கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘கொடுமுடி கோகிலம்’ என்று புகழப்
பட்ட தமிழ் இசை அரசி கே.பி சுந்தராம்பாள் அவர்கள் அகிலத்தை விட்டு மறைந்த தினம்.
தமிழின் "உச்சஸ்தாயி" என்று
சொல்லப் படும் தமிழ் இசைத் தாய்
கே.பி சுந்தராம்பாள் அவர்களை அவரது நினைவு
நாளில் நாமும்
நினைவு கொள்வோமே!!!
தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என பலதுறைகளிலும் புகழின் உச்சத்தை தொட்டவர் “கே.பி.எஸ்’ அவர்கள்.
கே.பி.சுந்தராம்பாளுக்குக் கிடைத்த குரல்
ஒரு வரப்பிரசாதம் எனலாம். இது போன்ற ஒரு குரல் தமிழக இசை வரலாற்றில் யாருக்கும்
கிடையாது என்றே சொல்லுவார்கள். பாட்டுலகில் பாடும் வல்லமையை அவர் தனக்குத் தானே
வளர்த்துக்கொண்டவர். மேலும், விருத்தங்களை 'ராகமாலிகை'களில் பாடிப் புகழ் பெற்றவர் திருச்செந்தூர் சண்முகவடிவு
என்பவரிடமிருந்தே இம்முறையை கே.பி.எஸ். கற்றாராம்.
கே.பி சுந்தராம்பாள் நாலரைக் கட்டை
ஸ்ருதியில் பாடுவது வழக்கம். பொதுவாக, பாடகர்கள் மெல்ல மெல்ல முயன்று உச்சஸ்தாயியில் நிலை
கொண்டு பாடுவார்கள் ஆனால், இவரோ எடுத்த எடுப்பிலேயே அந்த இடத்துக்குச்
சென்றுவிடுவார். இதற்குக் காரணம், நாடக மேடைதான் அவருக்கு கை கொடுத்தது என்பார்கள். வள்ளி
திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற
நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.
“கே.பி.எஸ். அந்தக் காலத்தில்
கும்பகோணத்தில் நாடகத்தில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மைல் தூரம் கேட்கும்” - நடிகர் சாரங்கபாணி என்பவரின் அனுபவக்
கருத்து இது!
கே.பி சுந்தராம்பாள் பாடலில் மட்டும்தான்
சொல் சுத்தம், பொருள் தெரிந்து பாடும் அழகை நம் அனைவராலும் கேட்க முடிகிறது.
முந்தைய காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, போன்ற வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.
கர்மவீரர் காமராசர் அவர்கள் அவரது ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு
சட்டமன்ற மேலவை உறுப்பினராக இவரை அமர்த்தி சிறப்பு செய்தார்
இறை பக்தி மிகுந்த இவர் ஒருபோதும் தன்னிலை மறவாதவர், மாறாதவர் என்பதற்கு ஒரு நிகழ்வு எடுத்துக் காட்டு.
ஒரு முறை தமிழ் திரைப்படம் ஒன்றிற்கு இவர் பாடல் பாட சென்றபோது....
அன்று கொள்ளும் அரசின் ஆணை
வென்று விட்டது !!
நின்று கொல்லும் தெய்வம் எங்கோ
சென்று விட்டது!
என்ற பாடல்வரிகளை பாட மறுத்து திரும்பி சென்றவர்.
பின்பு இதே பாடலை...
அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது !!
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது !!
அன்று கொல்லும் அரசின் ஆணை
வென்று விட்டது !!
நின்று கொல்லும் தெய்வம் இங்கே
வந்து விட்டது !!
என்று பாடலாசிரியர் பாடலின் வரிகளை மாற்றி எழுதிய பிறகு அந்த பாடலை பாடியவர் கே.பி.எஸ் அவர்கள்.
அந்த பாடலாசிரியர் யார் தெரியுமா?
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
படத்தின் பெயர். பூம்புகார்
கவுந்தி அடிகளாக அந்த படத்தில் நடித்தவர் கே.பி.எஸ்.
இவர் நடித்த படங்கள் :
நந்தனார், மணிமேகலை,
ஒளவையார், திருவிளையாடல்,
கந்தன் கருணை,
மகாகவி காளிதாஸ், பூம்புகார், உயிர் மேல் ஆசை, துணைவன், காரைக்கால் அம்மையார்,
சக்திலீலை,
திருமலை தென்குமரி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
விருதுகளும் சிறப்புகளும்:
இசைப்பேரறிஞர் விருது, 1966 வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
பத்மஸ்ரீ, 1970; வழங்கியது: இந்திய அரசு
சிறந்த தேசிய பின்னணிப் பாடகர் - பெண், திரைப்படம் - துணைவன் 1969;
கர்நாடக இசையில் எம். எஸ்., எம். எல். வி., பட்டம்மாள் என்ற மூன்று பெண் பாடகர்கள் முன்னிறுத்தப்
பட்டிருந்த கால கட்டத்தில், அவர்களையும் தாண்டி தனக்கென ஒரு தனிப் பாணியையும், நிகரில்லா குரல் வளத்தையும் கொண்டிருந்தார் திருமதி கே.
பி. சுந்தராம்பாள் அவர்கள்.
முருகனிடத்தில் எல்லையில்லா பக்தி கொண்டு
தனக்கென ஒரு கொள்கை வகுத்து அதன்படி உலகம் மெச்ச வாழ்ந்தவர். ஆண் வேடங்களில்
நடித்திருந்தாலும் கே. பி. எஸ். என்றவுடன் ஔவையார் நினைவு தான் நம் மனதில் எழும்.
ஒரு பெண்ணாக, பெண்களுக்குப் பல அறிவுரைகள் சொன்னவர். சொன்னது
மட்டுமல்ல, தானே வாழ்ந்தும் காட்டியவர்.
இசை இலக்கணம் தெரியாதவர்களையும் தமிழ்
என்னும் தாளக் கட்டுக்குள் நம்மையெல்லாம் கட்டிப் போட்டவர் இவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
கே.பி.எஸ். அவர்களின குரல் சாகா வரம்
பெற்றது. அவரைப் போல ஒரு கலைஞரை தமிழகம் இனி பெறப் போவதில்லை.
பகிர்வு:
நல்ல பதிவு.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அவருக்கு நிகர் அவர்தான். பள்ளி நாள்களில் ஒரு முறை அவரை கும்பகோணத்தில் ரயில்வே ஸ்டேஷனில் நேரில் பார்த்துள்ளேன். தெய்வீக முகம். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நிறைய தகவல்கள் நண்பரே அருமையான பதிவு.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஸ்ரீமதி KBS அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..
RépondreSupprimerஆயினும்,
அவர் நடித்தது - திருமலை தென்குமரி அல்ல!..
திருமலைத் தெய்வம்!..
நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
//ஒரு பெண்ணாக, பெண்களுக்குப் பல அறிவுரைகள் சொன்னவர். சொன்னது மட்டுமல்ல, தானே வாழ்ந்தும் காட்டியவர். //
RépondreSupprimerசரியாச்சொன்னீங்க வேலு சார்
நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் நினைவு நாளில் அவரைப்பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! இன்னொரு தகவல்.பூம்புகார் படத்தில் நடிக்குமாறு முதலில் திரு மு.கருணாநிதி கேட்டுக்கொண்டபோது திருமதி கே.பி.எஸ் நடிக்க மறுத்தாராம். அவரிடம் உங்கள் மு.க. விடம் இந்த மு.க கேட்டுக்கொண்டதாக சொல்லுங்கள். அவர் அனுமதிப்பார் என்றாராம். (முதல் மு.க- முருகக்கடவுள் , இரண்டாவது மு.க-மு.கருணாநிதி) திருமதி கே.பி.எஸ் அவர்கள் தீவிர முருக பக்தை என்பதால் அப்படி சொன்னதாக சொல்வார்கள்.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான தொகுப்பு புதுவை வேலு அவர்களே. பாராட்டுக்கள்.
RépondreSupprimersattia vingadassamy
நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு சகோ.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கே.பி.எஸ் அவர்கள் பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும் எனக்கு.கோவையில் அவர்களஈன் கச்சேரிகளை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். அருமையான பதிவுக்கு நன்றி.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான கலைஞரை நினைவுகூர்ந்த பதிவு! சிறப்பு! நன்றி!
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நினைவுப்பகிர்வு அருமைத்தொகுப்பு!
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பல அரிய தகவல்களோடு நினைவு கூர்ந்து கே.பி.எஸ். அவர்களுக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் நண்பரே!
RépondreSupprimerத ம 7
நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பல தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கே.பி.எஸ் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்
RépondreSupprimerஅருமை நண்பரே
தம +1
நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பல தகவல்களுடன் அருமையான பதிவு
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு