mardi 10 février 2015

படம் சொல்லும் பாடம் ( சிந்தனை செய் மனமே!)



குடிநீர்












குடிநீரை தேடி வந்தோர் குரங்கு
வடிநீரை வாய்வைத்து குடித்ததடி!
படிபறியா பாமரக் குரங்கு குடத்தின்
அடியில் நீரில்லையென சொன்னதடி!




மது 

 

 

 

மதுவில் மூழ்கும் மாந்தராய் மாறுவதால்

எதுவும் இல்லானிலை காண்பாய்!

கள்ளருந்தும் மந்தி குடிநீர் அருந்தும்போது

சொல்பேசும் மனிதா-நீ சிந்தி!

 

  மது: ம= ஆரம்பத்தில் மகிழ்வை தருவது

        து= முடிவில் துன்பத்தை தருவது

 


புதுவை வேலு

நன்றி: பட உதவி தினமலர்


20 commentaires:

  1. மனிதன் சிந்திக்கத்தான் வேண்டும்
    நன்றி நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்திக்க தெரிந்த மனிதன் சிறப்புறுவான்!
      நன்றி கரந்தையாரே!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இவ்வகையிலும் சிந்திக்க வைக்கலாம் என்ற நோக்கு நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நவில்கின்றேன் நன்றியினை!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. செய்தால் தீவினை அகன்றிடுமே...!
      நிச்சயமாய்...!
      மது--- மகிழ்வு முதலில் துன்பம் பிறகு.
      அருமை அய்யா!
      தொடருங்கள்!

      Supprimer
    2. தமிழ் மகனை சிந்தனை செய்தாலே
      தீ வினை அகன்றிடும் அய்யா!
      நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. சிந்திக்க வேண்டிய ம... து...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தை சித்தரின் சிந்தனைமிகு கருத்திற்கும் வருகைக்கும் இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. குடிநீர், மது...இரண்டும் அருமை சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய அன்பு சகோதரிக்கு நன்றி!
      தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கருத்தும் அருமை. கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை தந்து வாழ்த்தி கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி
      வே.நடனசபாபதி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான வாசகங் ''கள் ''மதுவைப்பற்றி.

    RépondreSupprimer
  8. அருமை பாராட்டிய நண்பா!
    வாழ்த்து "கள்"
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. படம் சொல்லும் பாடம் அருமை, இப்போது பல இடங்களில் குழாய் திசைதிருப்பி முடுக்கியதையும், குரங்கு ஏமாந்ததையும் பார்த்து உள்ளேன்.
    எனக்கு தெரிந்து மது, புதுவை மக்களின் குடும்பங்களில் ஒருவருக்கேனும் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது புதுவை வேலு அவர்களே, சிலருக்கு என்ன செய்வது -மனதிற்கு துணையே. நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. மது பற்றிய தங்களது அனுபவ பார்வை பலரையும் சிந்திக்க வைக்கிறது.
      வருகைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மகிழ்வும் துன்பமும்... மதுவில். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

    RépondreSupprimer
  11. நண்பரே!
    சிந்தனைமிகு கருத்திற்கும் வருகைக்கும் இனிய நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer