பழ வகைகள்
ஆரோக்கியமான
வாழ்வு வாழ்வதற்கு,
நாள்தோறும்
தவறாது ஐந்து வகையான பழங்களை,
அவரவர்
ஆரோக்கியத்திற்கு ஏற்றவகையில் உண்ண வேண்டும்
என்பது மருத்துவ முறைப்படி உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை.
என்ன வகையான பழங்களை நாம் புசிக்க வேண்டும்
என்று நான் தேடியபொழுது 96 வகையான பழங்கள் எனக்கு கிடைத்தன! தமிழ் பெயர்களுடன்.
எனவே,
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
என்ற திருமூலரின் வாக்கின் படி,
இந்த பழங்களின் பெயர்களை ... அறிந்தவர்களை தவிர்த்து,
அறியாதவர்களுக்கு அறியத் தருகிறேன்.
படியுங்கள்! படித்தபின்பு... புசித்து, ருசித்து இன்புறுங்கள்.
இதோ பழவகைகளின் வரிசை பட்டியல்:
1. Apple = குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2.
Ambarella = அம்பிரலங்காய்
3. Annona = சீத்தாப்பழம்
4. Annona
muricata =முற்சீத்தாப்பழம்
5. Apricot =சர்க்கரைப்பாதாமி
6.
Avocado =வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7. Banana =வாழைப்பழம்
8. Batoko
Plum =லொவிப்பழம்
9. Bell
fruit = பஞ்சலிப்பழம், ஜம்பு
10.
Bilberry = அவுரிநெல்லி
11.
Blackberry = மேற்கத்திய
நாவற்பழம்
12. Black
currant = கறுந்திராட்சை
13.
Blueberry =ஒரு வகை நெல்லி
14. Bread
fruit =கொட்டைப்பலா, சீமைப்பலா
15. Butter
fruit =ஆனைக்கொய்யா
16. Cantaloupe
=மஞ்சல் நிற முலாம்பழம்
17. Cashew
fruit =முந்திரிப்பழம், கஜு
18.
Cherimoya =சீத்தாப்பழம்
19. Cherry =சேலாப்பழம்
20. Chickoo = சீமையிலுப்பை
21. Citron =கடார நாரந்தை
22. Citrus
aurantium =கிச்சலிப்பழம்
23. Citrus
reticulata =கமலாப்பழம்
24. Citrus
sinensis =சாத்துக்கொடி
25.
Clementine =நாரந்தை
26. Cocoa
fruit =கொகோப்பழம்
27.Cranberry
=குருதிநெல்லி
28.
Cucumber =வெள்ளரிப்பழம்
29. Custard
apple =சீத்தாப்பழம்
30. Damson =ஒரு வித நாவல் நிறப்பழம்
31. Date
fruit =பேரீச்சம் பழம்
32.
Devilfig =பேயத்தி
33. Dragon fruit = ட்றொகன் பழம்
34. Duku =டுக்கு
35. Durian =முள்நாரிப்பழம், தூரியன்
36. Emblica
=நெல்லி
37. Eugenia
rubicunda = சிறு நாவற்பழம்
38.
Feijoi/Pinealle guava = புளிக்கொய்யா
39. Fig =அத்திப்பழம்
40.
Persimmon fruit =சீமை பனிச்சம்பழம்
41.
Gooseberry =கூஸ்பெறி
42.
Grapefruit =பம்பரமாசு
43 Grapes = கொடி முந்திரி, திராட்சை
44. Guava =கொய்யாப்பழம்
45.
Honeydew melon =தேன் முழாம்பழம்
46. Huckle
berry =(ஒரு வித) நெல்லி
47. Jack
fruit =பலாப்பழம்
48. Jumbu
fruit = ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49. Jamun
fruit =நாகப்பழம்
50. Kiwi
fruit =பசலிப்பழம்
51. Kumquat
=(பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52. Kundang
=மஞ்சல் நிற சிறிய பழம்
53. Lansium
=லன்சியம்
54. Lemon =வர்க்கப்பழம்
55. Lime =எழுமிச்சை
56.
Loganberry = லோகன் பெறி
57. Longan = கடுகுடாப் பழம்
58. Louvi
fruit = லொவிப்பழம்
59. Lychee =லைச்சி
60.
Mandarin =மண்டரின் நாரந்தை
61. Mango =மாம்பழம்
62.
Mangosteen = மெங்கூஸ் பழம்
63. Melon =இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64. Morus
macroura = மசுக்குட்டிப்பழம்
65.
Mulberry =முசுக்கட்டைப் பழம்
66. Muscat
grape =திராட்சை
67. Orange =தோடம்பழம்
68. Palm
fruit = பனம் பழம்
69. Papaya =பப்பாப் பழம்
70. Passion
fruit = கொடித்தோடை
71. Peach =குழிப்பேரி
72. Pear = பேரி, பெயார்ஸ்
73. Pine
apple = அன்னாசிப் பழம்
74. Plum =ஆல்பக்கோடா
75.
Pomegranate = மாதுளம் பழம், மாதுளை
76. Pomelo =பம்பரமாசு
77. Pulasan
=(ஒரு வகை)ம்புட்டான்
78. Quince =சீமை மாதுளம்பழம்
79.
Rambutan = ரம்புத்தான்
80.
Rasberry = புற்றுப்பழம்
81. Red
banana = செவ்வாழைப் பழம்
82. Red
Currant = ஒரு வித லொவி
83.
Sapodilla =சீமையிலுப்பை
84. Satsuma = நாரத்தை
85. Sour
sop/ Guanabana =அன்னமுன்னா பழம்
86.
Strawberry =செம்புற்றுப்பழம்
87.
Syzygium =ஜம்புப்பழம்
88.
Tamarillo =குறுந்தக்காளி
89.
Tamarind =புளியம்பழம்
90.
Tangerine =தேன் நாரந்தை
91. Tomato =தக்காளிப்பழம்
92. Ugli
fruit =முரட்டுத் தோடை
93. Water
melon =வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94. Wax jumbo
= நீர்குமளிப்பழம்
95.
Resberry =இளஞ்செம்புற்றுப் பழம்
96. Woodapple =விளாம்பழம்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
- திருமூலர் -
தனக்கு கிடைத்த
மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.
தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்.
புதுவை வேலு
புதுவை வேலு
தொகுப்பை சேமித்துக் கொண்டேன்...
RépondreSupprimerநன்றி...
நன்றி நண்பரே!
Supprimerபாராட்டோடு தாங்கள் கொண்டு வந்த கருத்து
"திண்டுக்கல் மாம்பழம்" போல் இனித்தது.
வருகை தொடரவும்!
புதுவை வேலு
ஆகா அப்டியே பிரிண்ட் எடுத்து வகுப்பில் கொடுக்கலாம் ..
RépondreSupprimerநன்றி ...
அமுதை பொழியும் அன்பின் ஆழ்ந்த கருத்து
Supprimerதந்தமைக்கு தலை வணங்கிறேன்!
நன்றியுடன்,
புதுவை வேலு
மாம்பழம் - இது செந்தமிழர்க்கே உரியது.
RépondreSupprimerமாங்காய் தான் Mango. அரபு நாட்டில் மாங்கா!..
Pine Apple - அன்னாசிப் பழம்.
இது - அனாஸ் என வடக்கிலும் அனானாஸ் என அரபியிலும் வழங்குகின்றது.
இதற்கு சரியான தமிழ்ப்பெயர் - செந்தாழம் பழம்!.. (ஏதோ எனக்குத் தெரிந்தது)
தங்களின் தொகுப்பினைக் கண்டு பிரமிப்பு.. மகிழ்ச்சி..
ஆய்வுக்குரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
Supprimerவாருங்கள் !
வந்து தாருங்கள் அறிய பல தகவல்களை!
அறிய காத்திருக்கிறேன் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
குழந்தைகளுக்கு உபயோகமான தகவல் நன்றி.
RépondreSupprimerநன்றி திரு கில்லர்ஜி அவர்களே!
Supprimerகுழந்தைகளை பற்றியும் நிறைய சிந்திக்க வேண்டும் என்று தங்களது தரமான கருத்தால் உணர்த்தி விட்டீர்கள்!
அடுத்து காந்தியை தொடர்ந்து குழந்தைகளும் தங்களது கனவில் வருவார்களா?
நன்றியுடன்,
புதுவை வேலு
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
RépondreSupprimerமிக்க நன்றி
தங்களின் கருத்தால்" திருமூலரின் "தரிசனம் பெறப் பெற்றேன்!
RépondreSupprimer(ஒற்றுமையை உணர்த்தும் ஓங்காரம் தரும் கருத்து)
நன்றியுடன்,
புதுவை வேலு
தாங்கள் பெற்ற இன்பத்தை பெறுக என்று பெருந்தண்மையோடு..பகிர்ந்தமைக்கு நன்றி!! 96 வகைப்பழங்களை புசித்தவர்கள் பாக்கியசாலிகளா???? கொடுத்தவைத்தவர்களா,..???எனபததான் எனது சந்தேகம் நண்பரே!!!
RépondreSupprimerநண்பரே! 96 வகையான பழங்களையும் நீங்கள் புசித்தீர்களே ஆயின் பாக்கியசாலி ஆவீர்!
Supprimerருசித்து உண்பீரேயாயின் கொடுத்து வைத்தவர் ஆவீர்!
இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
பழங்களுக்கு அகராதி, திருமுலர் பாட்டை சேர்த்து நீர் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் பகிர்ந்த புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள். குழந்தை கல்விக்கு உதவும். உணவு மற்றும் மருத்துவம் என்று வரும்போது, நடைமுறைக்கு இலவசம் (அரசாங்கம்) என்னும் மாயை இருக்க இயற்கை என்னும் நல்ல செய்திகள் அழிக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? அல்லது இன்று குழந்தைகள் இந்த பழங்களை பற்றி கேட்டால் ஆசிரியர்கள் பழத்தை தேடும் படலம் ஆரம்பம். நன்று.
RépondreSupprimersattia vingadassamy
குழந்தைகள் இந்த பழங்களை பற்றி கேட்டால் ஆசிரியர்கள் பழத்தை தேடும் படலம் ஆரம்பம் என்று சொல்லி எதார்த்தக் கருத்தை எவருக்கும் புரியும்படி உரைத்த நண்பர் சத்தியாவுக்கு நன்றி!
Supprimerவருகை தொடரவும்.
புதுவை வேலு
திருமூலரின் பாட்டுடன் அருமையான பழங்களின் தமிழ் பெயர்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டோம். அதான் சேமித்து வைத்தோம்...
RépondreSupprimerநன்றி!
RépondreSupprimerவருகை தொடரவும்.
புதுவை வேலு
பழங்களின் தமிழ் பெயர்களை சுவைபட தந்ததற்கு நன்றி !! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer