உலக தற்கொலை தடுப்பு தினம் (10/09/2015)
ஆறறிவு பெரிது பெரிது பெரிதுயிரே !
உயிரை மாய்க்கும் உரிமை உனக்கில்லை
உணர்ந்தால் உனக்கு வானமே எல்லை!
மன அழுத்தம் மரணத்தை துரத்தும்,
மனதின் சுமையை இறக்கி விடு!
இயலாமை ‘இழிவு’க்கு இறுதித் தீயை
இதய நெருப்பில் மூட்டி விடு!
விழிப்புணர்வு விழிகளில்வழிய நிறையட்டும்
தற்கொலை தவறு ! மனதில் மறையட்டும்
'தோல்வி தோணி'யும் அறிவெனும் துடுப்பால்
வாழ்வியல் கரையை கடக்கட்டும்!!!
அருமையான விளிப்புணர்வு பதிவு நண்பரே... பதிவுகளைத் தொடர வாழ்த்துகள்.
RépondreSupprimerஇவன் எப்போது கடையை கட்டுவான் என்று எதிர்பார்ப்போர் மத்தியில்...
Supprimerபதிவை தொடர வாழ்த்திய உள்ளம் வாழிய நண்பா!
நலம் குன்றியிருந்தாலும் பலம் பெற்று விட்டேன் தங்களைப் போன்றோர் அன்பின் வாழ்த்தினால்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே தங்களுக்கு மின்ஞசல் அனுப்புவோம் என்று ஆயத்தமாகும் பொழுதுதான் தங்களின் பதிவு கண்டேன் மகிழ்ச்சி பிறகு வருவோம் என்று போய் விட்டேன் கொஞ்சம் வேலைப்பளு...
Supprimerஅருமையான விழிப்புணர்வுக்கவி.
RépondreSupprimerதங்களை சந்திக்க நேரம் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
Supprimerவருகைக்கும், வாக்கிற்கும் நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
"மனதின் சுமையை இறக்கி விடு" அருமை.
RépondreSupprimerஅனைத்திற்கும் மனதே காரணம்.
தன்னம்பிக்கை ஊட்டும் விழிப்புணர்வு வரிகள்.
சிறப்பு புதுவை வேலு அவர்களே.
வாழ்த்துக்கள்.
sattia vingadassamy
Supprimerவணக்கம் நண்பர் சத்யா அவர்களே!
சத்தியமான வரிகள்
சத்யா பாராட்டியிருப்பது வெகு பொருத்தம்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மை
RépondreSupprimerநாடி வந்து நற்கருத்து நாளும் நல்கி வரும் நண்பர் நாகேந்திர பாரதிக்கு எனது வணக்கமும், நன்றியும்!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மனச்சுமையை நம் உணர்வைப் புரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வது நலம் பயக்கும். அருமையான விழிப்புணர்வுப் பதிவு.
RépondreSupprimerநன்னெறிமிக்க வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி முனைவர் அய்யா!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான விழிப்புணர்வுப் பதிவு
RépondreSupprimerநன்றி நண்பரே
தம +1
பதிவை சிறப்பித்தமைக்கு நன்றி கரந்தையாரே!
Supprimerதொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
// உயிரை மாய்க்கும் உரிமை உனக்கில்லை
RépondreSupprimerஉணர்ந்தால் மனிதா !வானமே உனக்கெல்லை!//
அருமை! அருமை.!!
இரண்டாம் வரி ‘உணர்ந்தால் மனிதா உனக்கு வானமே எல்லை!’ என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நேர்பட, நெறிபட திருத்தும் உள்ளத்திற்கு உளமான நன்றி அய்யா!
Supprimerவருகையும் கருத்தும் வளப்படுத்தும். நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான விழிப்புணர்வு கவிதை சகோ..
RépondreSupprimerசகோதரியே வணக்கம்!
Supprimer"விழிப்புணர்வு கவிதை"க்கு என்ன செய்து அசத்தப் போகிறீர்கள்!
அழைப்புக்கு காத்திருக்கிறேன். தங்களது வருகை என்றாலே
எனக்கு உணவு மணியோசை உரக்கக் கேட்கும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் புதுவையாரே
RépondreSupprimerதற்கொலை தவறு ! மனதில் மறையட்டும்
உண்மைதான்,,,,,,
தங்கள் வரிகள் அருமை,
வாழ்த்துக்கள்.
வாருங்கள் சகோதரியே!
RépondreSupprimerநினைவில் நிற்கும் நிமிடம்
தங்களது வருகையும், பின்னூட்டமும்!
நன்றி! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவணக்கம்!
Supprimerதங்களது வருகையும், பின்னூட்டமும்! நினைவில் நிற்கும்.
நன்றி! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! ஐயா!
RépondreSupprimerஉளமான நன்றி அய்யா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு