dimanche 30 novembre 2014

'ஒழுக்கத்தை பேணுவோம்'



எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! 




ஆம் !
வாய்மையை போதித்த நம் தெய்வப் புலவன்  வள்ளுவனுக்கு  மத்திய அரசு சிறப்பு செய்து இருப்பது  அதாவது, 'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருப்பது. வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இதை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ் வலைதள படைப்பாளர்கள் /பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்! 
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுவோம்.

வாருங்கள் நண்பர்களே!
ஒன்றாக கூடுங்கள் தோழர்களே!

ஒழுக்கத்தை பேணுவோம்  வள்ளூவனின் வாக்கின்படி!


ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.


(குறள் 131)


(நல்ல ஒழுக்கம், எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால், அவ் ஒழுக்கத்தை, உயிரைவிட உயர்ந்தாகக் காக்க வேண்டும்.)


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து.


(குறள் 136)


(ஒழுக்கம் தவறினால் வரும் கேடுகளை, அறிஞர்கள் நன்கு அறிவர். எனவே, கடைப்பிடிப்பது கடினமாகஇருப்பினும் ஒழுக்கத்திலிருந்து தவறாமல் என்றும் தம்மைக் காத்துக் கொள்வர்.)



நன்றிக்குவித்து ஆகும், நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம் 

என்றும் இடும்பை தரும்.


(குறள்  138)


(நல் ஒழுக்கம், அழியாத நன்மைக்கு, விதையாகும்; தீ ஒழுக்கமோ, தீராத துன்பத்திற்கே மூலமாகும். )


என்னது?

குழலின்னிசை ஒழுக்கத்தை ஓங்கி இசைக்கிறதே?

என்று நீங்கள்  கேட்பது எனது செவிகளுக்கும் கேட்கிறது.

ஏனென்றால் இன்றைய தினமானது மனமும் உடலும் சார்ந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டி அதன் அவசியத்தை வலிவுறுத்தும் தினம்!
ஆம் !


இன்று!

'உலக எய்ட்ஸ் தினம்'


ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதோ இது தொடர்பாக விழிப்புணர்வுக்கு விருந்தாய் அமைந்த ஒரு
பக்தி கதை!


'நீயே என் குரு'







 



பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர்.

ஒருநாள் இரவு வேளை... மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார்.

மனம் முழுவதும் அவளது நினைப்பு!

வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது.

ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! 

மழையின் சப்தத்தில்,  அவர்கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்துதொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.

ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார். திடுக்கிட்டு எழுந்த மனைவி,  கணவன் அங்கே நிற்பது கண்டு, நீங்களா ?
இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?
வீடு வேறு பூட்டியிருந்ததே! என்றாள்.

 நடந்ததைச் சொன்ன கணவர்,  அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.
மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள்,  அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள்.

ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.
பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று!

இந்த உடல் தரும் சுகம் தரும் தற்காலிகமானது தான். இதன்மீது பற்றுக் கொண்டுஇருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்.

பிணத்தையும்,  பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்! என்றாள்.

அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.
கேவலம்...

ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான்.

மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.
« நீயே என் குரு » என்றார்.

உடனேயே எழுதுகோலை எடுத்தார். 

ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். 
 ஸ்ரீராமசரித மானஸ் என்று பெயர் சூட்டினார்.

இப்போது புரிந்திருக்குமே! அவர் யார் என்று

ஆம்... துளசிதாசர் என்னும் மகான் தான் அவர்.

இவர் எழுதிய « ராமசரிதமானஸ் » நூலைத்தான்
துளசி ராமாயணம் என உலகமே போற்றுகிறது.

எனவே நாம்!

"ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழுவோம் !
'ஒழுக்கத்தை பேணுவோம்"
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

புதுவை வேலு

நன்றி: (கதை உதவி தினமலர்)

20 commentaires:

  1. மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்போம்
    நண்பரே தங்களுக்கு என் நூலினை அஞ்சல் வழி அனுப்பியுள்ளேன்
    இன்னும் ஓரிரு நாட்களில்,தம்மை வந்தடையும்
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      மத்திய அரசை பாராட்டும் அதே வேளையில்,
      அஞ்சல் வழியே நூலை எமக்கு
      அனுப்பிய உமது விரைவு நடவடிக்கையை
      பாராட்டுதலோடு நில்லாமல் அன்பு கலந்து
      போற்றுகிறோம் அய்யா!
      இனிய செய்தி! வருககைக்கும், பாராட்டுதலுக்கும்
      மிக்க நன்றி கரந்தையார் அவர்களே!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும்.

    படிப்பினை ஊட்டும் இனிய பதிவு!..
    வாழ்க நலம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. ஒழுக்கத்தின் ஒளிவிளக்காய் திகழும் தங்களது கருத்து அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அறியாதன பல அறிந்தேன்
    சொல்லிச் சென்றவிதமும் வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. அறியாதன பல அறிய தந்தமைக்காக குழலின்னிசையை,
    தாங்கள் பாராட்டிய பாங்கை நோக்கும் போது, இன்னும் பல நல்ல தகவல்களை திரட்டியும், நல்ல படைப்புகளை படைக்கவும், உத்வேகம் பிறக்கிறது.
    வருகைக்கும், கருத்து பகிர்விற்கும் இனிய நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. எமக்கு புதிய தகவல்கள் நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நாளும் நல்ல பல தகவல்களை தந்தருள...
      வந்தருள்க விருமாண்டி வீரரே வந்தருள்க!
      கூர்மையான கருத்தினை தந்தருள்க!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஆமாம் எனக்கும் இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது

    “ ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தா எயிட்சு “

    நினைவூட்டியதற்கு நன்றி அய்யா!

    RépondreSupprimer
    Réponses
    1. "உலக எயிட்ஸ் தினத்திற்கு" உகந்ததோர் உன்னதமான குறளை
      வடித்திட்ட வலைப் பூவின் குறிஞ்சி பூவே வருக! வருக!
      கருத்தினை தருக தருக!
      புதுவை வேலு

      Supprimer
  7. உலக எய்ட்ஸ் தினமான இன்று ஒழுக்கத்தை ஓங்கி இசைத்த குழலின்னிசைக்கு எனது பாராட்டுக்கள்.துளசிதாசரின் விழிப்புணர்வோடு கூடிய பக்தி கதை அருமை! ஒழக்கத்தை முன் நிறுத்தி வந்த இனிய பதிவு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நாளும் குழலின்சையை கேட்டு மகிழும் சகோதரியே
      உமக்கு எமது பாராடுக்களும், நன்றிகளும் உரித்தாகுக!
      வளமையான கருத்து பதிவினால்
      வல்லமை பெற்ற எழுத்தினை தாராயோ?
      புதுவை வேலு

      Supprimer
  8. திருவள்ளுவருக்கு மத்திய அரசு சிறப்பு செய்தது பெருமை.
    ஒழுக்கம் + சுகாதாரம் இருந்தால் பல நோய்களுக்கு பூட்டு (சாவி நம்மிடம்).
    சிற்றின்பம் மனிதனை வேகமாக வெட்கம் இல்லாமல் சென்று அடைய மன பலமிண்மையே காரணம்.
    துளசிதாசர் தன் அனுபவத்தை தெரிவித்த தகவலை, புதுவை வேலு அவர்கள் உலக எய்ட்ஸ் தினம் பதிவில் சிறப்பு செய்தது பாராட்டுகுறியது.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நோய் என்னும் பூட்டுக்கு அருமருந்தாய் அமைந்தது அய்யா
      உமது கருத்து. கருத்தினையும் தொகுப்பாய் அமைத்து, சிறந்த ஒரு கருத்து பதிவாளருக்கு உரிய முத்திரையை பெற்று விட்டீர்!
      வான் புகழ் வள்ளுவனுக்கும் சிறப்பு சேர்த்துள்ளீர்!
      நன்றி அய்யா!
      புதுவை வேலு

      Supprimer
  9. ராமனைவிட எல்லோரும் ஒழுக்கச் சீலர்களாத்தான் இருக்கிறார்கள். ராமனின் வாரிசுகளைத் தவிர...............

    RépondreSupprimer
    Réponses
    1. ஒழுக்கம் இல்லாதவரையும் ஒழுக்கம் சார்ந்த நிலைக்கு
      கொண்டு வர நம்மால் இயன்ற வகையில் முயற்சி செய்வோமே?
      நண்பரே இங்கு வேற்றுமையை போதிக்க வேண்டாம் என்பதே என் கருத்து!
      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  10. மத்திய அரசை பாராட்டுவோம்.
    எயிட்ஸ் தினத்தில் நல்ல கதை பகிர்ந்தீர்...
    நன்று நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நன்னெஞ்சே!
      தங்களின் பாராட்டினை நோக்கும்போது
      "காயத்ரி மந்திரத்தை" படிக்கும்போது ஏற்படும்
      இறை பரவசம் ஏற்படுகிறது.
      புதுவைவேலு

      Supprimer
  11. நல்ல ஒரு கதைப் பகிர்வு அதுவும் துளசிராமாயணம் ஜனித்த கதை....அருமை! மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
  12. பெருங்கடலை சேரா நீர் புழுக்கள் வாழும் குட்டையிலே தேங்கிவிடும் ... அதுபோல பேரின்பம் அறியாவாழ்வும் சிற்றிரன்பத்திலலே தேங்கி பெருமை குன்றி போகும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer