அண்மையில் நடந்த புலி இசை வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் இளைய தளபதி விஜய்யை ஓவராக புகழ்ந்து
பேசினார்.
இதை பார்த்த விஜய் மேடைக்கு ஓடி வந்து
அவரின் பேச்சை நிறுத்துவதற்கு படாத பாடு பட்டார் என்றே சொல்ல வேண்டும். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.
தனக்கே உரிய, அடுக்குமொழியில் பேசினார்
டி.ராஜேந்தர்.
விஜய், டி. ராஜேந்தருக்கு முன்பு
இயக்குனர்கள் தரணி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர்
விஜய்யை பாராட்டி பேசினார்கள். அப்பொழுது எல்லாம் விஜய் அமைதியாக பார்த்துக்
கொண்டிருந்தார்.
ஆனால், டி. ராஜேந்தர் மேடையில் ஏறிய
வேகத்தில் 'விஜய்' யின் புகழ்பாடத் துவங்கிவிட்டார். மாலை வணக்கத்தையே, அமைந்தது நல்ல தலைவிதி அதனால் தான் தமிழகத்தின் இளைய தளபதி.
இளைய தளபதியாய் இந்த ரசிக பட்டாளத்தின் அன்புக்குரிய
அதிபதியாய் இருக்கக் கூடிய விஜய்யின் புலி திரைபடத்தின் இசை வெளியீ்ட்டு
விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கத்தை தெரிவித்துக்
கொள்கிறேன் என விரிவாக தெரிவித்தார்.
ராஜேந்தர் பேசத் துவங்கியதுமே
விஜய் தனது இருக்கையில் லேசாக நெளிந்தார்.
பின்னர் அவர் புகழப் புகழ, விஜய்யால்
வெட்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
புலிக்கு புகழாரம்:
புலி, புலி நாட்டில் இருக்கலாம்,
காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி,
ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி,
அட்டாக் பண்ற புலி,
அட்டகாசமான புலி,
அசத்தலான புலி,
அசுர புலி,
அசரா புலி,
அற்புத புலி,
அபூர்வ புலி
என அடுக்கிக் கொண்டே போனார் டி.ஆர்.
ஓடி வந்த விஜய்
புலி, புலி, புலின்னு டி. ராஜேந்தர் அடுக்கிக்
கொண்டு போனதை பார்த்த விஜய், தனது இருக்கையில் இருந்து எழுந்து, மேடைக்கு ஓடி வந்து
அவரைப் பிடித்து பேச்சை நிறுத்த முயன்றார்.
ஆனால் டி.ராஜேந்தரோ தொடர்ந்து பேசினார்.
விஜய் ஒரு சால்வையை எடுத்து
ராஜேந்தருக்கு போர்த்தி அவரது பேச்சை ஒரு வழியாக நிறுத்தினார். ராஜேந்தரோ அதே
சால்வையை விஜய்க்கு போர்த்தி அழகு பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியின் காணொளியை கண்டதும்
என் மனதிலும் சீறிப் பாய்ந்தது ஒரு குட்டிப் புலி,
1) புலிக்கு
பிடிச்சிருக்கும்
சளி !
(ஓவர் ஐஸ் = விஜய்க்கு பிடிச்சிருக்கும் ஜலதோஷம்)
2) சளிக்கு காரணம் !
உறவைக் காத்தக் கிளி (டி.ராஜேந்தர்)
நடிக்க வில்லை எலி !
(வடிவேலு)'
4) 'புலி'யை செதுக்கியது
சிம்புத்தேவன் என்னும் உளி !
5) இந்த காணொளி 'புலி'யைக் கண்டால்
நிச்சயம் வரும் அனைவருக்கும்
சிரிப்பு வலி!
புதுவை வேலு
நன்றி: (பிலிம் பீட்/ filmibeat)
ROFL
RépondreSupprimerஇன்னொரு விசயமாகவும் தெரிகிறதே...
புலி என்கிற பெயரை மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லி தடை ஏதும் வந்துவிடப் போகிறது என்று நினைத்தாரோ என்னவோ...
தோழரே! வணக்கம்.
Supprimerநடிகர் விஜய் யின் நாடித் துடிப்பை அறிந்து கருத்து வெளிட்ட தோழர் எப்போது மருத்துவர் மது வாக மாறினார்?
உண்மையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு!
நட்புடன்,
புதுவை வேலு
தம +
RépondreSupprimerநன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ராஜேந்தரின் பாதிப்பு உங்களையும் விடவில்லை போலிருக்கிறது. நன்றி. தமிழ்மணம்+1
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா!
Supprimerதங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களின் வருகை பாதிப்பு இல்லாத வகையில், இது போன்ற ரசனை உணர்வு பாதிப்பு வருவது தவறில்லை என்றே தோன்றுகிறது அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
புகழ்வதற்கும் ஒரு எல்லை வேண்டும். அதிகம் புகழ்ந்தால் அது கேலிக்குறியதாகிவிடும். சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
RépondreSupprimerவணக்கம் அய்யா!
Supprimerகுழலின்னிசையில் இதுபோன்ற பதிவுகள் இடம்பெறுவதற்கு தங்களது கருத்து என்னுள் மேலோங்கி எழுந்து நிற்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அருள்கூர்ந்து நமது
வலைப் பதிவர்களும் இந்நிலை உணர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றும் வாழும்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ராஜேந்தரின் பேச்சு
RépondreSupprimerதங்களையும் பற்றிக் கொண்டதுவோ
தம +1
வாருங்கள் கரந்தையாரே!
Supprimerதொற்றிக் கொள்ளலாம் வீழாத வரையில்,
ஆனால் தொடராமல் அல்லவா இருக்க வேண்டும்!
நன்றி நண்பரே நகைச் சுவையையாய் ரசித்தமைக்கு!
நட்புடன்,
புதுவைவேலு
அது மிக அதிகமான புகழ்ச்சிதான். புகழ்வதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே!
RépondreSupprimerத ம 4
அதிக புகழ்ச்சி ஆளைக் கொல்லும் ஆலகால விஷமாகவும் மாறும் என்பார்கள்
Supprimerஅதுபோன்ற நிகழ்வு வலைப் பூவுலகில் நிகழாது இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்நிகழ்வை சுட்டிக் காட்டி நெறிப்படுத்தியுள்ளேன் என்றும் கொள்ளலாம்.
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
புலி பற்றி புலி பேச
RépondreSupprimerநெஞ்சுக்குள் ஏற்படுதே கிலி!..
புகழ்ச்சி மொழி கேட்டு
புலி வந்திடப் போகுது..
ஆளை விடுங்க!..
மரபு புலிகளுக்கு மத்தியில்
Supprimerமறப் புலி அறம் பேசினால் எடுபடாதோ என்னவோ?
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
டி. ராஜேந்தர் எப்பவும் இப்படித்தான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எமோஷனல் ஆகி விடுவார். உங்கள் எதுகையும் சிறப்பு!
RépondreSupprimerதமிழ்த் தாய் கைகளில் உள்ள வீணையின் மோனை மொழியைக் கொண்டு எதுகையின் சிறப்பை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
Supprimerதங்களது கருத்து முற்றிலும் உண்மை!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி அய்யா!
RépondreSupprimerதங்களது வருகை சிறப்பு!
தவறாமல் தொடர்கிறேன் அய்யா நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் நண்பா இவங்களையெல்லாம் தளபதினு சொல்லும் பொழுது பத்திக்கிட்டு வருது நண்பா தலைவிதி வேறன்ன..... உண்மையிலேயே ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பட்டங்கள் கொடுக்க வேண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்........
RépondreSupprimerஎனக்கு தெரிந்த புலியெல்லாம் என் அம்மா மீன்குழம்புக்கு பயன்படுத்தும் சுவையை ஊட்டும் துணை பொருளே, அருமையான நகைச்சுவை விளையாட்டு புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy