samedi 19 septembre 2015

" புள்ளினம் சொல்லும் புதுப் பாடம் "



இறை தேடும்
பறவை பல உண்டு!                                                                                                              
















நல்ல கூடு கட்டும்
"பறவை"

இங்கு உண்டு!!!






இலவச வீடு
இழிவாகும்




   வேலை தெரிந்த பட்டதாரியோ?



நலமிகு உழைப்பு
உயர்வாகும்







நினைந்து நினைந்து
கட்டிய  மண் கூடு






துணையுடன் வாழும்
தூய இல்லத்திற்கு இல்லை ஈடு






வாயில் காவலர் 



பறவையின்
மொழி அமுதம்
பண்பாடு பாடட்டும்




புள்ளினம் சொல்லிய புதுப் பாடம்
சந்தனக் காற்றாய் நம் மனதில் மணக்கட்டும்.



புதுவை வேலு

படங்கள் : இணையம்

22 commentaires:

  1. Réponses
    1. வருக! நண்பர் நாகேந்திர பாரதி அவர்களே!
      தங்களது முதல் வருகைக்கும், பாரதியின் பாராட்டு மொழிக்கும்
      பண்பான நன்றி!
      நண்பரே! தங்களது வலை இணைய முகவரி தந்துதவ வேண்டுகிறேன்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. படங்கள் அருமை. அவைகளுக்கு தந்துள்ள தலைப்புக்கள் அதைவிட அருமை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. படங்களை ரசித்தோடு, அதன் தலைப்புகளயும் ரசித்து பாராட்டியமைக்கு
      அன்பின் நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான படங்கள்.... சிறப்பான கருத்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      தங்களது வருகையும், கருத்தும் குழலின்னிசையை வளப் படுத்தும்.
      தொடருங்கள் தலை நகரத்தாரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. படங்களுடன் விளக்கம் அருமை
    சிறந்த பகிர்வு

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி அய்யா!
      அதேவேளையில் தங்களது,

      "முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!"

      பண்பாடு தற்போது செல்லும் பாதையின் போதையை படித்தபோது
      தமிழனாய் தலை குனியவேண்டிய வேதனைத் தீயில் வெந்தேன்.
      நல்ல பாடம் சொல்லியமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான படங்கள். நல்ல பாடம். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. படங்களுடன் கைகோர்த்து நின்ற பாடங்களை
      பாராட்டிய பண்புக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன்
      முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. புள்ளனம் சொல்லிய புது பாடம் தந்த புதுவையாரே வாழ்த்துக்கள்.
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. புள்ளினம் சொல்லிய புதுப் பாடத்தை
      உள் வாங்கி அதன்படி வாழ்வோம்
      நற்பெருமையினை பெறுவோம்!
      வாழ்த்துக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. மண் கூடு கட்டும் குருவிகளை இப்போதுதான் பார்க்கிறேன்! படங்களும் வரிகளும் மிகப்பொருத்தம்! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. படத்துடன் பகன்ற கருத்தினை வாழ்த்திய நண்பருக்கு மிக்க நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எழுத்தோவியம் பிரமிப்பு.
    வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.


    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. எழுத்தோவியம் கண்டு கருத்தோவியம் வரைந்த நண்பர் சத்யாவுக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அருமையான வீடு நண்பரே,

    RépondreSupprimer
  10. வாருங்கள் நண்பரே!
    குருவி போல் சிறுக சிறுக சேமித்து கட்டிய உமது வீடு கண்களுக்கு காட்சி அளித்ததா?
    அருவி போல் வந்து கருத்தினை தந்தமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. மண் வீடு..அசத்தல் வீடு ஐயா! பார்த்திருக்கின்றோம் இவ்வீடுகளை...

    RépondreSupprimer
    Réponses
    1. மிக்க நன்றி நண்பரே!
      வாழ்த்தும் பண்புக்கு என்றும் குழலின்னிசை தலை வணங்கும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. மணல் வீடு கட்டும் குளவிகளும், வண்டுகளும் மற்றும் பட்டாண்பூச்சிகளும் கட்டியதை பார்த்திருக்கிறேன். மணலில் குருவி வீடு புதுமை, ஆனால் தமிழ்மணம் ஒட்டு 4/4 என்றால் என்ன ? 100% தானே புதுவை வேலு அவர்களே. இதிலும் அரசியல் உண்டா என்று தெரியவில்லை பராபரமே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      தங்களின் வருகை மகிழ்ச்சி!
      தமிழ்மணம் வாக்கு அளிப்பது என்பது அவரவர் விருப்பம்!
      குழலின்னிசையின் பதிவுகள் தமிழ்மணத்தின் மூலம் மேலும் பல வாசகர்களை சென்றடையாமல் போய்விடுகிறது அவ்வளவுதான்! வேண்டுமாயின், தமிழ் மணம் பட்டையை எடுத்து விடுகிறேன். வருபவர்கள் விருப்பத்துடன் மேலும் வரட்டும்! குழலின்னிசையின் தமிழ்ப் பணி தொடரும் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer