mardi 29 septembre 2015

இதயத்துள் தமிழ் உதயம்







இலக்கிய விழா! இங்கு இனிதுவக்கும்
இலக்கில் சிலர் சுயம் பிறக்கும்
கலக்கம் காரிருள் போல் கருக்கும்
விளக்கம் கேட்பின் விழி சிவக்கும்!

நல்லாசான் நானிலத்தில் நம் கல்லாமை
பொல்லாமை தீண்டாமை பொலிவு இழக்கும்!
சொல்லாசான் தோட்டத்தில் செந்தமிழ்ப் பூ
வெல் செந்தேன் தமிழ் வடித்தெடுக்கும்.


வித்தை கர்வம் வீதிக்கு உதவாது
நத்தை நடை வேகத்தை வெல்லாது
தமிழ் சொத்து தரும் நற்பண்பே!
அமிழ் வித்தாகும் இதயத்துள்!

புதுவை வேலு

                 ( 29/09/2015 - இன்று உலக இதய தினம்)



16 commentaires:

  1. இன்று உலக இதய தினம்,,,,
    தங்கள் பா வரிகள் அத்துனையும் அருமை,
    வாழ்த்துக்கள் புதுவையாரே,,,,,,,

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      "உலக இதய தினத்தில்" கேட்டது! தங்களது முதல் லப் டப் சத்தம்!
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம் நண்பரே... நலமா அருமை ரசித்---தேன்---- நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. படித் தேன் தந்தமைக்கும் நன்றி என்னும் தமிழ்த் தேன் நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உலக இதய நாளில் உதயமான உங்கள் கவிதையை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. இதயத்துள் எழுந்த தமிழ் உதயத்தை கண்டு வாழ்த்தியமைக்கு
      மிக்க நன்றி வே.நடன சபாபதி அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை
    ரசித்தேன்
    நன்றி ந்ண்பரே
    தம 2

    RépondreSupprimer
  5. இதயத்துள் எழுந்த தமிழ் உதயத்தை கண்டு வாழ்த்தியமைக்கு
    மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. வணக்கம் நண்பரே! இனியத்தின் இனிய கவிதை! ரசித்தேன் நன்றி!!!

    RépondreSupprimer
  7. இதயத்துள் எழுந்த தமிழ் உதயத்தை கண்டு வாழ்த்தியமைக்கு
    மிக்க நன்றி கரூர்பூபகீதன் அவர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. இதயத்துள் உதித்த தமிழ்க்கவிதை அருமை.

    RépondreSupprimer
  9. இதயத்துள் எழுந்த தமிழ் உதயத்தை கண்டு வாழ்த்தியமைக்கு
    மிக்க நன்றி முனைவர் அய்யா அவர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. நத்தை நடை இதயத்திற்கு இன்பம் அருமை புதுவை வேலு அவர்களே.
    கர்வம் வீதிக்கு உதவாது, உண்மையா? யாம் அறியேன் பராபரமே.

    sattia vingadassamy

    RépondreSupprimer

  11. தமிழ் சொத்தை யாரும் பங்கு போட முடியாது என்பதுவே!
    கர்வம் வீதிக்கு உதவாது பராமரமே!!!
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. உலக இதய தினம்.....

    தகவலும் கவிதையும் நன்று. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்று பாராட்டிய நண்பருக்கு
      குழலின்னிசையின் அன்பு கலந்த நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer