உலக வானிலை தினம்
மழை பெய்யுமா?
மேகம் மூட்டமா?
பனி பொழியுமா?
காற்று வீசுமா?
குளிர் அடிக்குமா?
வெய்யில் அடிக்குமா?
எப்படி நான் அறிவேன்?
வானிலை வகுப்பை
ஊடகத்தில்,
வானொலியில்,
இணையத்தில்,
நடத்தும்,
நடத்தும்,
வாத்தியாரே!
உன்னையன்றி !!!!
ஆம்!
உன்னையன்றி !!!!
எப்படி நான் அறிவேன்?
இன்று
!"உலக வானிலை தினம்"
(மார்ச் 23)!"உலக வானிலை தினம்"
வாத்தியாரின் யூகம் சிலசமயம் சரியே...!
RépondreSupprimerவருக! வார்த்தைச் சித்தரே!
Supprimerதற்போதெல்லாம் யூகங்களும், யாகங்களும்தான்
வாழ்வை தீர்மானிக்கிறதே பார்த்தீர்களா?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimer// வானிலை வகுப்பை
ஊடகத்தில்,
வானொலியில்,
இணையத்தில்,
நடத்தும்,
வாத்தியாரே!
உன்னையன்றி !!!!
ஆம்!
உன்னையன்றி !!!!
எப்படி நான் அறிவேன்//
இன்றைய நிலையில் அவருக்குக்கூட தெரியாது என்பதுதான் நிதர்சனம்.
வருக அய்யா!
Supprimerதற்போதெல்லாம் வாழ்வில் தெரியாததை
தெரிந்தவர்போல் காட்டிக்கொள்ளும் வாத்தியார்கள்தான் அதிகம்பேர் உள்ளனர் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்தந்த பருவகாலங்களில் என்ன நடக்கக் கூடும் என்று யூகித்துச் சொல்லும் திறன் உடையவர்கள் இப்போதும் இருக்கின்றார்களே!..
RépondreSupprimerஇயற்கையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால் போதும்!..
நற்றமிழ்க் கவிதை அழகு!..
வருக அருளாளரே!
Supprimerஇயற்கையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால்தான் இன்பம் அய்யா!
இயற்கையை போற்றுவோம்
இன்புற்று வாழ்வோம்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இயற்கையை உணர்ந்து கொண்ட மனிதர்கள் தமிழர்கள் அல்லவா
RépondreSupprimerதம+1
வருக கரந்தையாரே!
Supprimerஇயற்கையை உணர்ந்து கொண்ட மனிதர்கள் தமிழர்கள்
துன்பத்தை வெல்ல வேண்டுமாயின் இயற்கையின் தத்துவத்தை
தமிழர்கள் அனைவரும் தத்தெடுத்துக்கொள்வதே நன்று நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்தந்த பருவங்களில் சொல்லப் படும் அறிக்கைகளோரளவுக்குச் சரியாக இருக்கலாம்
RépondreSupprimerவருக அய்யா!
Supprimer(அந்தந்த பருவங்களில் சொல்லப் படும் அறிக்கைகள் ஓரளவிற்கு சரியாக இருக்கலாம்")
அறிவியல் அறிக்கைகள் வேண்டுமாயின் ஓரளவிற்கு சரியாக இருக்கலாம்.
ஆனால்?
அரசியல் அறிக்கைகள் சரியாக இருக்குமா?
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஇன்று விஞ்ஞானி சொல்லுகிறான் மழை வரும்மென்று ஆனால் அதற்கு முன்பே நம் தமிழர்கள் பஞ்சாங்கத்தைகண்டு பிடித்து விட்டார்கள் பஞ்சாங்கத்தின் வழியே விஞ்ஞானம் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக கவிஞரே!
Supprimerபஞ்சாங்கத்தின் பெருமையை சொல்லி பழம் பெருமை வாய்ந்த தமிழர்களின் சிறப்பை உணர்த்தியமைக்கு நன்றி!
இதையும்சிலர் "போ! பழைய பஞ்சாங்கம்"
என்று சொல்லுபவர்கள் உலவும் உலகம் இது!" கவிஞரே!
நன்றி! வருகைக்கும், வாக்கிற்கும்!
நட்புடன்,
புதுவை வேலு
ஒரு காலகட்டத்தில் வானொலி தகவலுக்காக ஏங்கிய மற்றும் எதிர்பார்த்த நேரம் மறக்க முடியாது புதுவை வேலு அவர்களே. நினைவு கூர்ந்த சிறப்பு அருமை.
RépondreSupprimersattia vingadassamy
வானொலி தகவல்கள் வலிமையானது அன்று!
Supprimerவானொலி பற்றிய தகவலே மெலிந்து போனது இன்று!
நினைவுகளில் நீந்தி வந்து, கருத்து சொன்ன சத்தியா அவர்களே
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மார்கோனிக்கு கால்தொட்டு வணங்குவோம்.
RépondreSupprimerஇவ்வழி இல்லையேல் அறிவு மேம்பட
இன்டர்நெட் இமெயில் ஏது
sattia vingadassamy
Supprimerஅறிவியலுக்கு அரியணை தந்தவர் மார்க்கோனி அவர்கள்
என்பதை மிகவும் வெகு சிறப்பாய் சொல்லி உள்ளீர்கள்
நண்பர் சத்தியா அவர்களே!
வருகைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வானிலை அறிவிப்பை முன்பு வானொலி யில் அறிவிக்கும் போதும் கேட்டோம், இப்போது டீவியில், இணையத்தில் எல்லாம் கேட்கிறோம், பார்க்கிறோம்.நல்ல கவிதை.
RépondreSupprimerஉலக வானிலை தினம்
Supprimerசிறப்புக்கு சிறப்பு செய்த கருத்து
தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வானிலை அறிக்கை நம் தொலைக்காட்சிகளில் பல சமய்ங்களில் மழை பெய்யக்கூடும், பெய்யாமல் போகும்...இப்படி சொல்லி புயல் மையம் கொண்டுள்ளது என்று சொல்லப்படும் ஆனால் அன்று புயல் இருக்கவே இருக்காது....மழை என்று சொல்லப்படும் பெய்யாது...எத்தனை எத்தனை தொழில்னுட்பம் வந்தாலும் இன்னும் நமது நாட்டில் மிகச் சரியாகக் கணிப்பதில்லை....பார்க்கப்போனால் அது பல சமய்ங்களில் கேலிக்குறியதாகின்றது....ஒரு படத்தில் கூட..மதன் பாபு இரண்டு விரலைக் காட்டி ஒன்றைத் தொடச் சொல்லுவார். வானிலை அறிக்கைச் சொல்லுவதில்...ஆனால் வெளினாட்டில், மேற்கத்தியநாடுகளில் மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு அறிவிக்கின்றார்களே!! மனிதனுக்கு ஆறறிவு இருந்தாலும் மிகத் துல்லியமாக வானிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப தங்களைத் த்யார்படுத்திக் கொள்ளும் அறிவுத் திறன் வாய் பேசா விலங்கினங்களுக்கு உண்டு.....உதாரணமாக நிலநடுக்கம்/சுனாமி வரும் என்று தெரிந்தால் மீன் தொட்டியில் இருக்கும் மீன் கள் கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொள்ளுமாம்....அதற்காகவே ஜப்பானில் வீட்டில் மீன் தொட்டிகள் வைத்திருப்பார்களாம்......
RépondreSupprimerவாருங்கள் ஆசானே!
Supprimerநல்ல தகவல்களை இந்த இனிய நாளில்
தந்து உள்ளீர்கள்!
மனிதனுக்கு ஆறறிவு இருந்தாலும், மிகத் துல்லியமாக வானிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் அறிவுத் திறன், வாய் பேசா விலங்கினங்களுக்கு உண்டு.
உண்மைதான் அய்யா!
வருகைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு