dimanche 1 mars 2015

கண்ணீர்க் குடம்






தலைக் காவேரி
"ஆறு"
கரை புரண்டு 
ஓடிய,
காலம் போச்சுதடி!
தங்கமே தங்கம் !
 

சின்னத் திரை வானின்
TRP - நிலவு பொழியும்,
(Tevevesion/Tv Rating Points)
காசு மழைக்காக!

குடும்பங்களில்,
குழாய் வழியே!
"குடத்தினில்"
கண்ணீரை நிறைப்பது
நியாயமா சொல் ?
தங்கமே தங்கம்.

இனி,
இல்லங்கள் தோறும்
புன்னகை என்னும்
பன்னீர் பூக்கள்
மட்டுமே
பூக்கட்டும்! 

"சீரியலை" விட்டு,
கண்ணீர்க் கவலைகள்
மறையட்டும்! 
என்று,
சொல்லடி
தங்கமே தங்கம்! 

புதுவை வேலு

நன்றி:(பட உதவி/ தினமலர்)

46 commentaires:

  1. அருமை நண்பரே N.S.K. பாடலைக் கேட்டது போல் இருக்கிறது வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கலைவாணரை நினைவில் நிறுத்தி, முன்னிலை படுத்தி, முதல் கருத்தும், முதல் வாக்கும் வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருகையும் வாக்கும் தொடரட்டும்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நமது தமிழ் குடும்பங்களில் ஒடுகிற சீரில்களை விடவா?

    RépondreSupprimer
    Réponses
    1. சீரியல்களின் ஆளுமைக்குள் அதிகபட்ச தமிழ்க் குடும்பங்கள் வந்து விட்டதை
      மிகவும் வேதனையாக சொல்லியுள்ள தங்களது கருத்தினை மறுப்பின்றி ஏற்கின்றேன்
      விமலன் அவர்களே!
      இதுகுறித்து தங்களது சிறப்புமிகு சீரிய எழுத்துக்கள் சீறிப் பாயட்டும் கதை வடிவில்! வெகு விரைவில்!
      வருகைக்கு மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. வணக்கம் சார்,யதார்த்தஉலகில் பெண்களின் நிலை இப்படியாய் இல்லை என்றே நினைக்கிறேன்,மெகாத்தொடர்கள் நம் வீட்டு சகோதரிகளும் தாய்மர்களும் எஅப்படி இருக்க வேண்டும் என மூளைரீதியாய் வடிவமைத்துச்செல்கின்றன/நம் மூளைகள் யாரோலோ வடிவமைக்கபடுவது போல் இதுவும் ஒரு ஆபத்தான் போக்காய்/இது போன்றவைகள் நம்மை வளர்ப்பதில்லை,சிந்திக்கத்தூண்டுவதில்லை,ஒரு வலைக்குள் அல்லது ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாய் அடைத்து விடுகிறது,

      Supprimer
    3. மீள் வருகைக்கு மிக்க நன்றி விமலன் அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. ஹை தமிழ் மணம் இன்றுதான் பார்க்கிறேன் தமிழ் மணம் ஒன்றாவது நாந்தாங்கோ...

    RépondreSupprimer
    Réponses
    1. ஓட்டுப் பெட்டியை வைத்தவர் யார் தங்களது நண்பர் அல்லவா?
      வாக்குமிக்கவரின் வாக்கிற்கு மீண்டும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இது மூன்றாவது முயற்சி,கமெண்ட் போட,வெற்றி பெறுமென்று நினைக்கிறேன் !
    இந்த மழையில்நனையத்தானே பெண்களுக்கு பிடிக்கிறது ?படம் அசத்தல் !
    த ம 3

    RépondreSupprimer
    Réponses
    1. காத்திருந்து வாக்கினை பதிவு செய்த திருவாளர் பகவான் ஜீ அவர்களுக்கு
      குழலின்னிசை வணக்கம் செலுத்தி நன்றி பாராட்டுகிறது!
      தரமிகு வருகை எமக்கு உரமாகட்டும்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சீரியலைச் சாடி
    சீறி அலைக் கோபம்...!
    கண்ணீர்க்குடம் சுமக்கும் தங்கம்!
    கவலைகள் போகுமடி தங்கம்!

    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. சீரியல் பார்த்து சிந்தும் கண்ணீர் அலையில்
      மாட்டிக் கொள்ளாத மாண்பினை அன்னையர் யாவரும்
      பெற வேண்டும் அய்யா!
      வருகைக்கும் வாக்கிற்கும் வறியவனின் நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. படம் சூப்பர்...)))).......

    கவிதை அதைவிட சூப்பர் சகோ...

    RépondreSupprimer
    Réponses
    1. காட்சியையும், கவிதையையும், பாராட்டி வாழ்த்துரைத்த கவிதாயினிக்கு
      குழலின்னிசையின் இனிய நன்றி சகோதரி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. ஐம்பொன் சிறப்பினைக் கூறும் ஐந்தாவது வாக்கிற்கு, ஜகம் போற்றும் நன்றி சகோதரி!
      வருகையும், வாக்கும் மெய்ப் பட வேண்டும்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பகுத்தறிவு கவிதை அருமை.
    காலத்திற்கு ஏற்ற படம் + பாடம்.
    நல்ல கருத்துக்கு வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. பகுத்தறிவு கவிதையை பாராட்டி,
      படம் சொல்லும் பாடத்தை வாழ்த்தி கருத்தினை வடித்திட்ட
      நண்பர் சத்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
      வருகை தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. ஹஹஹஹஹ் அருமையான சாடல்! எங்களுக்கு இதில் வருத்தத்துடன் இழையோடும் நக்கல், நையாண்டி நகைச்சுவை தெரிகிறது அதனால்தான் இந்த ஹாஹ்ஹ்......

    தங்கமே தங்கம் எல்லாம் சீரியல் முன்னாடிதாங்க உக்காந்துருக்காங்க....அப்படியாவது உப்புத் தண்ணியா இருந்தாலும் இந்த கோடை காலத்தில் தண்ணி கிடைக்குதானு பார்க்குறாங்களோ....

    நல்ல நையாண்டி வரிகள்! படம் அசத்தல்!!!! நையாண்டி! நக்கல்!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆசானே!
      அருமையான சாடலுக்கு சாட்டை எடுத்து தரும் கருவியாக அமைந்தது
      அந்த படம் அய்யா!
      அதனால்தான் இந்தக் நையாண்டிக் கவிதை உருவாயிற்று!
      சமீப கால பீக் ஹவர்ஸ் சீரியல்களில் கட்டிய கணவன்மார்களை எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா? அய்யா!
      டேய்!, வாடா இங்கே! போடா போ! இன்னும் இதுக்கு மேலே.....
      எப்படியோ மரியாதை புதிய வடிவம் பெறுவதாக சம்த்துவம் பேசுகிறார்களோ என்னவோ?
      தங்கமே தங்கம் எது பேசினாலும் தப்பு இல்லையோ?
      வருகைக்கு அன்பின் நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தொலைக்காட்சியே ஒழிந்தால்தான் நீங்க நினைப்பது நடக்கும்

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரர் சௌந்தர் அவர்களே!
      தங்களது முதல் வருகைக்கும், முதல் கருத்திற்கும் முதற்க்கண்
      குழலின்னிசையின் இனிய நன்றி!
      "தொலைக்காட்சியே ஒழிந்தால்தான் நீங்க நினைப்பது நடக்கும்"
      இது அதிகபட்ச தண்டனையாகவே படுகிறது.
      தொலைக் காட்சி என்பது ஒரு அறிய சாதனம்.
      செய்திகளை உடனுக்குடன் காட்சிகளோடு அறிய உதவும் உன்னத சாதனம்.
      இன்னும் எண்ணற்ற பல நல்ல நிகழ்ச்சிகளை காண உதவுகிறது. முதலில் ஆட பழகிக் கொண்டாலே போதும்! கூடாரத்தை குறை காணத் தேவையில்லை சகோதரரே!
      வருகை தொடர்க! நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வணக்கம்
    ஐயா

    சமுக நிலையை அருமையான பாடல் வரிகள் மூலம் வெளிக்காட்டிய விதம் நன்று த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      சமூக நிலையை சாடி எழுதிய கவிதைக்கு
      தேடிவந்து பாராட்டி, முள் இல்லாத ரோஜாவை ஜாடியோடு (த ம வாக்கு 7)
      கருத்தாக தந்தமைக்கு மிக்க நன்றி!
      வாருங்கள்! தொடருங்கள்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. எனது அடுத்த பகிர்வில் இதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு உண்டு...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வருகைக்கும் கருத்து பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி!
      தங்களது பதிவினை காண ஆவல் அதிகம்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நமது சமுதாயத்தைச் சீரழிப்பதில் இதற்கு முதல் இடம். நேர்மறைச் சிந்தனைகள் உருவாகும்போதுதான் மனம் நன்றாக இருக்கும்.

    RépondreSupprimer
    Réponses
    1. "நமது சமுதாயத்தைச் சீரழிப்பதில் இதற்கு முதல் இடம். நேர்மறைச் சிந்தனைகள் உருவாகும்போதுதான் மனம் நன்றாக இருக்கும்".
      நமது சமுதாயத்தைச் சீரழிப்பதில் இதற்கு முதல் இடம். நேர்மறைச் சிந்தனைகள் உருவாகும்போதுதான் மனம் நன்றாக இருக்கும்.
      நல்லதொரு கருத்து பின்னுட்டம் அய்யா!
      ஏற்கின்றேன் எளிமையுடன்,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. சீரியலால் விடப்பட்ட கண்ணீர் அணைக்கட்டி சேமித்தால் விவசாயி நிலம் முப்போகம் விளைவிப்பான். அருமையான புகைப்படம்.

    RépondreSupprimer
    Réponses
    1. உப்புத் தண்ணீர் விளைச்சலுக்கு ஆகாது அம்மணி!
      முப்போகம் விளையாது முழுவதும் நாசமாய் போகும்! கண்ணீரை
      அணைகட்டி சேமிக்கும் அளவுக்கு, சீரியல் பார்க்கும் கொடுமையை எங்கு கொண்டு போய் சொல்லுவது?
      என்ன கொடுமை அம்மணி இது?
      வருகைக்கும் மனமுவந்த நன்றியும் பாராட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer


  15. எல்லோருடைய ஆதங்கத்தையும் அருமையாய் கவிதையில் படைத்திருக்கிறீர்கள். கண்ணீர் கவலைகளும் தண்ணீர் கவலைகளும் மறையும் என நம்புவோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. ."கண்ணீர் கவலைகளும் தண்ணீர் கவலைகளும் மறையும் என நம்புவோம்".
      ஆம்! உண்மைதான் அய்யா!
      நம்பித்தான் தீர வேண்டும்! ஏனெனில் நம்பிக்கைத்தானே வாழ்க்கை!
      வருகைக்கும் வளமான கருத்து சிந்தனைக்கும் மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. சீரியல் அழுகையை சித்தரித்த கவிதை அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் தளீர் சுரேஷ் அவர்களே!
      தொலைக்காட்சி சீரியல் பார்த்து
      கண்ணீரை தாரை வார்த்து கொடுக்கும்
      தாய்க் குலத்தின் செயலை வேறு எப்படி புரிய வைப்பது?
      நய்யாண்டி தர்பார் செய்ய இது ஒரு வாய்ப்பு அல்லவா?
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. எப்போதும் தாமதமாக வந்தாலும்.. தங்களுக்கு தனது வாக்கை போட்டுவிட்டார் என்று சொல்லடி தங்கமே தங்கம்

    RépondreSupprimer
    Réponses
    1. தாமதமாக வந்து ஓட்டு போட்டாலும்
      இந்த பூத்தில் தங்கம் கிடைக்காது தங்கமே தங்கம்!
      ரொக்கமும் தங்க மூக்குத்தியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்?
      இந்த பூத்தில் கிடைக்காது தோழரே!

      நட்புக்கு மட்டுமே கியாரண்டி இங்கு உண்டு!

      வரவு இனிதாகட்டும்! தொடரட்டும்!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. நல்லவர்களைக் கெடுப்பதே இன்றைய சீரியல்கள் தான்! காலைமுதல் இரவு வரை வீட்டைப் பாழாக்குகின்றன

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      புலவர் அய்யாவின் புதிய வருகை கண்டு களிப்புற்று பூரிப்படைகின்றேன்!
      வீட்டை பாழ்படுத்தும் சீரியலை புறக்கணித்தால் சிறப்புறும் தமிழகம்.
      தங்கத்தின் மீதான மோகமும்,
      சீரியலின் மீதான தாகமும் தீரும் நாளே நமக்கெல்லாம் இனிய நன்னாள் அய்யா!
      வருகைக்கு சிறப்பு நன்றி!
      தொடர்ந்து நல்லாதரவு நல்கிட வேண்டுகிறேன்.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. சூப்பர் ஐடியா...

    RépondreSupprimer
    Réponses
    1. வெள்ளை ரோஜாவின் பளீர் வெண்மை கருத்து
      பளீச்சிடுகிறது! பாராட்டுக்கள்!
      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  20. சீரியல் இல்லா உலகு வேண்டும்
    அருமை நண்பரே
    தம 11

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கரந்தையாரே!
      என்று தணியும் இந்த சீரியல் மோகம்!
      மோக தாகம் தீரும்வரை கண்ணீர்க் குடம் வற்றாது நண்பரே!
      வருகைக்கு மிக்க நன்றி!

      (கரந்தையாரே! வாக்கு பெட்டியை கண்டீரா?)

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  21. அழுகை சீரியலை வைத்து உருவாக்கப்பட்ட கவிதை மிக அருமை. நான் ஒரு சீரியல் கூட பார்ப்பதில்லை நம்புங்க சகோ.

    RépondreSupprimer
  22. நல்லோர் ஒருவர் இருப்பின்
    அவர்பொருட்டு அனைவருக்கும் பெய்யும் மழை!
    சீரியல் பார்க்காத சிறப்பினை அறிந்து வியந்தேன்!
    வருகைக்கு மிக்க நன்றி!
    தொடர்க!
    (விருப்பம் இருப்பின் வாக்கு பெட்டியில் வாக்கு அளிக்கலாம்)

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  23. முதலில் அந்த படம் சூப்பர்,
    அப்புறம் உங்களோட அந்த கவிதை.... அருமை.

    RépondreSupprimer
  24. வாருங்கள் சொக்கன் அவர்களே!
    உண்மையானவனை காணாது உலகம் உழலாது
    நின்று விடுமோ? என்று வலைப்பூவுலகம் வருந்தியது
    உண்மை நண்பரே!
    தாங்கள் தந்த அந்த இடைவேளையில் தான் தங்கள் பதிவின் தாக்கம்
    எங்களுக்கு புரிந்தது
    "முதலில் அந்த படம் சூப்பர்" அதைவிட 'போவோமா ஊர்கோலம்" படம் சூப்பரோ சுப்பர்.
    வருகைக்கு நன்றி! தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer