mercredi 11 novembre 2015

'மலையாறு குகை ரகசியம்'

சன் டூங் குகை"அண்டா ஹா ஹசம்  அபு ஹா குகூம்  திறந்திடு சீசேம்"
அலிபாபாவின் குகையை திறக்கும் மந்திர வாசகம் நாம் அறிவோம்.

குகைக்குள் செல்லும் முன் நினைவில் நிற்கும் மந்திரம், ஏன் குகைக்குள் சென்ற பின் நினைவில் நிற்காது போய் விடுகிறது.
யோசிக்க வேண்டிய தருணம் இது!

அதுவரையில்,  குகை பற்றிய ஒரு குறுஞ்செய்தியை அறியாதவர்களுக்கு அறியத் தருகிறேன்.

வியட்நாமின் குவாங்பின் மாகாணத்தில் இருக்கிறது ஒரு குகை.  இதன் பெயர் ‘சன் டூங்’. வியட்நாம் - லாவோஸ் எல்லையில் அமைந்துள்ளது.  மலை மீது அமைந்துள்ள இந்த  குகையின் நீளம், 9 கி.மீ.  இதில் 4 கி.மீ., தூரம் வரை மிகவும் கரடு முரடான, சிக்கலான வழியாக உள்ளது.  சன் டூங் என்பதற்கு 'மலையாறு குகை' என பொருள்.

மலையில் ஓடும் ஆறு இந்த குகை வழியாக செல்கிறது.  2 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீர் அரிப்பினால் இந்த குகை உருவாகி இருக்கலாம் என ஆய்வாளர்களால்  கூறப்படுகிறது.

2009ல் இக்குகையை 'பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி கூட்டமைப்பினர்' ஆய்வு செய்தனர். அதன் பின்தான் சன் டூங் குகை பிரபலமடைய துவங்கியது.

அப்போதுதான் இது !
‘உலகின் பெரிய குகை’ என அறிவிக்கப்பட்டது.


2013லிருந்து தான் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மலையேற்ற பயிற்சி பெற்ற,  நல்ல உடல் தகுதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும்.  ஆண்டுதோறும் சில நூறு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.


பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே குகைக்குள் செல்ல முடியும். ஆகஸ்ட்-க்கு பின் கனமழை பெய்ய துவங்கிவிடும் என்பதால் அனுமதி வழங்கப் படுவதில்லை.

மிக பிரபலமான இந்த  சன் டூங் குகையின் நீளம் : 9 கி.மீ., தூரம்
அகலம் : 650 அடி
உயரம் : 500 அடி -ஆகும்.இந்த குகைக்குள் செல்வதற்கு,
 "அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம்"
-மந்திரம் தேவை இல்லை!
மனமும், பயணச் செலவுக்கு பணம் தேவை.


 

புதுவை வேலு

நன்றி: இணையம்

36 commentaires:

 1. அதிசய குகைதான். இதன் வழியாக முழு தூரமும் செல்ல முடியுமா?

  RépondreSupprimer
  Réponses
  1. சன் டூங் குகை முழுவதும் முழு தூராம் பயணம் செய்யலாம்.
   தாங்கள் அழைத்தால் நானும் உடன் வருகிறேன் அய்யா!
   முதல் வருகை, முதல் கருத்து, முனைவர் கருத்து சிறப்பினும் சிறப்பு!
   நன்றி அய்யா!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. அறியா குகை ஒன்றினை அறியச்செய்துள் ளீர்கள் நண்பரே
  நன்றி
  தம +1

  RépondreSupprimer
  Réponses

  1. தேடுதல் வேட்கை வேர் விடும்! கருத்தினை தந்த கரந்தையாருக்கு நன்றி.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. அதிசய குகைக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. வருகைக்கும், குகை பற்றிய மிகை கருத்துக்கும்
   நன்றி முனைவர் அய்யா.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. Réponses
  1. பெருமை-
   தங்களது கருத்துடன் அமைந்த நல்வரவு.
   நன்றி நண்பரே.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. அருமையான குகை தான். அனைவரும் செல்வது கடினம்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. பயணக் கட்டுரையின் பிதாமகனார் தாங்கள் நிச்சயம் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது நண்பரே!
   வருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி.

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. Réponses
  1. இயக்குநர் சங்கர் படத்துக்கு உகந்த வசனக் கருத்தை, "ஆத்தாடி...! பிரமாண்டம்..".
   உவந்தளித்த வார்த்தைச் சித்தருக்கு மிக்க நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. பிரமாண்டமான குகை! குகையைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். தங்கள பதிவைப் படித்ததும் அது நினைவுக்கு வந்தது. விரைவில் பதிவிடுகிறேன்.
  அருமையான இடத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
  த ம 6

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பரே,
   குகை பற்றிய கட்டுரையை விரைவில் வெளியிடுங்கள்.
   மிகை விருப்பத்துடன் காத்திருக்கிறோம் படித்து மகிழ்வுறுவதற்கு.
   நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. உங்கள் உதவியால் அந்த குகை நுழைந்த அனுபவம்....அருமையான தகவல்

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பரே,
   "நான் ஒன்று சொல்வேன்",
   'நான் மலையாறு குகைக்குள் செல்வேன்'.
   என்பதுபோல் அமைந்திருந்தது தங்களது கருத்து.
   நன்றி

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. தகவல் அருமை..நண்பரே....

  RépondreSupprimer
  Réponses
  1. 'மலையாறு குகை' பற்றிய தகவலை அறிந்து பாராட்டி கருத்திட்ட தோழருக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. வணக்கம்
  ஐயா
  அறியாத அதிசயக் குகை... கண்டு மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. கவிஞரே,பதிவில் கண்டால் மட்டும் போதுமா?
   நேரில் சென்றும் கண்டு களியுங்கள்
   அப்போது அதிசயக் குகையானது, தங்களுக்கு ஆனந்தம் அள்ளித் தரும் குகையாகவும் மாறலாம். நன்றி.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. சன் டூங்’ குகை பற்றி படித்தபோது ‘நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கு போய் வரலாம்’ என்ற கவியரசரின் பாடல் நினைவுக்கு வந்தது . அருமையான தகவல். இங்கெல்லாம் சென்று பார்க்கமுடியாத என்னைப் போன்றவர்கள் சார்பில் தங்களுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் அய்யா,
   கவியரசர் பாடலை
   'மலையாறு குகை ரகசியம்'
   சன் டூங் குகை முழுவதும் எதிரொலிக்க செய்தமைக்கு நன்றி.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. அலிபாபா குகையில் பணம் கிடைக்கும் சன் டூங் குகைக்கு போக பணம் செலவழிக்கணும் வித்தியாசமான குகைதான்! பகிர்வுக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. அலிபாபா குகைக்குள் எடுத்து
   "சன் டூங் குகை"க்குள் செலவழிக்க வேண்டும் அவ்வளவே நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. பெரியார் நீர் மின் உற்பத்தி நிலைய தண்ணீர் தேவைக்காக ,தேக்கடியில் இருந்து மலையைக் குடைந்து அப்பர் டேம் என்ற இடம் வரை பிரம்மாண்டமான குகைப் பாதை உண்டு .காலை மட்டும் நனைக்கும் அளவுக்கு அந்த குகையில் நீரோட ,கும்மிருட்டில் இறங்கி நடந்த அனுபவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது உங்கள் பதிவு !அதை விட பிரம்மாண்டமான இயற்கை மலையாறு சண் டூங் குகையில் நடந்தால் 'த்ரில்'லாக இருக்கும் என்பது நிச்சயம் :)

  RépondreSupprimer
  Réponses
  1. "பெரியார் நீர் மின் உற்பத்தி நிலைய தண்ணீர் தேவைக்காக ,தேக்கடியில் இருந்து மலையைக் குடைந்து அப்பர் டேம் என்ற இடம் வரை பிரம்மாண்டமான குகைப் பாதை உண்டு .காலை மட்டும் நனைக்கும் அளவுக்கு அந்த குகையில் நீரோட ,கும்மிருட்டில் இறங்கி நடந்த அனுபவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது உங்கள் பதிவு !"
   தங்களது த்ரில் அனுபவத்தை கருத்தாய் தந்தமைக்கு மிக்க நன்றி பகவான் ஜி அவர்களே!
   தங்களது வருகையும் குழலின்னிசைக்கு த்ரில் அனுபவம்தான்.
   தங்களது வருகைக்கும், வாக்கிற்கும் அன்பின் நனறி ஜி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 14. நண்பா, அலிபாபாவும் 40 திருடர்களும் உள்லே இருக்க மாட்டார்களே.. ஏன்னா எனக்கு பயமா கீது.

  RépondreSupprimer
  Réponses
  1. "சன் டூங் குகை"க்குள் பத்து நபர்களை கடவுளைக் காண அனுப்பி வைத்து விட்டு, பின்பு பயம் என்றால் என்ன நண்பா அர்த்தம்?
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 15. அறிய தகவல், அருமை புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி நண்பர் சத்யா அவர்களே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 16. உள்ளே செல்ல மந்திரம் வெளியே வர மறப்பது பற்றி ஒண்ணும் இல்லை

  RépondreSupprimer
  Réponses
  1. நன்றி.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 17. உள்ளே செல்ல மந்திரம் வெளியே வர மறப்பது பற்றி ஒண்ணும் இல்லை

  RépondreSupprimer
 18. ईश्वर सब की भला करें.
  கடவுள் அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 19. அருமையான குகை அழகாக இருக்கின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..

  RépondreSupprimer
 20. 'மலையாறு குகை' பற்றிய தகவலை அறிந்து பாராட்டி கருத்திட்ட அய்யாவுக்கு நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer