வீழ்வதற்கல்ல வாழ்க்கை - உங்கள் நல விரும்பிகளை அறிவீர்களா?
என்னது ! உங்கள் நல விரும்பிகளை இன்னமும் உங்களால் அடையாளம் காண முடியவில்லையா?
வாழ்த்துகிறவர்கள் வேறு ! நல விரும்பிகள் வேறு!
பதருக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.
ஆனால்? மனிதப் பதர்களை, மனிதர்கள், இன்னும் சரி வர அடையாளம் காணாதவர்களாய் இருக்கின்றனர்.
பதரா ? நெல்லா ? என்று அறிய முடியாதவர்களாய், போலி முகத்துடன்,
நம் முன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
நாமும், இவர்களது ஆஸ்கர் நடிப்பில், அசந்து போகிறோம்.
சோதனை, பிரச்னை என்று வரும் போது தான், இவர்களது முகமூடி விலகி, முகச் சாயம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
இப்படி திரைகள் விலகி, அவர்களது உண்மையான சொரூபம் தெரியும் போது, 'சே... இவர்களுடனா இவ்வளவு நாள் கை கோர்த்து நடந்தோம்...' என்கிற வெறுப்பும் சேர்ந்து கொள்கிறது.
இது தவிர, ஏதேனும் இவர்கள் வழியே நாம் இழந்திருந்தால், இவ்வருத்தம் பெருக்கல் குறியால் பெருக்கப்பட்டு, பன்மடங்காகிறது.
பாலா, கள்ளா, சுண்ணாம்பு நீரா ? என்று பிரித்தறியா நம் குற்றத்திற்கு, இன்னும் எவ்வளவு நாள் தான் விலை கொடுத்துக் கொண்டே இருப்பது?
துன்பம் ஒன்றை சந்திக்கிறீர்களா ? அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்போது, 'உனக்கு நல்லா வேணும்...' என்று உள்ளூர மகிழ்பவர்களை அடையாளம் காண முற்படுங்கள்.
'நாங்களெல்லாம் எதுக்கு இருக்கோம்...
நீ ஒண்ணும் கவலைப்படாதே...' என்று முன் வருபவர்களை, உங்கள் நெஞ்சு லாக்கரில் வைத்துப் பூட்டுங்கள்.
சிறப்பு, பெருமை என, ஏதேனும் உங்களை வந்து சேருகின்றனவா? அதையும் சொல்லி விடுங்கள். 'போயும் போயும் உனக்கா இந்தப் பெருமை ! இது, அடுக்கவே அடுக்காது...' என்று தங்களையும் அறியாமல் மறைமுகமாகச் சொல்பவர்களை ஓரங்கட்டுங்கள்.
உங்களுக்கு அடுத்தபடியாக
மகிழ்கின்றனரா... அவர்களை நெஞ்சாங்கூட்டில் வைத்துப் போற்றுங்கள்.
பெருமை, புகழில் மட்டும் இணைந்து கொள்பவர்கள், சோதனை காலத்தில் உடன் நிற்கின்றனரா என்று உன்னியுங்கள்.
இன்று, நீங்கள் யாரால் இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்களை உயர்த்தி விட்ட ஏணிப்படிகள் யார் ? யார் ? என, இவர்களையும் பட்டியலிடுங்கள். இப்படிப் பத்துப் பேர்களையாவது தேற்றுங்கள்.
நம் நல விரும்பிகளை அடையாளம் காணாமல், எல்லாரையும் ஒன்று போல் நடத்தினால், இருவித தவறுகள் நிகழக் கூடும்.
ஒன்று... நல விரும்பிகளை அங்கீகரிக்கத் தவறி விடுவதன் மூலம், இவர்கள் விலகி நின்று , நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவர்.
இரண்டாவது... நமக்கு ஒன்று என்றால், யாரிடம் போய் நிற்பது என்று மயங்கி நிற்க வேண்டி வரும்.
அதனால்?
"கூழாங்கற்களையும் வைரக்
கற்களையும்" ஒன்றாக குவித்து வைத்து வேடிக்கை பார்த்தது! போதும்.
பிரித்தெடுங்கள்; போற்றுங்கள்!
பகிர்வு: புதுவை வேலு
நன்றி: (தினமலர் /லேனா தமிழ்வாணன்.)
கூழாங்கற்களையும் வைரக் கற்களையும் ஒன்றாகப் பார்க்க மாட்டேன்.
RépondreSupprimerஅனுபவம் பேசுகிறது அய்யா!
Supprimerஇதை அடுத்தவருக்கும் பகிர்ந்தளிதால் நலமாகும்.
அன்னப் பறவை அய்யா அவர்களுக்கு அன்பார்ந்த நன்றி
வருகைக்கும், கருத்தையே வாக்காக தந்தமைக்கும் மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உதவுகிறேன் என்று சொல்பவர்கள் செய்வதில்லை... செய்பவர்கள் சொல்வதில்லை...
RépondreSupprimerம்... பல அனுபவங்கள்...!
ஆம்... முற்றிலும் உண்மை...இதை யாரும் புரிந்து கொள்ளாமல் வாய் வார்த்தையைத் தான் முதலில் நம்பி விடுகிறார்கள். பேச்சில் மயங்கி விடுகிறார்கள்.
Supprimerவாருங்கள் வைர வார்த்தைச் சித்தர் அவர்களே!
Supprimerசொல்லாமலே செய்வதால்தான் கோஹினூர் வைராய் சிலர் ஜொலிக்கிறார்கள்.
இத்தகைய வைரங்கள் சில இப்பொழுது எனது பாக்கெட்டில் பதுங்கி உள்ளது!
ஜொலிப்பின் வெளிச்சத்தை உள்வாங்கிக் கொண்டு!
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
// "கூழாங்கற்களையும் வைரக் கற்களையும்" ஒன்றாக குவித்து வைத்து வேடிக்கை பார்த்தது! போதும்.
RépondreSupprimerபிரித்தெடுங்கள்; போற்றுங்கள்!//
அருமையான பகிர்வு. நன்றி.
தலை நகரம் தந்த தகுதிமிகு கருத்து பின்னூட்டம், ஜொலிக்கட்டும் ஜோராக!
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு. நமது நலம் விரும்பிகளை கண்டுகொண்டால் நாளை நம்தே என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerஇன்று என்பது சில கூழாங்கற்களிடம் அல்லவா சிக்குண்டு இருக்கிறது அய்யாவே!
Supprimerநாளை நமதே என்று சொல்லுவதைக் காட்டிலும்,
இந்த நாளும் நமதே! என்று சொல்லுவதுதான்
மிகவும் பொருத்தமாக இருக்கும்
என்பதே எனது கருத்தாகும்!
பாராட்டுக்கும் வருகைக்கும் வளமான நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உங்களுக்கு மிகப்பிடித்த பாடல்தான்...
RépondreSupprimerஎப்படி விட்டீர்கள் என்று தெரியவில்லை...
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா !
..........................................................
..........................................................
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது
.............................................
............................................
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா!“
சக்கரவர்த்தித்திருமகன் படத்தில் எம்ஜிஆர் பாடுவதாக வரும் பாட்டல்லவா?
நீங்க மறக்கலாமா?
நன்றி
த ம நான் கு.
சக்கரவர்த்தி திருமகள் படத்தின் பாடலை
Supprimerஎழுத்தின் சக்கரவர்த்தி அய்யா அவர்களே சொல்லட்டுமே!
அதுதானே சிறப்பு அய்யா!
உறங்கும் போது பானைகளை ....
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள்
நன்றி அய்யா! பாடலை,
நினைவில் நீந்தி வரச் செய்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
நலம் விரும்பிகளை கண்டு பிடிப்பது சாதாரண செயலாகத் தெரியவில்லை,
RépondreSupprimerகண்டுபிடித்துவிட்டோமானால், வாழ்வு இனிமையே
அருமையான பதிவு நண்பரே
நன்றி
தம +1
நலம் விரும்பிகள் நாடி வந்து நலம் பயப்பார்கள் நண்பரே!
Supprimerபலம் தரும் எழுத்துக்கள் உம்மிடம் இருக்கையிலே ,
நாடி மட்டுமல்ல , ஓடியும் வருவார்கள்!
வருகைக்கு நன்றி கரந்தையாரே!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மைதான் எல்லோரையும் ஒன்று போல் பாவிப்பதில் சிரமம் இருக்கிறது ...
RépondreSupprimerசிறப்பான பகிர்வு. நன்றி.
உன்னதமான உண்மையினை பதிவில் சொல்லி வரும்
Supprimerஉங்களது உள்ளக் கருத்து குழலின்னிசைக்கு பெருமை சேர்க்கட்டும்
நன்றி வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும்
சகோதரி கௌசல்யா ராஜ் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு, கண்டுபிடிப்பது தான் முடியல,
RépondreSupprimerவிழிப்புணர்வு மிக்கவர்கள் பெண்கள்
Supprimerஅதிலும் படிப்பறிவும் சேர்ந்து விட்டால்
சொல்லவும் வேண்டுமோ?
துப்பறியும் தூரிகை எடுத்து
வைரத்தை இனங்கண்டு
என்னை போன்றவர்களுக்கு
சொல்ல மாட்டீர்களா என்ன?
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...மகேஷ்வரி சொன்னது போல் கண்டு பிடிக்கத்தான் முடியல...தம் +1
RépondreSupprimerஉண்மை உமையாள் காயத்ரி அவர்களே
Supprimerவிழிப்புணர்வு மிக்கவர்கள் பெண்கள்
அதிலும் படிப்பறிவும் சேர்ந்து விட்டால்
சொல்லவும் வேண்டுமோ?
துப்பறியும் தூரிகை எடுத்து
வைரத்தை இனங்கண்டு
என்னை போன்றவர்களுக்கு
சொல்ல மாட்டீர்களா என்ன?
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஎல்லோரையும் சிந்திக்கவைக்கும் பதிவு.. கண்டு பிடிப்பது கடினந்தான் பகிர்வுக்கு நன்றி
த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே!
Supprimerகுணம் நாடி குற்றமும் நாடி
இனம் காண முயலுவோம்
இத்தகைய மனிதர்களை!
வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே நானும் கூட வெளுத்ததெல்லாம் MILK என்று நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறேன்.
RépondreSupprimerதமிழ் மணம் 8
Supprimerநண்பா!
மீசை மில்க் ஆனால்
நரைத்து விட்டது என்று பொருள்!
இன்னமும் குமரன் கணக்கா குந்திக்கிட்டு இருந்தா எப்படி?
நண்பா!
தத்துவத்தை உணர்ந்து விட்டீர்களே ஆனால் இனி ஏமாற்றம்
குறைவாகத் தான் இருக்கும்.
எட்டாத தூரத்தில் இருந்து கொண்டு (த ம 8) எட்டு போட்டமைக்கு
ஏணியில் ஏறி வந்து சொல்லுவேன் நன்றியினை!
நட்புடன்,
புதுவை வேலு
பள்ளியில் - நீதி போதனை வகுப்பில் அமர்ந்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..
RépondreSupprimerஅருமையான பதிவு.. வாழ்க நலம்!..
Supprimer"வாழ்த்தும் நலம்" உள்ள வரை
உள்ளலவும் போற்றும் உலகு!
நீதி வகுப்பினை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்கையில் எவ்வளவு அடிபட்டாலும், இந்த நலம் விரும்பிகளைத்தான் கண்டுப்பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏமாந்து தான் போக வேண்டியிருக்கிறது
RépondreSupprimerநிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
Supprimerஅது அழிவதில்லை காலடிகள்பட்டு - நீ
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் - இங்கு
நடப்பது நலமாய் நடந்துவிடும்
நண்பர் சொக்கரே இந்த வரிகளை பின்பற்றி வாழுங்கள்
ஏமாற்றாத்தில் இருந்து விடுபடுவதற்கு இதுவும் ஒரு வழியே!
நண்பரே நல்ல செய்தி வந்ததா?
புதிய பணியில் அமர்ந்து விட்டீர்களா? இல்லையாயின்,
தேடுங்கள் கண்டு அடைவீர்கள்§
மீண்டும் வருக!
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி நண்பரே.
Supprimerஇன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.
கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அருமையான பதிவு! நலம் விரும்பிகள் யாராவது எங்களை சுற்றி இருக்கிறாா்களா என தேடி பாா்க்கிறேன் ..
RépondreSupprimerஎன்ன சகோதரி!
Supprimerஇவ்வளவு பக்கத்தில் 92 நிமிட பயணம்தான்! இருந்தாலும்,
பாதாளம் வரை சென்று தேடுவீர்கள் போல் உள்ளதே?
நலம் விரும்பிகள் புலம் பெயர்ந்து போவதற்குள் தேடி
கண்டுபிடித்து விடுங்கள்.
கண்டதும் தகவல் அனுப்புங்கள் வைரத்தில் எனக்கும் பாதி பங்கு
வையுங்கள் சரியா?
வருகைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நலம் விரும்பிகளைப் பிரித்து ஆராய வேண்டியதில்லை ,ஆராய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் நலம் விரும்பிகள் இல்லை :)
RépondreSupprimerத .ம.9
உண்மைதான் பகவான் ஜீ
RépondreSupprimerநலம் விரும்பிகளை முதன் முதலில் எப்படி அறிவது என்று சொன்னால் நலம் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerஒரு சமயம், கீழ்குறிப்பிடுவதை எங்கேயோ படித்ததாக ஞாபகம் !
" நண்பனைப்போல் 1. பணக்காரன், அதிகாரம் உள்ளவன், கிடைத்தால் அடிவருட தயார். 2. அறிவாளி கிடைத்தால் ஜால்ரா அடிக்க தயார். 3. முண்டம், அப்பாவி கிடைத்தால் முதுகில் ஏற தயார். 4. உண்மையான நண்பன் கிடைத்தால், நம்மிடம் நடிக்கிறானோ என்ற சந்தேகத்தில், சமயம் கிடைக்கும்போதேல்லாம் இளிக்கவும் + மறைந்து வாழவும் தயார்."
ஒருவர் மேல் நம்பிக்கையும், உண்மையான மனநிறைவான அன்புடன் இருந்தாலொழிய, நட்பு என்னும் சொல்லுக்கு விடை தெரியும்.
sattia vingadassamy
நட்புக்குரிய நல்ல இலக்கணம்,
RépondreSupprimerநான்கு வகை காரண காரணிகளால் நல்ல தெளிவு பிறக்கட்டும்
என்ற எண்ணத்தை எழுத்தாய் வடித்த நண்பர் சத்யாவின் கருத்தூட்டமானது
கூழாங்கல் மனிதர்களை கூறுபோட்டு கூவத்தில் வீசியதை போன்று
தங்களின் கூற்றில் தெரிகிறது நல்ல கூர்மை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
"கூழாங்கற்களையும் வைரக் கற்களையும்" ஒன்றாக குவித்து வைத்து வேடிக்கை பார்த்தது! போதும்.
RépondreSupprimerபிரித்தெடுங்கள்; போற்றுங்கள்!//
மிக அருமையான வரிகளுடனான பதிவு. ஆனால் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் ஆயிற்றே! போலிகளும் இருப்பதால்.....