lundi 30 mars 2015

உயர்ந்த மனிதன் உருவான தினம் (Eiffel Tower )

இன்று ஒரு தகவல்



 மார்ச் 31, 1889 அன்று, ஈபிள் கோபுரம் "கஸ்டவ் ஈபிள்" வடிவமைப்பாளர் தலைமையில் நடந்த ஒரு விழாவில் பாரிசில்  மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று!









பிரஞ்சு நாட்டில் (France) உள்ள, ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889,

மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது.

இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு
நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள் இதோ:-
 

1.
கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2.
கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

3.
இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

4.
இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

5.
வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

6.
இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .
இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

 
இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

7.
இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது.
பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

8.
கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

9.
அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

10.
இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

 

புதுவை வேலு

நன்றி:பட உதவி கூகுள்




மக்களின் மனதில்  உயர்ந்து நிற்பவர் இவரே!




மக்களின் இதயத்தில் இருளிலும் ஒளிர்பவர் இவரே!











 உருவாக்கிய கலைஞர்



                                     கஸ்டவ் ஈபிள்   



 

நன்றி:பட உதவி கூகுள்





29 commentaires:



  1. ஈபிள் கோபுரம் அதை வடிவமைத்தவர் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது தெரியாத தகவல். இதுவரை இந்த கோபுரக்த்திய வண்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் ஆச்சரியமான தகவலே!

    RépondreSupprimer
    Réponses
    1. அறியாத தகவலை அறிந்தவுடன்,
      ஆனந்த பெருக்கோடு கருத்தை அள்ளித் தந்த வானமாய்
      வருகை தந்து சொல்லிய நடன சபாபதி அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஈபிள் கோபுரம் பற்றிய வியக்க வைக்கும் தகவல்களுக்கு நன்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரே!
      தங்களது கருத்து புயல் பின்னூட்டத்தில்
      சிக்காது சிரித்தபடியே ஈபிள் டவர் பதிவு
      பகர்கின்றது நன்றியினை உயர்ந்த உள்ளத்தோடு சிரித்தபடி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா
    ஈபிள் கோபுரம் பற்றிய தகவல் வியப்பாக உள்ளதுதங்களின் பதிவு வழி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      கவின்மிகு கருத்து
      எழில்மிகு நடையுடன்
      மகிழ் நடனம் புரிந்தமைக்கு
      உளமகிழ் நன்றி எப்போதும்
      உமக்கே உரித்தாகும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கல்லூரி நாள்களில் நூலகத்தில் ஈபிள் கோபுரத்தினைப் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை வாசித்துள்ளேன். தங்களது பதிவு அந்நாள்களை நினைவுபடுத்தியது. நல்ல பகிர்வு.

    RépondreSupprimer
    Réponses
    1. பசுமை நிறைந்த நினைவுகளை
      இந்த பதிவு மீட்டெடுத்த தகவலை சொல்லி
      கருத்தினை வடித்த முனைவர் அய்யாவுக்கு
      மிக்க நன்றி!
      வருகை தொடர்க அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஈபிள் கோபுரம் பற்றி இதுவரை அறியாத விடயங்கள். நன்றி சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. இதுவரை அறியாத விடயத்தை வியப்புடனே
      கண்டுவிட்டு பாராட்டைத் தந்தமைக்கு
      மிக்க நன்றி சகோதரி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான பகிர்வு. இரவில் மின்விளக்கு ஒளியில் பார்க்க ஈபிள் டவர் அழகாய் இருக்கும்

    RépondreSupprimer
    Réponses
    1. ஈபிள் டவர் அழகினை ரசித்து, பதிவினை பாராட்டி கருத்தினை தந்த "தனிமரம்" புகழ் சிறக்கட்டும் சிறப்புத் தமிழ் போல்!
      வருகை தொடர்க நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வணக்கம் நண்பரே

    உயர்ந்த கோபுரத்தை பற்றிய உயர்வான பதிவு !

    இன்று பிரான்ஸின் சின்னமாய் உலக மக்களின் மனதில் பதிந்த இந்த் இரும்புக் கோபுரம் பல சுவையான இன்னல்களையும் சந்தித்துள்ளது !...

    பொருட்காட்சியின் போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த கோபுரம் பாரீஸ் மாநகரின் கலை அழகுக்கு இழுக்கென கூறி தடை கேட்டுள்ளனர் பாரீஸ் மாநகர கோமான்கள் ! அதையும் தாண்டி நிரந்த இடம் பிடித்த ஈபிள் டவரை அறுபதுகளின் மத்தியில் ஒரு தனிமனிதன் தன் சொத்தென கூறி ஏலம்விட முயன்ற வேடிக்கையும் நடந்துள்ளது !

    சென்ற ஆண்டு ஒரு வியாபார நிறுவனம், பசுமைக்கான விளபரம் என கூறி கோபுரம் முழுவதையும் செடிகளால் மூடும் யோசனை ஒன்றை முன்வைத்து வாங்கிக்கட்டிக்கொண்டது !

    பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு பரிசாக அளித்த சுதந்திர தேவி சிலையின் வடிவமைப்பிலும் கஸ்டவ் ஈபிளுக்கு பங்குண்டு.


    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் சாமானியரே!
      புதிய படைப்பினை படையலிட்டுவிட்டு
      பார்சலாக கம கமக்கும் கருத்தினை கொண்டு வந்து கொடுத்தமைக்கு
      ஈபிள் டவர் உயரத்து நன்றி!
      பதிவுக்கு மேலும் பல தகவல்களை தந்து சிறப்பு சேர்த்தமைக்கு பாராட்டினை பகிர்ந்தளிக்கின்றேன் நண்பரே!

      உயர்ந்த கோபுரத்தை பற்றிய உயர்வான பதிவு!
      உங்களது உள்ளன்புமிக்க கருத்து சிறப்படைய வாழ்த்துகள்§
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அறிய தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டேன்.
    தமிழ் மணத்தில் நுளைக்க 7

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா!
      அறிய தகவல்களை அறிந்தமைக்கும்,
      தமிழ்மணம் பூவினை பூக்க செய்தமைக்கும்
      பூரிப்புமிகு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தகவல்கள் சிறப்பு த.ம 8 வரிசை

    RépondreSupprimer
    Réponses
    1. சிறப்புமிகு தகவலுக்கு
      சிவப்பு கம்பள கருத்தோடு
      கவின்மிகு வாக்கினை அளித்தமைக்கு
      தோழர் வலிப் போக்கன் அவர்களுக்கு
      குழலின்னிசையின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அன்புள்ள அய்யா,

    Eiffel Tower - பற்றிய முழு விவரங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் கொடுத்தது அருமை.

    நன்றி.
    த.ம. 9.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் மணவை ஜேம்ஸ் அய்யா அவர்களே!
      ஈபிள் கோபுரம் பற்றிய முழு விவரங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் குழலின்னிசை மூலம் அறிந்தமைக்கும், அருங்கருத்தை, வலிமைமிக்க வாக்கோடு தந்தமைக்கும், உயர்ந்த நன்றி உரித்தாகுக!
      வாருங்கள் வலைப் பக்கம் தொடர்ந்து, அருங்கருத்தைஅமுதாய் தருக!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அறியாத பல செய்திகளை வழங்கியமைக்கு நன்றி நண்பரே
    தம+1

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான தகவல்கள் ஐயா! மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. கோபுரம் பற்றிய தெரியாத பல தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    RépondreSupprimer
  14. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  15. உலக அதிசயத்தில் ஒன்றை சிறப்பாக விளக்கிய விதம் சிறப்பு புதுவை வேலு அவர்களே. நாள் முழுவது கோபுரம் எப்படி இருக்கும் என்பதை படங்கள் மூலம் நேரத்திற்கு ஏற்ப கோர்த்த விதம் அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. ஈபிள் பற்றி கூகிளில் தேடினாலும் கிடைக்காத பல விசயங்களை தந்துள்ளீர்கள் நன்றி !!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer