jeudi 17 septembre 2015

"பூத்துக் குலுங்குதடி புதுக்கோட்டை"




பூத்துக் குலுங்குதடி புதுக்கோட்டை
வலைப் பூ கோட்டை ஆனதடி
காத்து கிடப்போமடி பத்தாம் மாதமடி
நாத்து நடுவோமடி வலைப் பயிர் வளருமடி



பண்பு தழைக்குமடி பாரெல்லாம் சிறக்குமடி
நான்காம் ஆண்டாமடி பதிவர் சந்திப்பாமடி
ஆலங்குடி சாலை வலைச் சோலையாகுமடி
தமிழ்த் தாளத்திலே எகத்தாளம் அழியுமடி



ஒற்றுமை ஓங்கார ஓசை இசைக்குமடி
ஒவ்வாத வேற்றுமை ஒளிராது போகுமடி
ஒர் குடும்பம் ஒன்றாய் வாழ்வோமடி
ஓர் சொல்லால் "நன்றி" சொல்வோமடி!



வலைப் பதிவர் நான்காவது மாநாடாமடி
வளரும் கவிதை போல் வாழுமடி
பலரும் போற்ற வழி வகுக்குமடி
பல்லாண்டு சிறந்து வாழுமடி!



 புதுவை வேலு









36 commentaires:

  1. அருமை நண்பரே மிகவும் அருமை தங்களின் பங்களிப்புக்கு எமது வாழ்த்துகள்

    RépondreSupprimer
  2. ஒற்றுமைக் குரல் கேட்டு ஓடி வந்து தந்த
    முதல் ஓட்டு முதல் வாக்கு முக்கனியே முத்தமிழே!
    நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. அருமை....

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வாருங்கள் நண்பரே!

      "பலரும் போற்ற வழி வகுக்குமடி
      பல்லாண்டு சிறந்து வாழுமடி!"

      அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. புதுக்கோட்டை விழாவிற்கு கைகோர்த்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் முனைவர் அய்யா அவர்களே!

      ஒற்றுமை ஓங்கார ஓசை இசைக்குமடி
      ஒவ்வாத வேற்றுமை ஒளிராது போகுமடி

      ஒர் குடும்பம் ஒன்றாய் வாழ்வோமடி
      ஓர் சொல்லால் "நன்றி" சொல்வோமடி!

      அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வாருங்கள் கரந்தையாரே!
      "பூத்துக் குலுங்குதடி புதுக்கோட்டை
      வலைப் பூ கோட்டை ஆனதடி"
      அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. "வலைப் பதிவர் 4வது மாநாடாமடி
      வளரும் கவிதை போல் வாழுமடி"
      வாருங்கள் வலைச் சித்தரே!
      அருமை பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Updated...

    Visit : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரே!
      கைவண்ணம், வலைப் பூ
      கலை வண்ணம் கண்டேன்,
      எண்ணமெல்லாம் என்றும் எங்கள் DD
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா
    அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நன்றி நண்பரே. மிக்க நன்றி தங்களின் பதிவிற்கும், இதுவரை விழாவுக்கான நன்கொடை தந்தோரில் மிக அதிகத் தொகை தனிநபரில் முதலிடத்தில் நிற்பதற்குமான உதவிக்கும்..நன்றி நன்றி நன்றி. தங்களின் வாழ்த்துரை ஒன்றை எழுதியனுப்புங்கள் விழாவுக்காக.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      மிக நல்ல விடயம்,
      தோள் கொடுத்து களப் பணியாற்றும் அனைத்து வலை உறவுகளுக்கும்
      நன்றி கலந்த பாராட்டுக்கள்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அன்புடன் - நா.முத்துநிலவன். (த.ம.வாக்குடன்)

    RépondreSupprimer
    Réponses
    1. "வலைப் பதிவர் நான்காவது மாநாடாமடி
      வளரும் கவிதை போல் வாழுமடி"

      வணக்கம் அய்யா!
      வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி!
      வலைப் பதிவர் சந்திப்பு மாநாடு பெரு பெற்றி பெற நல்வாழ்த்துகள்.

      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Réponses
    1. அழைப்பினை ஏற்றமைக்கு நன்றி முனைவரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வலைப்பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துப்பா பாடியுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "பூத்துக் குலுங்குதடி புதுக்கோட்டை"
      'வாழ்த்துப்பா' வை பாராட்டி சிறப்பித்தமைக்கு
      கரம் குவித்து நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஆஹா அருமை ....தாங்கள் மிக ஈடுபாட்டுடன் கவிதையும் தந்து நன்கொடையும் தந்து அசத்தி விட்டீர்கள் ...மிக்க நன்றி சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      சிறப்பான பணியினை ஏற்று உள்ளீர்கள்
      தங்களது பணி சிறக்க நல்வாழ்த்துகள்.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. மிக்க மகிழ்ச்சி புதுக்கோட்டை பூத்து குலுங்கட்டும்......

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் தோழரே!
      தங்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்று விட்டேன்.
      நீண்ட இடைவெளி. வருகை சிறப்புற அமையட்டும்.
      நன்றி தோழரே!
      !
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. பாடல் வழி பதிவர் சந்திப்பின் சிறப்பைச் சொன்னவிதம் அருமை. பாராட்டுகள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      "படம் சொல்லும் பாடம்" மூலம் கருத்தினை சொல்லி வந்தேன்
      இப்பொழுது,
      பாடல் மூலம் வலைப் பதிவர் மாநாடு வெற்றிக்கு வாழ்த்தினை சொல்லி நின்றேன்.
      வருகை சிறக்கட்டும்.
      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அருமை புதுவையாரே,,,,,

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      தங்களது வருகையால்
      குழலின்னிசை சும்மா குலுங்குது இல்ல....
      ஆஹா! இது எப்படி இருக்கு?

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. விழா வெற்றி நிச்சயம்
    பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/t.html

    RépondreSupprimer
  18. வெற்றி நிச்சயம்
    இது வலை பூக்களின்
    வேத சத்தியம்!
    குட்டன் ஜி காட்டில் வெற்றி மழை பொழியட்டும்.
    நன்றி!
    தொடர் வருகை புரிக!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  19. ஆகா
    புரவலர்
    பரப்புரை புரவலராகவும் ஆக மாறிவிட்டீரா நன்றிகள் தோழர்.

    RépondreSupprimer
  20. "வலைப் பதிவர் சந்திப்பு மாநாடு 2015"
    தோழரே!
    தங்களது உழைப்பின் வாசம் பாரிஸ் வரை பரவியுள்ளது.
    அது அகிலம் முழுவதும் வலம் வர வேண்டும் என்பதுவே
    குழலின்னிசையின் விருப்பமும். வாழ்த்துகள் தோழரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  21. Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer