samedi 28 mars 2015

சிகரம் தொட்ட சிங்கம் லீ குவான் யூ




 நெஞ்சம் மறப்பதில்லை






சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைந்த  லீ குவான் யூவிற்கு மரியாதை செலுத்தும் வகையில்இந்தியா முழுவதும்இன்று 29/03/2015 ஆம் தேதி துக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

குவான் யூவின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று,
இந்தியா முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.  அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற வில்லை. மேலும்,  லீயின் இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்கிறார்.  சிங்கப்பூரை நிர்மானித்தவர் எனப் புகழப்படும் 91 வயதான லீ,  அந்நாட்டு அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தியவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 23/03/2015 ஆம் தேதி அவர் இறந்தார்.

சிங்கப்பூரை நிர்மானித்தவர் எனப் புகழப்படும் 91 வயதான லீஅந்நாட்டு அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தியவர். 



1)       (மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்த லீ க்வான் யூ | நாள்: டிசம்பர் 18 1978- நன்றி: பட உதவி தி இந்து)





லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை அவர் ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றினார். 

சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 77 விழுக்காடுமலாய் இனத்தவர்கள் 14 விழுக்காடுதமிழர்கள் 6 விழுக்காடு இருந்து வருகிறார்கள். 



ஆயினும்சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம்மலாய், ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் பிரதமர் லீ குவான் யூ அரசமைப்புச் சட்டத்தை வகுத்தார். 

தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களை
வரவேற்றவர்தமிழுக்கு மிகவும் மதிப்புத் தந்தவர் லீ குவான் யூ. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.



     ( காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு, லண்டன் பக்கிங்கம் அரண்மனையில் நடந்த விருந்தில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் உரையாடும் லீ க்வான் யூ. அருகில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. | நாள்: ஜனவரி 7, 1969 - நன்றி: பட உதவி தி இந்து) 




மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு அகலாத,
புகழால் பேரின்ப பேரொளியாக ஒளி வீசுவார்
லீ குவான் யூ. 

புதுவை வேலு



43 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    உண்மைதான் மண்ணை விட்டு மறைந்தாலும் மனிதர்களின் மனதை விட்டு நீங்க வில்லை...சிங்கப்பூரின் தந்தை.... அருமையாக சொல்லியுள்ளீர்கள் தகவல் ஒவ்வொன்றும் எனக்கு புதியது.. பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றிய லீ குவான் யூ அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கருத்தினை வடித்த
      கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
      வாக்கினை வழங்கிய உள்ளத்தை வரவேற்கின்றேன்.
      மீண்டும் வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. லீ குவான் யூ அவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்... சிறப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம், இந்த வரிசையில் நமது தாய் மொழியாம் "தமிழையும்" இணைத்து பெருமை சேர்த்த,
      பிரதமர் லீ குவான் யூ அவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர் என்ற கருத்தினை சொன்ன வார்த்தைச் சித்தர் தனபாலன் அவர்களே! உங்களது
      வாக்கு வலிமையானது! (த ம )வாக்கினை போலே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. எண்ணற்ற வீரர்களின் விளைநிலம்! தங்களது வலைத் தளம் கரந்தையாரே!
      அந்த வகையில் தாங்கள் செலுத்திய அஞ்சலி வணக்கத்திற்குரியது!
      தங்களது வருகையும் வாக்கும் தேக்காய் மணக்கும்.
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் திரு லீ குவான் யூ அவர்கள் பற்றிய தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! அனைத்துலக தமிழர்களோடு சேர்ந்து நானும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களை போன்ற தமிழர்களின் சிந்தையில்
      சிஙப்பூரின் தந்தை நிற்கின்றார் என்று எண்ணும்போது
      சிலென்று சிறப்பு வந்து மேனியை தழுவுகிறது
      அய்யா நடன சபாபதி அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Anna with LKY photo has been never known..

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மை உரைக் கல் போன்றது!
      அதில் தீட்டப் பெறும் கருத்துக்கள் யாவும்,
      பட்டைத் தீட்டிய வைரமாய் ஜொலிக்கும்.
      அத்தகைய உண்மையை கருத்தாய் வடித்த உமது உண்மை பெயரும்
      அறிய வலம் வருதல் மிகவும் சிறப்பு அல்லவா!
      வாருங்கள்! வரவேற்கின்றேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிறப்பான பதிவு.

    RépondreSupprimer
    Réponses
    1. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு அகலாத,
      லீ குவான் யூ பதிவினை சிறப்பாக்கி, கருத்து சிற்பத்தை வடித்த
      சகோதரி அனிதா சிவா அவர்களுக்கு நன்றி!
      வருகை வசந்தம்! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நாளிதழ்களில் இவரைப் பற்றிப் படித்தேன். உண்மையில் பெரிய சாதனையாளர்தான். பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சிங்கப்பூரின் சிற்பி என்று அழைக்கப்படும் லீ குவான் யூ,மறைவுக்கு சிங்கப்பூர் தாண்டி உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.
      ஒரு குட்டி நாட்டின் தலைவருக்கு உலகம் உண்மையான மரியாதையை செலுத்தி வருவது சிறந்ததொரு நடைமுறை நாகரீகம் என்பதனை நாம் அறிவோம் முனைவர் அய்யா அவர்களே!
      சிங்கப்பூரின் நகரங்களில் எங்கு பார்த்தாலும் படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் லீயின் புகழ் பூக்கள் மணம் வீசுகின்றன!
      வருகை சிறப்பு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இலங்கையில் மகிந்த ராஜபக்ச, தனக்கு எதிரான சக்திகளை அரசியல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஊடகங்களின் மேல் கட்டுப்பாடுகளை விதித்தார். எதிர்த்துப் பேசியவர்களை சிறையில் அடைத்தார் அல்லது காணாமல் போகச் செய்தார். சிங்கப்பூரில் லீகுவான்யூவும் அதையே தான் செய்தார். இன்றைக்கும் அங்கே எந்த ஊடகமும் லீயை விமர்சித்து எழுத முடியாது. பார்க்க...http://kalaiy.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D த.ம8.வரிசை

    RépondreSupprimer
    Réponses

    1. தோழரே!
      தங்களது கருத்து சிந்தனை சிறகை விரித்து இன்னும் பல திசைகளை நோக்கி பயணிக்க செய்கிறது.இருப்பினும் சிங்கப்பூரில் லீகுவான்யூ தமிழுக்கும்
      தமிழர்களுக்கும் செய்த சிறப்பினை நாம் மறப்பின் கோமாவின் கோ மகன்களாகி விடுவோம் தோழரே!
      வருகையும் வாக்கும் சிறப்பு, சூரியனின் சிகப்பு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. திரு லீ குவான் யூ அவர்கள் பற்றிய தகவல்களை தெரியப் படுத்தியமைக்கு நன்றி! சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. லீ குவான் யூ, இறுதிச் சடங்கின் போது ,
      அவரது உடலை யாரும் செல்போன் மூலம் போட்டோ எடுக்க வேண்டாம்!
      அதற்கு பதிலாக, சல்யூட் பண்ணுங்க! என்று சொல்லும் வாசகம் அடங்கிய படம் ஒன்று ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது.
      இந்த படம் பதிவிடப்பட்ட 11 மணிநேரத்தில் 10000 பேரால் பகிரப்பட்டுள்ளது. 10,000 லைக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பினை பெற்ற அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்; வாக்கும், கருத்தும் தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. சகோதரி!
      தங்களது வருகையும் வாக்கும் தேக்காய் மணக்கும்.
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. திரு லீ குவான் யூ அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
    தமிழ் மணம் 11

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா!
      உங்க வீட்டுல விசேஷத்துக்கு
      மொய்யை மட்டும் கொடுத்துபுட்டு கருத்து சொல்லாம ஜகா வாங்கினதுக்குஒரு மெகா டோஸ் கொடுங்க நண்பா§
      மொய்யும் வைச்சிபுட்டு, விருந்தும் சாப்பிட்டுவிட்டு, கருத்தும் சொல்லிய கருமை மீசை கில்லர்ஜி அண்ணாச்சிக்கு!
      எனது அண்ணாச்சி பழம் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. Ce commentaire a été supprimé par l'auteur.

      Supprimer
    3. நண்பா!
      உங்க வீட்டுல விசேஷத்துக்கு
      மொய்யை மட்டும் கொடுத்துபுட்டு கருத்து சொல்லாம ஜகா வாங்கினதுக்குஒரு மெகா டோஸ் கொடுங்க நண்பா§
      மொய்யும் வைச்சிபுட்டு, விருந்தும் சாப்பிட்டுவிட்டு, கருத்தும் சொல்லிய கருமை மீசை கில்லர்ஜி அண்ணாச்சிக்கு!
      எனது அண்ணாச்சி பழம் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    4. நண்பா!
      உங்க வீட்டுல விசேஷத்துக்கு
      மொய்யை மட்டும் கொடுத்துபுட்டு கருத்து சொல்லாம ஜகா வாங்கினதுக்குஒரு மெகா டோஸ் கொடுங்க நண்பா§
      மொய்யும் வைச்சிபுட்டு, விருந்தும் சாப்பிட்டுவிட்டு, கருத்தும் சொல்லிய கருமை மீசை கில்லர்ஜி அண்ணாச்சிக்கு!
      எனது அண்ணாச்சி பழம் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    5. நண்பா!
      உங்க வீட்டுல விசேஷத்துக்கு
      மொய்யை மட்டும் கொடுத்துபுட்டு கருத்து சொல்லாம ஜகா வாங்கினதுக்குஒரு மெகா டோஸ் கொடுங்க நண்பா§
      மொய்யும் வைச்சிபுட்டு, விருந்தும் சாப்பிட்டுவிட்டு, கருத்தும் சொல்லிய கருமை மீசை கில்லர்ஜி அண்ணாச்சிக்கு!
      எனது அண்ணாச்சி பழம் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு அகலாத,தலைவர்!
    உண்மைதான்!

    RépondreSupprimer
    Réponses
    1. மனதை விட்டு அகலாத கருத்தின் மூலம் சிறப்பு அஞ்சலி செய்துள்ளீர்கள்
      புலவரே!
      உமது வருகையும், வாக்கும் பலத்தின் பாதுகாவலன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஆம் ஐயா! லீ குவான் யூ மிகச் சிறந்த ஆளுமை வாய்ந்த மனிதர்! மிகச் சிறிய தீவான சிங்கப்பூர் இன்று வளத்துடன் இருக்கின்றது என்றால் அதுவும் எந்தவித பிரச்சினைகளும் அதிகம் இல்லாமல் மிகவும் அமைதியாக....முதற் காரணம் இம் மாமனிதர் தான். நாங்கள் நிறைய வாசித்திருக்கின்றோம் இவரைப் பற்றியும், சிங்கப்பூரின் வளர்ச்சி பற்றியும்! நிச்சயமாக நாம் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்! நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. மிகச் சிறந்த ஆளுமை வாய்ந்த மனிதராக திகழ்ந்த
      லீ குவான் யூ
      பற்றிய கருத்துக்களை அற்புதமாக தந்துள்ளீர்கள் ஆசானே!
      வருகைக்கும் வாக்கிற்கும் இனிய நன்றி அய்யா!
      நட்புடன்
      புதுவை வேலு

      Supprimer
  14. நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பு அருமை. அதேபோல் அரிய படங்கள் கோர்வை மிக சிறப்பு. லீ குவான் யூ அவர்களின் தகவலை படித்து தெரிந்து கொண்டேன். சிறந்த பதிவு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. "லீ குவான் யூ" நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பினை போற்றி,
      அருங்கருத்தினை அருளிய அருமை நண்பர் சத்யா அவர்களுக்கு
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. நம்ம நாட்டுக்கும் ஒரு லீ குவான் யூ கிடைக்க மாட்டாரா என்று கேட்கும் அளவிற்கு சிங்கப்பூரை தலை நிமிரச் செய்தவர் ,அவர் புகழ் உடம்பு என்றும் வாழும் !

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மையான பாராட்டுக்களை உள்ளன்போடு பகிர்ந்தளித்த "பகவான்ஜி" க்கு மிக்க நன்றி!
      நபுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அருமையான தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்து,
      சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார,
      ஜனநாயக நாடாக மாற்றிய சிந்தனை சிற்பி! அத்தகைய,
      அருந்தலைவருக்கு அருள் நேசரான தங்களது அஞ்சலி மேலும்
      பெருமை சேர்க்கட்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. மாமனிதர் லீ குவான் யூ அவர்களுக்கு அஞ்சலி..

    RépondreSupprimer
    Réponses
    1. லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்து,
      சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார,
      ஜனநாயக நாடாக மாற்றிய சிந்தனை சிற்பி! அத்தகைய,
      அருந்தலைவருக்கு அருள் நேசரான தங்களது அஞ்சலி மேலும்
      பெருமை சேர்க்கட்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. திரு. லீ குவான் யூ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

    RépondreSupprimer
  19. சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம் இவற்றோடு
    தமிழ் பொழியையும் ,ஆட்சி மொழியாக உருவாக்கிய உன்னத தலைவருக்கு,
    உகந்த மரியாதையை அஞ்சலியின் மூலம் செய்துள்ளீர்கள் சகோதரி!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  20. சிங்கப்பூரை சீர்திருத்திய சிங்கத்தை பற்றி தெளிவாக தந்தமைக்கு நன்றி.!!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer