mardi 18 août 2015

"ஆணவம் குளிர்ந்தது!"






அது ஒரு அந்நிய தேசம்! அங்கு வாழும் மக்களிடையே கவிதை பொற்பொழிவாற்ற சென்றார் ஒரு கவிஞர். அவர் மிகவும் தற்பெருமை மிக்கவராய் இருந்தார்.  ஒவ்வொரு நாளும் அவரது  தற்பெருமை! ஆணவம் வானத்தையே வில்லாக  வளைக்கும் வகையில் விரிந்த வண்ணம் இருந்தது.

அன்றும் அப்படித்தான், 
அவரது புலமை ஆற்றலை, தான் பெற்ற பட்டங்களால் பறை சாற்றியவாறு உச்ச ஸ்தாயில் சந்தக் கவி மூலம் சிந்து பாடினார்.

மக்களின் மனம் போன போக்கு மண்டபம் முழுவதும் எதிரொளித்தது. உரக்கப் பாடியதால் தாகம் அவரை வாட்டியது. தண்ணீர் வேண்டினார் கவிஞர். தண்ணிர்  கொண்டு வந்த ஒருவர்  அவரது தற்பெருமைக்கு  பாடம் புகட்ட எண்ணினார்.

அய்யா இப்பொழுது தங்களது தேவை என்ன?

தண்ணீர்!!!

இதைக் கொடுத்தால் பதிலுக்கு நீங்கள் என்ன தருவீர்கள்? என்றாரவர்.

அதற்கு அந்த கவிஞர் தான் வாங்கிய பட்டங்கள் முழுவதையும் தருவேன் என்றார்.

மீண்டும் தாகம் எடுத்தால் ?

இனி பெறப் போகும் பட்டங்கள் யாவையும் தருவேன் என்றார்.

ஒரு கோப்பை தண்ணீர் உமது வித்தைகளை,
வித்தையால் பெற்ற மதிப்புகள் அனைத்தையும் பெற்று விட்டதே பார்த்தீர்களா?

உயிரை தரும் தண்ணீர் ஒருபோதும் பருகும் மனிதரை பழி சொல்வதில்லை ! தற்பெருமை பேசுவதில்லை என்றார்.

தற்பெருமையோடு திகழ்ந்த கவிஞரின் கண்களில்.....
பருகிய தண்ணீரில் ஒருசில நீர் மட்டும்! 
கண்ணீராய் வெளியே வந்தது.

அன்றுமுதல் அவரது வித்தை கர்வமும்,  தற்பெருமையும் தண்ணீரால் கரைந்தது, ஆணவம் குளிர்ந்தது!. 


புதுவை வேலு

28 commentaires:

  1. Réponses
    1. நல்ல பாடம் என்று எடுத்துரைத்தமைக்கு நன்றி நண்பரே!
      தங்களது முதல் வருகையினை வரவேற்று மகிழ்கிறேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. மனதில் பதியும் வகையில் ஒரு பாடம். நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. வரவேற்று வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. வரவேற்று வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்லதொரு கருத்து நண்பரே இந்த ஆளை எங்கேயோ பார்த்தது மா3 இருக்கிறதே.....

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா!
      பொடி போடாமலே தும்புகின்ற வித்தையை எங்கு நண்பா கற்று வந்தீர்?
      தாயக பயணத்திலா?
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தண்ணீர் கரைத்த கர்வம் அருமை

    RépondreSupprimer
    Réponses
    1. "தண்ணீர் கரைத்த கர்வம் " இந்த பதிவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு நாகேந்திர பாரதி அவர்களே!
      வருகைக்கும், தலைப்பினை தந்தமைக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வரவேற்று வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
      தொடர் ஆதரவு தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அந்த தற்பெருமைக்காரருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டார். பதிவை இரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. பதிவை ரசித்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறப்பான பாடம்! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பதிவை ரசித்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா
    மனதுக்கு இதமான பாடம் ..அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. பதிவை ரசித்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களது மேன்மை பொருந்திய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
      மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நல்லதொரு பாடம்....ரசித்தோம்...

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் ஆசானே!
      தங்களது வருகை வெகு சிறப்பு!
      பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி அய்யா!
      தொடர் ஊக்கம் தந்துதவ வேண்டுகிறேன்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான பகிர்வு தண்ணீரின் மகத்துவம் தனித்துவம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பதற்கு குழலின்னிசையின் நல் வாழ்த்துகள்!
      பதிவை பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வணக்கம்!
    வாருங்கள் அய்யா!
    தங்களது வருகையும் வாக்கும் குழலின்னிசையை நெற்படுத்தும் நீதி!
    நீதிக் கதையை பாராடியமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. நல்லதோர் நீதி சொல்லும் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
  15. வணக்கம் நண்பரே!
    நீதிக் கதையை பாராடியமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer