vendredi 7 août 2015

"ஒற்றுமை ஓம்புக!"


படம் சொல்லும் பாடம்

                                              (பட உதவி: மாலைமலர்)



மனித இனம் அறியாத பாடம்
வேற்றுமை வேரறுக்கும் கூடம்
போற்றுக பொருளுணர்ந்து நாடும்
ஒற்றுமையால் வேற்றுமையும் ஓடும்!


விலங்கினம் பெயர் வைத்தது யாரு?
விலங்கிட்டு வளர்த்தவர் பெயர் கூறு?
களங்கமில்லா நட்பை இங்கு பாரு?
வலம் வரட்டும் ஒற்றுமையெனும் தேரு!

புதுவை வேலு


16 commentaires:

  1. அன்புள்ள அய்யா,

    "ஒற்றுமை ஓம்புக!" படம் சொல்லும் பாடம் நல்ல பாடம்...!


    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

    உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
    அணையாத தீபமாய் சுடரெங்கும் வீசுமே நெஞ்சில்
    உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
    உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
    வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

    துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
    வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
    இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
    கதையான போதிலும் கருத்துள்ள பாடமே

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

    நன்றி.
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      ஒற்றுமையை ஓங்கச் செய்யும் ஓர் அருமை பாடலை பாகப் பிரிவினை படத்தில் இடப்பெற்ற மருத காசி அய்யா அவர்களின் பாடலை நினைவுபடுத்தி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
      முழுப் பாடலையும் தந்து சிறப்பித்து கருத்திட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த பாடலின் முதலில் வரும் தொகையறாவையும் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
      தொகையறா:-
      மந்தரையின் போதனையால்
      மனம் மாறி கைகேயி
      மஞ்சள் குங்குமம் இழந்தாள்
      வஞசக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
      பஞ்சப் பாண்டவரை பகைத்து அழிந்தார்
      சிந்தனையில் இதையெல்லாம்
      சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
      மந்த மதியால் அறிவு மயங்கி
      மனம் போனப் படி நடக்கலாமோ?
      ஓ... ஆ... ....

      ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
      வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே

      மிக்க நன்றி நண்பரே! தொடருங்கள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமை நஅபரே அவைகளுக்கு 5 அறிவு 80தை ஏற்க முடியாது

    RépondreSupprimer
    Réponses

    1. ஆறாவது அறிவை அடகுவைக்க இருக்கவே இருக்கிறது சிலருக்கு டாஸ்மார்க் கடை!
      நல்ல கருத்து நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. மனித இனத்தின் மாபெரும் சாபம் இனக்குழு வாழ்க்கை

    ஒரு காலத்தில் சவுரியம் இன்றோ...
    சாபம்
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. இனக்குழு வாழ்வின் இழிவை போக்கும்
      உன்னத உறவை உயிராய்க் கொள்வோம்!
      நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. வலம் வரட்டும் ஒற்றுமையெனும் தேரு!
      'குழலின்னிசை'
      தளம் வந்து பாராட்டிய நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்,
    நல்ல படம் அழகிய பா,
    ஒற்றுமை என்பது ஓர் இனத்துக்கான அடையாளமாக என்னால் ஏற்க இயலவில்லை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. ஒற்றுமை என்னும் குணமே
      வாழ்வில்....
      வேற்றுமையை வேரறுக்கும் தினம்!
      வருகையும், வாழ்த்தும் குழலின்னிசைக்கு
      என்றும் சிறப்பினை சேர்க்கும்.
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. மனிதத்தையும் நேசத்தையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியதை உணர்த்தும் அழகிய படம், மற்றும் பதிவு. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. பதிவையும், படத்தையும் பாராட்டி வாழ்த்திய முனைவர் அய்யாவின் கருத்தை வணங்கி மகிழ்கிறேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நேசம் வளர்ப்போம்....

    நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.

    RépondreSupprimer
  8. தங்களது பாராட்டும் பண்பானது
    நிச்சயம் நேசத்தை நேர்வழி படுத்தும்
    வணங்கி ஏற்கின்றேன் நண்பரே! நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. இதற்கு பெயர்தான் அன்பு! இது என் மகள் ஜனனி கூறிய கருத்து! நன்றி!

    RépondreSupprimer
  10. அறிவுப் பூர்வமான கருத்தினை
    அன்பு என்னும் சொல் எடுத்து தந்த
    தங்களது தங்க மகளுக்கு வாழ்த்துகளும்/பாராட்டுக்களும்!
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer