்ளதே!
அண்ணல் காந்தி
மீண்டும் கில்லர்ஜி கனவில வந்து இதை சொன்னாலும் சொல்லுவார்!
நட்புடன்,
புதுவை வேலு
மகளீர் தினமான இன்று பெண்மையை போற்றும் வகையில் அருமையான பதிவு கொடுத்திருக்கீங்க சகோ.
RépondreSupprimerமகளிர் தினம் வருவதை முன்பே வரவேற்று மகிழும் வகையில்,
Supprimerதந்தீர் "சகோதரி!
"அசோகா அல்வா" அனைவருக்கும்.
வாழ்த்துக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இனிமையான பகிர்வு.
RépondreSupprimerமகளிர் தின நல்வாழ்த்துகள்.
தலை நகரில் சிலை உண்டு
Supprimerநம் பாரதிக்கு!
தலை நகரிலிருந்து
வாழ்த்தும் உண்டு!
என்று மகாகவியின் புகழ் மெய்ப் பட செய்தீர்!
உலக மகளிர் தின நன்னாளில் நன்று!
நட்புடன்,
புதுவை வேலு
பெண்ணின் பெருந்தக்க யாவுள
RépondreSupprimerஅருமை நண்பரே
பெண்ணின் பெருமை பேசுவது பெருமைதானே?
Supprimerஅருமை பேசும் கரந்தையாரே!
சிறப்புரைத்தீர் மகளிர் தினம் மகிழ்வுற!
நன்றியுடன்,
புதுவை வேலு
நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து செயல்பட முனைவோம். வாழ்த்துக்கள்
RépondreSupprimerவணக்கம் அய்யா!
Supprimer"நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து செயல்பட முனைவோம்"
ஒற்றுமைதான் நமது பலம்!
பற்றுடன் பணிந்து ஏற்றேன் அய்யா உமது கருத்தை!
வருகை சிறக்கட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
நல்லதொரு பகிர்வுப் பதிவு ஐயா! வாழ்த்துக்கள் ஐயா! தினமுமே பெண்கள் தினம்தான்!
RépondreSupprimerவருக! வருக! ஆசானே!
Supprimer"நல்லதொரு பகிர்வுப் பதிவு ஐயா! வாழ்த்துக்கள் ஐயா! தினமுமே பெண்கள் தினம்தான்!"
அய்யாவின் அருள்வாக்கு மெய்ப் பட வேண்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
எட்டையபுரத்தானின் நல்ல கவிதையோடு அருமையாக தந்தீர் நண்பா நன்றி.
RépondreSupprimerஇனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
தமிழ் மணத்தில் நுளைக்க 7
ஏறு நடை போட்டு
Supprimerஏழு நடை போட்டு
எட்டயபுரத்தானை என் தளம் வந்து
எடுத்துரைத்தாய் நற்கருத்து நண்பா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நீண்ட பதிவு !இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் ! த.8
RépondreSupprimerகவி ஈர்ப்பு சக்தி கொண்டு
Supprimerஅய்யாவை கொண்டு வந்து
சேர்த்து விட்டான்
முண்டாசுக் கவி பாரதி
குழலின்னிசையை கேட்டு மகிழ!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல பதிவு.
RépondreSupprimerசங்க கால பெண்பாற் புலவர்கள்
Supprimerஅரசன் நல்லாட்சி புரிந்திட
புகழ் கவிதை தந்தார்கள்
நற்ச்சொல் நலம் பயக்கட்டும் நன்னாளில்
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerஅனைத்துலக மகளிர் நாளன்று பொருத்தமாக தேசியக்கவி பாரதியாரின் பாடல்களை இணைத்தமைக்கு வாழ்த்துக்கள்!
கவி ஈர்ப்பு சக்தி கொண்டு
RépondreSupprimerஅய்யாவை கொண்டு வந்து
சேர்த்து விட்டான்
முண்டாசுக் கவி பாரதி
குழலின்னிசையை கேட்டு மகிழ!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வேண்டிய நாளில்
RépondreSupprimerசிந்திக்க வைக்கும் பதிவுகள்
Supprimerபா வாணரின் பா வரிகள்
மகளிர் தினம் நன்னாளுக்கு
நவின்றது நற்சிறப்பு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பெண்மையின்றி அமையாது பேர் உலகு என்று உண்மையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..
RépondreSupprimerஉறங்காத உண்மையை உலகிற்கு சொல்ல,
Supprimerமீண்டும் வந்தீரோ வலிப் போக்கரே!
வருகைக்கு மிக்க நன்றி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
பெண்களுக்கு மரியாதை கொடுத்து உண்மையான மதிப்பை பதிவு செய்த புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.
RépondreSupprimersattia vingadassamy
வணக்கம் நண்பர் சத்யா அவர்களே
Supprimerஉண்மையான மதிப்பினை உங்களை போன்றவர்களிடம்
நான் கற்றது அல்லவா?
வருகைக்கு வளமான நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இனிய பதிவு நன்றி சகோ
RépondreSupprimer"இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துகள்" சகோதரி,
Supprimerவருகைக்கும், பாராட்டு தெரிவித்தமைக்கும்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஜோரான பதிவு.
RépondreSupprimerவாருங்கள் மது.S அவர்களே!
RépondreSupprimerவணக்கம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்தில் புதுக் காரில்
வந்திறங்கி பதிவினை இட்டுவிட்டு வந்திருக்கும்
தங்களை வரவேற்கின்றேன்.
ஜோரான பதிவு என்று பாராட்டி,
ஜோராக கைதட்டியமைக்கு மிக்க நன்றி!
வருகை தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
பாரதியின் பாடல் வரிகள் செயல் வடிவம் கொண்ட விட்டன என்று சொல்லாம், முழுமையாக பெண் எப்படியுள்ளால்? பெண்மை முறையாக மதிக்கப்படனும் என்ற தங்களின் அவா ஈடேறட்டும் உண்மையாக, அந்நாள் நோக்கி,,,,,,,,,,,,,,,
RépondreSupprimer" பெண்மை முறையாக மதிக்கப்படனும் என்ற தங்களின் அவா ஈடேறட்டும் உண்மையாக!"
Supprimerஅவா ஈடேற அருள் வாக்கு தந்தீர் சகோதரி!
அதுபோல்
தமிழ் மணக்கும் வாக்கும் தந்திட்டால் நலம் பயக்கும்
நாள்தோறும்!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பாரதியாரின் பாடல்களோடு குழல் இன்னிசையில் நீங்கள் வாசித்த மகளிர் தினவாழ்த்துக்கள் அருமை!
RépondreSupprimer" எட்டுமணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை எல்லாம் கிடைத்த பெண்களுக்கு பாதுகாப்பும் கிடைத்தால் இன்னமும் சந்தோஷம்"
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக, ஒரு பெண் வந்தாலும்
Supprimerஅவருக்கும் பாதுகாப்பு தேவைபடுகிறதே! சகோதரி!
எனினும் விரைவில் சரியாகும் என்றே நம்புவோம்!
நம்பிக்கைதானே வாழ்க்கை!
"மகளிர் தினம் வாழ்த்துகள்"
நன்றியுடன்,
புதுவை வேலு