இன்று! அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு
இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள்.
இன்றைக்கும் வரலாற்று
சிறப்புமிக்க கதாபாத்திரங்களான,
கர்ணன்,
கட்டபொம்மன்,
பாரதி,
வ.உ.சி
போன்றவர்களை
நினைக்கும்போது,
நமது விழித் திரை
விலகியதும், வீர வசனம் பேசியபடி காட்சித் தருபவர் யார் தெரியுமா?
செவாலியே சிவாஜிதான் நமக்கு
காட்சி தருவார்! ஞாபகத்தும் வருவார். அந்தந்த கதாபாத்திரமாகவே
மாறி நடிக்கும் வாழ்வியல் கலைஞர் நடிகர் திலகம் அவர்கள்.
கால அகராதியில் ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல், திரை உலக அகராதியில், நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல
வேண்டும்.
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்’
என்று பியானோ
வாசித்துக்கொண்டே வாயசைத்து பாடிய நடிகர்
திலகம் அவர்களுக்கு, "தமிழக அரசு"
‘மணி மண்டபம்’ கட்ட முயற்சி எடுத்து அறிவித்திருப்பது அவரது பிறந்த
நாள் பரிசாகவே நாம் கருதி மகிழ்வோம். மணிமண்டப நாயகன் புகழ் என்றும் நிலைத்து
நிற்கும்.
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
சிவாஜி
நடிப்புக்கு படிப்பு
சொல்லி தந்த
"படிக்காத மேதை"
‘நாம் பிறந்த மண்’ணில்
நடிகர் திலகம்
பிறந்த நாள்
அக்டோபர் ‘முதல் தேதி’
"திருவிளையாடல்"
சிவன் அருளாலும்,
"திருமால் பெருமை"
நாராயணன் அருளாலும்,
‘படையப்பா’
பிரம்மா! அருளாலும்,
இவரது "கௌரவம்"
ஓங்கி நிற்கும்!
மண்ணில் மறையாது
புகழ் குறையாது !
அன்றும்! இன்றும்!
என்றும்!
"தெய்வ மகன்"
படத்தின்மூலம்,
ஆஸ்கார் விருதையே!
ஆச்சரியப் பட வைக்கத்
தெரிந்த
இவருக்கு! அரசியலில் மட்டும்,
நடிக்கத் தெரியாதது!
ஏனோ? தெரியவில்லை பராபரமே!!!
உணர்வுமிக்க நடிப்பின்
மூலம் நடிப்பின் இமயத்தை தொட்டவர்
சிவாஜி கணேசன் அவர்கள் என்பதில் மாற்றுக்
கருத்துக்கு இடமேது?
புதுவை வேலு
நன்றி:இணையம்/you tube
அருமை
RépondreSupprimerஇன்று வெற்றி பெறும் ஒவ்வொரு நடிகர் நடிப்பிலும் சிவாஜியின் நடிப்பின் சாயல் இழையோடும் என்பது இயல்பே!
Supprimer"சிகரத்தை தொட்ட சிவாஜி"க்கு முதல் வருகை தந்து, சிறப்பித்து கருத்திட்ட தங்களுக்கு இனிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மையில் சி.மு., சி.பி.தான். ஹாம்லெட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்றோரையும் நம் முன் கொண்டுவந்து நிறுத்தியவரல்லவா இவர்? நடிகர் திலகத்திற்கு ஈடு நடிகர் திலகமே.
RépondreSupprimerஉண்மைதான் முனைவர் அய்யா!
Supprimerஈடு இணையற்ற நடிகர் சிவாஜி!
வருகைக்கும், கருத்து பின்னுட்டத்திற்கும் நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
எனது முதல் தளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண அழைக்கிறேன்.
RépondreSupprimerhttp://www.ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html
அழைப்புக்கு அன்பு நன்றி!
Supprimerதொடர்கிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
நடிப்புக் கலையின் பல்கலைக்கழகம்,,,,,
RépondreSupprimerபகிர்வுக்கு நன்றிகள் ,,,,
நல்லதொரு பல்கலைக் கழகம்
Supprimerகணேசன் பல்கலைக் கழகம்.
ஆம் சகோதரி!
நடிப்பின் பல்கலைக் கழகம் "சிவாஜி கணேசன்"தான்
என்ற கருத்தினை பதிவு செய்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நடிகர் திலகம் அவர்களுக்கு இணையாக இன்னொரு நடிகர் இனி வரப்போவதில்லை. அவரது பிறந்த நாளில் அவரை நினைக்க வைத்தமைக்கு நன்றி!
RépondreSupprimerவணக்கம் அய்யா!
Supprimerபுதுவை வானொலியில் நிலைய நாடக நடிகராக நான் தேர்வாவனதற்கு முக்கிய காரணம் சிவாஜியின் நடிப்பும் அவர் பேசிய வரலாற்று சிறப்புமிக்க வசனங்களுமே எனக்கு ஊக்க சக்தியையும், வெற்றியையும் அப்போது தேடி தந்ததது என்பதை நான் இங்கு தங்கள் வாயிலாக நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவேதான் இது போன்ற பதிவுகளை குழலின்னிசை வெளியிட்டு மகிழ்வுறுகிறது.
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
சிவாஜி,சிவாஜிதான்
RépondreSupprimerசிம்மக் குரல் சிவாஜிக்கு பெருமை சேர்க்க வந்த அய்யாவின் வருகைக்கு
Supprimerகுழலின்னிசையின் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மைதான்!
RépondreSupprimerஉண்மையை உரக்க சொல்லிய புலவர் அய்யாவின் பின்னூட்டத்திற்கு
Supprimerவணக்கத்திற்குரிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
திரு. சிவாஜி கணேசன் அவர்களை ஒரு சிறந்த நடிகர் என்பதிஸ் யாருக்கும் எள்முளையளவும் ஐயமிருக்காது அந்த வகையில் (மட்டும்) அவரை பாராட்டுவோம் நன்றி நண்பரே...
RépondreSupprimerநண்பா வணக்கம்!
Supprimerஇந்த பதிவின் நோக்கத்தைப் பற்றிய விளக்கம் அய்யா வே.நடனசபாபதி அவர்களின் பின்னுட்டத்திற்கு மறுமொழி தந்துள்ளேன்! காணவும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
திரு சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம்...... தினத்திற்கான சிறப்புப் பகிர்வு நன்று.
RépondreSupprimerசிவாஜி பற்றிய சிறப்பு பதிவுக்கு சிறப்பான வருகை தந்து சிறப்பித்த நண்பருக்கு
RépondreSupprimerஇனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு