samedi 31 janvier 2015

படம் சொல்லும் பாடம் (யானைப் பாறை)








தாகம் தீர்க்கும் உயிர் அமுதே
தேகம் சிலிர்க்கும் உனைத் தொட்டால்
பாகன் இன்றி நான் வந்தேன்
பகரவோ பாருக்கோர் உண்மை!



பிறையை சூடும் சிவனும் அல்லேன்!
மறையை ஓதும் மாதவனும் அல்லேன்!
இறைவன் படைத்த கற்சிலை நானே!
நீரின்றி அமையாதுலகே கேள்!

புதுவை வேலு


பட உதவி: தினமலர்

33 commentaires:

  1. அழகு படமானது
    அதற்கேற்ப கவிதை கருவானது!

    இந்த யானை எங்கே (படம்)
    பிடிபட்டது
    தெரிந்தால் சொல்லுங்களேன்

    RépondreSupprimer
    Réponses
    1. பிறையை சூடும் சிவனே "அன்பே சிவமாய்"
      வந்து, கருத்தினை போற்றி தந்திருப்பது,
      உள்ளத்தை உயர்வடையச் செய்கிறது!
      முதல் வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும்,
      இனிய நன்றி நண்பரே!

      இந்த யானை எங்கே (படம்)
      பிடிபட்டது?
      தெரிந்தால் சொல்லுங்களேன் ?

      ஒரு யானை தண்ணீர் குடிப்பது போன்று அமைந்துள்ள இந்த படம்
      ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே என்ற இடத்தில் அமைந்துள்ளது.

      வருகைக்கும், கருத்து பதிவிற்கும் இனிய நன்றி!
      நட்புடன்,

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமை அற்புதம் நண்பரே
    இது போன்ற யாலை பாறை எங்கிருக்கிறது என்பதை
    தெரிவித்தால் மகிழ்வோம்

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை, அற்புதம் பாராட்டிய கரந்தையாரே
      தங்களை மகிழ்விக்க தருகின்றேன்!
      பாறைச் செய்தியை பணிவன்போடு!

      "ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த மலை"

      வருகைக்கும், கருத்து பகிவிற்கும் மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. படத்துக்கேற்ற பொருத்தமான கவிதை. கவிதையையும் படத்தையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. படம் சொல்லும் பாடத்தின்
      வடம் பிடித்து அழைத்து வந்து
      இதந்தரும் இனிய கருத்தினை வாழ்த்தாக தந்தமைக்கு
      சிறப்புமிகு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. பொற்றாமரைக் குளத்து கமலம் போல் இதந்தரும் கதை புனையும்
      நண்பர் விமலன் அவர்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. யானை என்றால் அது யானை
    வெறும் கல்லென்றால் அது கல்தான்!
    திருமூலன் சொல்வதை மாற்றி,

    கல்லை மறைத்தது மாமத யானை
    கல்லில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பாரொடு பூதம்
    பரத்தில் மறைந்தது பாரொடு பூதம்
    என்று நினைக்கச் செய்யும் விதத்தில் அமைந்த கவிதை அருமை அய்யா!
    மரபின் வாசலைத் தகர்த்துப் பவனிவர ஆரம்பித்து விட்டீர்கள்.
    சாதாரண பவனியா............?
    யானை மேற் பவனி..!!!!!
    உளப்பூர்வமான வாழ்த்துகள்!
    தங்களின் நண்பரும் சேர்த்து.
    நன்றி அய்யா!

    RépondreSupprimer
    Réponses
    1. மரபின் வாசலைத் தகர்த்துப் பவனிவர ஆரம்பித்து விட்டீர்கள்.
      சாதாரண பவனியா............?
      யானை மேற் பவனி..!!!!!
      இதைத்தான் ஏற்றி விட்டு அழகு பார்ப்பது என்று சொல்லுவார்களோ அய்யா?

      யானை அகல கால் வைக்காமல்,
      அடி சறுக்காமல் நடந்து வர அறிவுறுத்துங்கள் அய்யா!

      சிந்தையுடன் செயல்பட்டு விந்தையுடன் வலம் வர வாழ்த்துங்கள்!

      வருகைக்கும், கருத்து கவிதைக்கும் மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வாக்கு தொடர்ந்து வாய்க்கட்டும் குழலின்னிசைக்கு!
      பெருமைமிகு கருத்து. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வணக்கம்
    ஐயா.

    படம் அழகு கவியும் அழகு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கதைப் போட்டி, கவிதைப் போட்டி, என்று எழுத்து வேலைகள் எண்ணற்று இருக்க
      எனது பதிவை கண்ணுற்று கருத்தினை தந்த கவிஞருக்கு ரூபன் அவர்களுக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. படமும் சூப்பர்..கவிதையும் சூப்பர் சகோ நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி R.Umayal Gayathri அவர்களே,
      இனிய வருகை புரிந்து, கருத்தினை தந்ததோடு மட்டுமல்லாது
      கூகுளில் பதிவாக்கி, வெளியிட்டு சிறப்பு சேர்த்தீர்கள்!
      மிக்க மகிழ்ச்சி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. காட்சியும் கவிதையும் அருமை.. இனிமை!..

    RépondreSupprimer
    Réponses
    1. மாட்சியிமை பொருந்திய கருத்து காட்சியிமை கண்டேன்.
      களிப்புற்றேன்!
      வருகைக்கும் கருத்து பகிற்விற்கும் மிக்க நன்றி! அன்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சிலை என்றாலேயே அது மனிதனின் படைப்பாகத்தான் இருக்கும். ஆனால் மனிதனாலும் முடியாததை இயற்கை காட்டி விட்டது. அமெரிக்காவில் எங்கோ மலையில் அமெரிக்க ஜனாதிபதிகளின் சிலைகள் பற்றிப் படித்திருக்கிறேன் இந்த இயற்கையின் படைப்பு இருக்குமிடம் தெரிவிக்கலாமல்லவா. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது வலைப் பூ வின் வாசம் நுகர்ந்து,
      வீசும் தென்றலாய் விஜயம் செய்த திரு G.M பாலசுப்ரமனியம் அய்யா
      அவர்களை வரவேற்று மகிழ்கிறேன்.

      "சிலை என்றாலேயே அது மனிதனின் படைப்பாகத்தான் இருக்கும்.
      ஆனால் மனிதனாலும் முடியாததை இயற்கை காட்டி விட்டது"
      என்ற தங்களது கருத்து!
      உண்மையின் உயிர் அய்யா! வரவேற்கின்றேன்.
      இனிய கருத்து பகிவிற்கு, குழலின்னிசையின் குன்றாத நன்றி!
      தொடர் வருகை தருக!
      இந்த இயற்கையின் படைப்பு இருக்குமிடம் தெரிவிக்கலாமல்லவா?

      "ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே" என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த மலை,
      ஒரு யானை தண்ணீர் குடிப்பது போன்று அமைந்துள்ளது.
      அதனால், இதற்கு யானைப் பாறை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
      என்னே!!! இயற்கையின் வினோதம்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. கல் யானைக்கு உயிர் கொடுக்கும் நல்ல வரிகள். அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. உயர்வடையச் செய்யும் உயிர் கருத்தை உளமாற வழங்கி சென்ற
      நல் உள்ளம் பெற்ற நண்பா! ஏற்கின்றேன் உமது கருத்தை!
      வருகை சிறக்கட்டும்! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. படமும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    RépondreSupprimer
  13. கதைப் போட்டி, கவிதைப் போட்டி, என்று எழுத்து வேலைகள் எண்ணற்று இருக்க
    எனது பதிவை கண்ணுற்று கருத்தினை தந்த கவிஞருக்கு Yarlpavanan Kasirajalingam அவர்களுக்கு மிக்க நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. யாதவன் நம்பி இப்படியெல்லாம் கவிதை எழுத வேண்டு 80தற்காகத்தான் இயற்கையே இப்படி அமைந்ததோ...?

    யானையே முழுவதும் குடித்து விடாதே மீன்களும் வாழ வேண்டுமே தண்ணீரில்....

    RépondreSupprimer
  15. நன்றி நண்பா!

    "யானையே முழுவதும் குடித்து விடாதே மீன்களும் வாழ வேண்டுமே தண்ணீரில்."...

    பகிர்ந்துண்டு வாழ்வோம்
    மகிழ்ந்துண்டு வாழ்வோம்

    சிறப்பான சிந்தனைக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
    பாராட்டுக்கள்!
    கலைநயமிக்க கவிதை சிந்தனை
    வந்தணம் செய்கின்றேன். வாழ்த்துக்களை வழங்கி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. அருமையான படம். இந்த இடம் எங்கு உள்ளது? அருமை....பாடல் வரிகளும் அருமை அதற்கேற்றார் போல்....

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை, அற்புதம் பாராட்டிய ஆசானே!
      தங்களை மகிழ்விக்க தருகின்றேன்!
      பாறைச் செய்தியை பணிவன்போடு!

      "ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த மலை"

      வருகைக்கும், கருத்து பகிவிற்கும் மிக்க நன்றி! அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. அற்புதமான படத்திற்கு அழகான கவிதை வரிகளை தந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. (அற்புதமான படத்திற்கு அழகான கவிதை வரிகளை தந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்!)
      rajavin roja
      நன்றி சகோதரி

      வலைச் சரத்தில் இந்த பதிவு
      திருமதி உமையாள் காயத்ரி அவர்களால்
      சிறந்த பதிவாக சிறப்பிக்கப் பட்டு உள்ளது!
      வருக கருத்தினை தவறாது தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. அருமையான படம்.

    படத்திற்கேற்ற கவிதை. சொல்லும் கருத்தும் நன்று.

    பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமையான படம்.

      படத்திற்கேற்ற கவிதை. சொல்லும் கருத்தும் நன்று. பாராட்டுகள்.
      வெங்கட் நாகராஜ்

      நன்றி! நண்பரே!
      வலைச் சரத்தில் இந்த பதிவு
      திருமதி உமையாள் காயத்ரி அவர்களால்
      சிறந்த பதிவாக சிறப்பிக்கப் பட்டு உள்ளது!
      வருக கருத்தினை தவறாது தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. ஒரு மலையே இயற்கை தந்த கலையாக காட்சியளிப்பது அருமை.!!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer