‘பிறருக்கு கொடுக்கும்போது கொடுப்பவருக்கு
நெகிழ்ச்சியும்,
வாங்கும் போது வாங்குபவருக்கு
நெருடலும் இருக்க
வேண்டும்’.
எங்கேயோ கேட்ட குரல் ! அவனது மனதில், அன்று எதிரொலித்தது.
இந்த வாசகம் யாருக்கு பொருந்தும்?
"கடன்" கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும்தானே!
நமக்கு பொருந்தாது அல்லவா? என்றே அவனது உள்மனது
உண்மையை உணர்த்தியது.
சட்டென்று தனது உள்ளங்கையை உற்றுப் பார்த்தான் உமாபதி!
முழங்கை நெய் மணக்க ஏற்கனவே, உலகளந்த பெருமாள் கோயில்
பட்டரிடமிருந்து, அவன் வாங்கிய
சர்க்கரைப் பொங்கல் வாசமும், பிசுபிசுக்கும் நெய் வாசமும் உள்ளங்கையில்
உறுதி செய்தது.
ஆம்! நாம் திரும்பவும் கை நீட்டி கேட்கும்போது, என்ன? இரண்டாவது முறை வாசமா? என்று முகத்தை ஏரெடுத்துப்
பார்த்துக் கேட்டு விட்டால்? என்ன சொல்வது?
சரி! கூட்டம் சற்று குறையட்டும்.
பிறகு போகலாம் என்று அவனது உள்மனது உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அவன் தடையை
தகர்த்தெறிந்தான்.
எதற்கு ? பிரசாதம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது?
என்று சற்று தயக்கத்துடனே சென்று கையை நீட்டினான்.
உலகுக்கு படி அளக்கும் பெருமாள் அன்று அவனக்கு இரண்டாம் முறை
எவ்வித கேள்வியும் கேளாமல் படி அளந்தார் பட்டர் வடிவில்.
நாம் உண்ணும் ஒவ்வொரு
பருக்கையும் யாருக்கு போய் சேர வேண்டும் என்ற தத்துவத்தை அளித்தவர் அறிய
மாட்டாரா என்ன?
பிரசாதத்தை பெற்றுக் கொண்டு விறு விறுவென்று கோபுரத்தின்
படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தான்.
கோயில் மண்டபத்தின் வாயிலருகே
அமர்ந்திருந்த ஊனமுற்ற பாட்டியிடம் பிரசாதத்தை
மிக்க மகிழ்வோடு கொடுத்துவிட்டு இரண்டாவது முறையாக சேவித்தான்.
இரண்டாம் முறை சேவித்தது பெருமாளை அல்ல! பெருமாட்டியை!!!
புதுவை வேலு
அருமை நண்பா முடிவில் நல்லதொரு திருப்பம் வாழ்த்துகள்
RépondreSupprimerஓட்டுப்பட்டை எங்கே ?
முடிவினை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தமிழ் மணம் 1
RépondreSupprimerநன்றி நண்பா!
Supprimerபருக்கையில் யார் பெயர் உள்ளதோ. கதை அருமை
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerதம +1
'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
பிரசாதம் சிறுகதை ‘பிரமாதம்’ வாழ்த்துக்கள்!
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பிரசாதம் சிறுகதை அற்புதம் சகோ.
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி சகோ.
நட்புடன்,
புதுவை வேலு
இளைய மகாமகத் தீர்த்தவாரிக்குச் சென்றபோது இந்த அனுபவம் எனக்கும் கிடைத்தது. மனது நிறைவாக இருந்தது.
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பெருமாட்டியை இன்னொரு முறையும் சேவிக்கலாம் ,தப்பில்லை !
RépondreSupprimerத ம 4
'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
முடிவில் திருப்பம்...அருமை...
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
யார் வடிவிலாவது பெருமாள் படி அளந்து கொண்டுதான் இருக்கிறார்! சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
Supprimerசிறப்பு நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கதை. பாராட்டுகள்.
RépondreSupprimer'பிரசாதம்' உண்டு மகிழ்ந்து உயர் கருத்து என்னும் விருந்தை காண்போர் விழிகளுக்கு தந்தமைக்கு
RépondreSupprimerசிறப்பு நன்றி நண்பரே
நட்புடன்,
புதுவை வேலு