உலகம் போற்றும் தமிழின் தலை சிறந்த பாடலாசிரியர்கள் வரிசையில், கலைமகள் தந்த தமிழ்
ஓலையை உள்வாங்கி படித்து, தனது பகுத்தறிவு கொள்கையை அதனுள் இணைத்து, இதயத்தை கொள்ளை கொள்ளும் பாடல்களை எழுதி
பாராட்டுக்களை பெற்ற கவிஞரை,
அவர் பிறந்த இந்நாளில் (25/09/1899), அவரது புகழ் பெற்ற பாடல்களை பகிர்ந்து, மகிழ்வோம்!
அதுசரி! யார் அந்த கவிஞர்?
அவர்தான் "உடுமலை நாராயண கவி"
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி அவர்கள்
இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும்
மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம்
படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.
நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு தன்னை கவிஞர் இனமென்று அடையாளம்
காட்டிக் கொண்டவர். சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக்
கருத்துக்களைப் பரப்பியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம்
எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும், கலைஞர் கதை வசனம் எழுதிய பராசக்தி மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.
நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான "பராசக்தி" படத்தில் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனன் இசையில் இவர் எழுதிய பாடல்
இதோ:
கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போட ஓடிவாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப் பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்கள் அழகான வாயால் பண்ணாக
பாடுவீங்க
காகா வென ஒன்னாக கூடுறீங்க
வாங்க கா கா கா
சாபாடில்லாம தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத கஞ்சி தண்ணி ஊத்துங்க...
என்றல் தாபால போடுறாங்க பாருங்க...
அந்த சண்டாளர் எங்கவே... தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ...
எச்சிலை
தனிலே எரியும் சோற்றுக்கு.
பிச்சைகாரர்
சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே!
படுஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரை
பாக்காதிங்க...
பட்சம இருங்க... பகிர்ந்துண்டு வாழுங்க...
பழகத்த மாத்தாதீங்க...
எங்க பாடுங்க ... கா கா கா.
"உடுமலை நாராயண கவி".
மக்கள் மனத்தில் நேர்மையையும், நாணயத்தையும் வளர்ப்பதற்கு
‘விவசாயி’ என்ற திரைப் படத்தின் மூலம் உடுமலை நாராயண கவி,
K.V. மகாதேவன் இசையில் இவர் எழுதிய பாடல் இதோ:
உடுமலை நாராயணகவியி
மக்கள் மனத்தில் நேர்மையையும், நாணயத்தையும் வளர்ப்பதற்கு
‘விவசாயி’ என்ற திரைப் படத்தின் மூலம் உடுமலை நாராயண கவி,
K.V. மகாதேவன் இசையில் இவர் எழுதிய பாடல் இதோ:
நல்ல நல்ல நிலம்
பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
(நல்ல…)
பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
(நல்ல…)
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாத
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
(நல்ல…)
பார் முழுதும் மனிதக்குலப்
பணபுதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
(நல்ல…)
என்ற கருத்தை வலியுறுத்தினார்.
முதல்
தேதி என்ற படத்தில்
“ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம்
- இருபத்
தொண்ணுல
இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம்”
என்ற பாடலின் மூலம்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்தினார்.
என்ற பாடலின் மூலம்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்தினார்.
"டாக்டர்
சாவித்திரி"
-என்ற திரைப்படத்தில்
“காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற
காலம்
மாறிப் போச்சு – இப்ப
ஊசியைப்
போட்டா உண்டாகுமென்ற
உண்மை
தெரிஞ்சு போச்சு”
போன்ற திரைப்படப் பாடல்களின்
மூலம் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில்
பரப்பினார்.
“கல்வியைப் போலொரு செல்வம் உள்ளே
காணவேணும்
புவியோரே”
என்ற பாடலின் மூலம்,
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
என்ற பாடலின் மூலம்,
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
விசுவாமித்திரர்
-என்ற திரைப் படத்தில்
-என்ற திரைப் படத்தில்
“மோட்ச லோகம் கண்டதற்கு
சாட்சியம்
உண்டா?
உங்கள்
மூளையைக் குழப்பிவிட்ட
ஆளையும்
கொண்டா?”
என்ற
பாடலையும் தந்தவர்.
உடுமலை நாராயணகவி அவர்களை திராவிட மரபுத் திரைப்பட தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், இயக்குநர்கள், நடிகர்கள் போன்றோர்
ஊக்குவித்தார்கள்.
கலைஞர் அவர்கள் “உடுமலை நாராயணகவி அவர்கள் வெறும் சினிமா கவிஞர் மட்டுமல்லர், அவர் ஒரு சிந்தனை
கவிஞர். பாமர மக்களின் உள்ளத்திலே பதியத்தக்க அளவிற்கு அவர் கருத்துக்களை
எடுத்துச் சொன்னவர். மேலும், கலைவாணரும், உடுமலை நாராயணகவியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியை
உண்டாக்கினார்கள். தமிழர் தந்த அரிமா கவிஞர்” என்று இவரை புகழ்கின்றார்.
பட்டம்:
1967-இல் சங்கீத நாடகச் சங்கத்தால் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதிபதி கோகுல கிருட்டினன் இவருக்கு “சாகித்யா ரத்னாகர்” என்னும் பட்டத்தை அளித்தார்.
தெருக்கூத்து, தெம்மாங்கு, வில்லுப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி, வழி நடைச் சிந்து, நாடகப் பாடல் இலாவணி, வண்டிக்காரன்பாட்டு, பள்ளுப்பாட்டு, தேசிங்கு ராசன் பாடல், குறத்திப் பாட்டு, குறவஞ்சி, கோமாளிப் பாட்டு என்று அனைத்து நாட்டுப்புறப் பாடல் வடிவங்களையும் திரைப்படங்களுக்காகப் பயன்படுத்திய உடுமலை நாராயணகவி அவர்கள் கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி, மனித நேயர் என பன்முகங்களோடு விளங்கிய பண்பாளர் உடுமலையார்.
மறைவு:
23.05.1981-இல் பூளவாடியில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இந்திய அரசு அவரது நினைவை போற்றும் வகையில் 31.12.2008 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு 2001-ஆம் ஆண்டு கோயம்புத்தூர்
மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணக்கவி அவர்களின் மணி மண்டபத்தைத் கலைஞர்
திறந்து வைத்தார்.
இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
கவிஞர் என்பவர் தான் சார்ந்துள்ள சமூகம் மேன்மை அடைய சீர்மையுற
சமுதாய அக்கறையுடன் தன் சிந்தனைகளை பாடலாக்கி மக்களை செம்மைப்படுத்த வேண்டும்.
அந்த வகையில் உடுமலையார் மனித வாழ்வுக்குரிய நெறிமுறைகளை தனது
திரைப்படப் பாடல்கள் மூலம் இவர் வெளிப்படுத்தினார்.
காலம் உள்ளவரை அவரது கருத்துக்கள் என்றென்றும் நம்மோடு நிலைத்து வழிகாட்டும்.
புதுவை வேலு
( படங்கள்: இணையம்)
உடுமலை நாராயண கவியின் நினைவினைப் போற்றுவோம்
RépondreSupprimerதம +1
வாருங்கள் கரந்தையாரே!
Supprimerவணக்கம்!
முதல் வருகை தந்து பதிவுக்கு சிறப்பு செய்தமைக்கும்,
வருகைக்கும், பகுத்தறிவு கவிராயர் அவர்களை பாராட்டி கருத்து வழங்கியமைக்கும் இனிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerகாலத்தால் அழியாத பாடல்களைத் தந்த உடுமலை நாராயணக்கவி அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! அவருக்கு பகுத்தறிவு கவிராயர் என்ற பட்டமும் உண்டு
வாருங்கள் அய்யா!
RépondreSupprimerஉடுமலை நாராயணக்கவி அவர்களை பற்றிய கூடுதல் தகவலை வழங்கியமைக்கும், வருகைக்கும், கருத்து வழங்கி சிறப்பித்தமைக்கும், சிறப்பான நன்றி திரு வே.நடனசபாபதி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல மனிதரைப்பற்றி நல்ல ஆக்கத்தொகுப்புக்கு நன்றி நண்பரே
RépondreSupprimerகவிஞர்கள் சாவடைந்ததாக வரலாறு கிடையாது
RépondreSupprimerகாலத்தால் அழியாத பாடல்களைத் தந்த
அறிஞர் உடுமலை நாராயணக்கவி என்றும்
நினைவில் வாழ்கின்றார்.
http://www.ypvnpubs.com/
இம் மாமனிதர்கள் எல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள்.
RépondreSupprimerபகிர்வுக்கு நன்றி.
சிறப்பான கவிஞரைப் பற்றிய தகவல்கள்..... நன்றி நண்பரே.
RépondreSupprimerஉடுமலை நாராயண கவி பற்றிய சிறந்த தொகுப்புரை அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
உடுமலை நாராயணக்கவியைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறிந்தோம். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள். நன்றி.
RépondreSupprimerதமிழ் திரையுலகில் மறக்க முடியாத கவிஞர் உடுமலை நாராயணகவி. திரைப்பட பாடல்கள் மட்டுமன்றி பல நல்ல தமிழ் கவிதைகளையும் தமிழ் உலகிற்கு தந்தவர். அவரது பிறந்த தினமான இன்று (உங்கள் பதிவைப் பார்த்த பின்னரே எனக்கு தெரிய வந்தது) அவரைப் பற்றிய நல்லதோர் தகவல் தொகுப்பினை வழங்கியதற்கு நன்றி.
RépondreSupprimerநல்ல தமிழ் மொழி பாடல்கள் படித்தேன்.
RépondreSupprimerவணக்கம்
RépondreSupprimerஐயா
அறியாத தகவலை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள் ஐயா. த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerநன்றி! கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimerஉடுமலை நாராயணகவியைப் பற்றி பிறந்தநாளில் அவரது பாடல்களுடன் விளக்கி அவரது நினைவைப் போற்றியது அருமை.
த.ம. 9.
நன்றி! அய்யா,
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
மிக நல்ல படைப்பு பாராட்டு
RépondreSupprimer