அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!
அமுது செய்ய அடியெடுத்து வருவாயோ?
அச்சுமலர் பாதம் பதித்து மகிழ்வாயோ?
அழகு மயில்பீலி சூடிய மணவாளா
அகிலம் அகம்மகிழ வா! கார்வண்ணா!
அச்சுமலர் பாதம் பதித்து மகிழ்வாயோ?
அழகு மயில்பீலி சூடிய மணவாளா
அகிலம் அகம்மகிழ வா! கார்வண்ணா!
கார்வண்ண மேனி மணிவண்ணா!
கவர்ந்திழுப்பாய் கோபியரை கோவிந்தா
குருவாயூரில் குடியிருப்பாய் மாதவா
குறையொன்றும் இல்லாத கீதை நாயகா!
நாயகா யதுகுல நந்த கோபாலா
நலம் தருவாய் மாய மதுசூதனா
நாலாயிர திவ்விய பிரபந்தம்- ராசலீலா
நாராயண நம்பியின் புகழ் பாடும்
பாடும் பாவைத் தமிழ் தந்த கோதை
சூடும் மலர் மாலை தரித்த பரந்தாமா!
காரிருள் நீக்கும் கதிரவனாய் கண்ணா
பேரருள் புரியவா! கலியுகக் கண்ணா!
பேரருள் புரியவா! கலியுகக் கண்ணா!
புதுவை வேலு
அன்பர்களே!
இந்த பாடலை யூ டியுப் ல் கேட்டு மகிழுங்கள்!
நன்றி திரு சுப்பு தாத்தா
இந்த பாடலை யூ டியுப் ல் கேட்டு மகிழுங்கள்!
நன்றி திரு சுப்பு தாத்தா
கீதையின் நாயகன் நாமம் எல்லாம் பகவான் தான்! இனிய கிருஸ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
தங்களுக்கு பிடித்தமான முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer"கண்ணன் பிறந்தான்" இந்த நாளில் அருமையான அந்தாதி பாடலைப் பாடி மகிழ்வித்தீர்கள்...! ஓ... இதே நாளில்தான் சர்வபள்ளி இராதகிருஷ்ணன் பிறந்தாரோ...!
கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!!புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!மன்னன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!!மனக் கவலைகள் மறந்ததம்மா!கவியரசர் கண்ணதாசனுடைய பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன.
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு....
வாழ்த்துகள்
த.ம.2
அன்புள்ள அய்யா!
Supprimerஎழுத முடியாத நிலையிலும்,
மிகவும் சிரமம் பட்டு ஒரு கையாலே தட்டச்சு செய்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய தங்களது உள்ளார்ந்த அன்புக்கு இனிய நன்றி!
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
கிருஷ்ண ஜெயந்தி கவிதை அருமை. வாழ்த்துக்கள்! இதை வெண்பாவாக மாற்றுங்களேன்.
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பாடலைக் கேட்டேன். அகமகிழ்ந்தேன். நல்ல கவிதை, நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உரிய நாளில் அருமை கவிதை!
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் சகோ.
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே தாத்தாவும் அருமையாக பாடியுள்ளார்
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
புகைப்படங்கள் அனைத்தும் அருமை புதுவையாரே,
RépondreSupprimerபா வரிகள் அருமை,
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கண்ணனுக்கு எழுதிய பாட்டு அருமை.
RépondreSupprimerகண்ணன் ஜெயந்தி கொண்டாடுவோம்.
புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
sattia vingadassamy
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வரிகளும் படங்களும் அருமை! வாழ்த்துகள் ஐயா!
RépondreSupprimerவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerகண்ணனின் புல்லாங்குழல் இசையாய் வந்தீர்கள்
முதல் மரியாதையை
பெற்றுக் கொள்ளுங்களேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு