சங்க இலக்கிய மலர்கள் (குறிஞ்சிப் பாட்டு மலர்கள் 99).
‘குறிஞ்சிப்பாட்டு’.
‘செறுத்த செய்யுள் செய்செந்நாவின்
வெறுத்த கேள்வி
விளங்குபுகழ்க் கபிலன்’
என்று புலவர்
பெருமக்களால் போற்றிப் பாராட்டப்படும் கபிலர் எழுதிய நூல் ‘குறிஞ்சிப்பாட்டு’.
"திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்"
- பத்துப்பாட்டில், எட்டாவதாக வைத்து
எண்ணப்படுவது ‘குறிஞ்சிப்பாட்டு’.
இதை
"பெருங்குறிஞ்சி' எனவும் வழங்குவர்.
குறிஞ்சி நிலத்தைப் புனைந்து
பாடுவதில் வல்லவர் கபிலர். இதனால் "கருதும் குறிஞ்சி கபிலன்' என்றும் பாராட்டப்
பெற்றவர்.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் "கபிலர்" எழுதிய குறிஞ்சிப் பாட்டு
"99" வகை மலர்களை பற்றி குறிப்பிடுகிறது. புகைப்படங்களின்
மூலம்,
அந்த அரிய
ஆராய்ச்சிக்குரிய மலர்களின் எழிலினை கண்டு ரசிப்போம் வாருங்கள்.
அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.
’ஒண்செங்காந்தள் முதல் பரேரம் புழகு’
ஈறாகத் தொண்ணூற்றொன்பது (99)" வகையான
மலர்களின் பெயர்களையும்,
"குறிஞ்சிக் கபிலர்" பட்டியலிட்டு நம்மை வியப்பிலாழ்த்தும்
பாங்கைப் பாராட்ட வார்த்தைகளுக்கு வல்லமை ஏது?
பகிர்வு:
இப்படிப் படத்துடன் கூடிய ஒரு பட்டியல், தமிழ் மண்ணில் உள்ள தாவரங்கள், உயிர்களுக்கு யாராவது செய்வார்களானால் அது ஒரு சிறந்த தமிழ்த் தொண்டு.
RépondreSupprimerஇதிலுள்ள சில பூக்களுக்கு இப்போது புழக்கத்தில் வேறு பெயர்களும் உண்டு.
1. காந்தள்- கார்த்திகைப்பூ, 53. தாளை - தென்னை, 63. கைதை- தாளை, 73-.அடும்பு- அடம்பன், 88. பாரம் - பருத்தி, 89. பீரம்- பீர்க்கு, 99. புழல்- எருக்கு - இவை நான் அறிந்தவை.
பகிர்த்ததற்கு மிக்க நன்றி!
முதல் வருகையோடு சிறப்பு செய்திகளும் தந்து பதிவினை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
99 மலர்களையும் மிக அருமையாக தொகுத்து படங்களோடும் அவைகளுடைய தாவரப்பெயரையும் (Botanical name) தந்து ஒரு அழகான மாலையாகத் தந்தமைக்கு சிறப்பு பாராட்டுக்கள்!
RépondreSupprimerசெருவிளை(19) மற்றும் கருவிளம் (20) இரண்டிற்கும் ஒரே தாவரப்பெயர் இருக்கிறதே. அதுபோல காந்தள் (1) மற்றும் தோன்றி (84) ஆகிய இரண்டிற்கும் ஒரே தாவரப்பெயர் இருக்கிறதே.
வணக்கம் அய்யா!
Supprimerசிறப்பான கண்ணோட்டத்துடன் அமைந்த கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
மேலும்....
"செருவிளை(19) மற்றும் கருவிளம் (20) இரண்டிற்கும் ஒரே தாவரப்பெயர் இருக்கிறதே. அதுபோல காந்தள் (1) மற்றும் தோன்றி (84) ஆகிய இரண்டிற்கும் ஒரே தாவரப்பெயர் இருக்கிறதே".
அதனால்தான் பதிவின் முகவுரையில்....
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் "கபிலர்" எழுதிய குறிஞ்சிப் பாட்டு
"99" வகை மலர்களை பற்றி குறிப்பிடுகிறது.
அந்த அரிய "ஆராய்ச்சிக்குரிய மலர்களின்" எழிலினை கண்டு ரசிப்போம் வாருங்கள்"
ஆம்! அது அறிவியல் ஆராய்ச்சிக்குரிய விடயமே அய்யா
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தொகுப்பு நண்பரே, அதில் நமது பதிவர்கள் பெயரிலும் இரண்டு மலர்கள் இருப்பது பெருமை. அந்த மலர்கள் கரந்தை, தில்லை.
RépondreSupprimerத ம 1
நமது நட்பு பூக்கள் பெயரில் இரு மலர்கள் இருப்பதை பெருமைக்குரியதே !
Supprimerநல்ல கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தொகுப்பு மிகவும் சிறப்பு...
RépondreSupprimerதொகுப்பினை பாராட்டியமைக்கு நன்றி வலைச் சித்தரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தொண்ணூற்றொன்பது (99)" வகையான மலர்களின் பெயர்களையும்,
RépondreSupprimer"குறிஞ்சிக் கபிலர்" பட்டியலிட்ட பாடல்களையும் ரசிக்க தெரியாவிட்டாலும்... 99 வகை மலர்களையும் தங்கள் பதிவிட்டது சிறப்பாக இருக்கிறது...
Supprimerஉண்மைக்கருத்தை உளமாற உரைத்தமைக்கு
உயர்த் தமிழால் நன்றி பாராட்டுகிறேன் தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
மலர்களின் மாலை....தொகுத்த உங்கள் தோள்களுக்கு...சமர்ப்பணம்
RépondreSupprimerகபிலர் தொடுத்த மலர்களின் மாலையை நுகரந்தமைக்கு , வாசமிகு கருத்தினை வழங்கியமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறந்த தொகுப்பு வாழ்த்துகள்! வேண்டுகோள்! நீளம் குறைய மூன்று பதிவாக பிரித்திருக்கலாம்!
RépondreSupprimerவணக்கம் புலவர் அய்யா
RépondreSupprimerதங்களது வேண்டுகோள் செவிமடுத்தேன்.
இனிவரும் இதுபோன்ற தொடர் நீளமிகு பதிவுகளில்
செயல் படுத்துகிறேன். மிக்க நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தொகுப்பு புதுவையாரே,
RépondreSupprimerநன்றி.
வாருங்கள் சகோதரி,
Supprimerதங்களது மீள் வருகைக்கு மிக்க நன்றி!
தொகுப்பினை ஏற்று ஏற்புடைய கருத்தை அளித்தமைக்கு
குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.
தொடர்க!!!
நட்புடன்,
புதுவை வேலு
அரிய முயற்சி. பாராட்டுக்கள் தமிழ்த் திரைப்பட நடிகர் ஒருவர் இவற்றின் பெயர்களை மனனம் செய்து ஒப்பித்து கைத்தட்டல் பெறுவது வழக்கம்
RépondreSupprimerவாராது வந்த "திரு" மழை போல்
RépondreSupprimerஅயராத அருங்கருத்தை அருந்தமிழில்
தந்தமைக்கு அன்பின் நன்றி அய்யா!
தாங்கள் குறிப்பிடும் அந்த நடிகர்
சூர்யா
கருத்தைக் கண்டு குழலின்னிசை அகம் மகிழ்கின்றது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சூரியா தந்தை சிவகுமார் இதை ஆரம்பித்து வைத்தவர்.
Supprimerநடிகர் சூர்யா, தந்தை சிவக்குமாரிடம் இந்த சிறப்பை கற்று இருக்கலாம் அல்லவா?
Supprimerவணக்கம் நண்பா பிரமாண்டமான பதிவு அரிய தகவலுடன் நன்றி
RépondreSupprimerகச்சிதமான கருத்து கரும்பாய் இனித்தது!
Supprimerநன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
சிறப்பான பாடலுடன் அழகிய மலர்களையும் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் கவிஞரே!
Supprimerகருத்து மாலையோடு வந்து கபிலர் குறிப்பிட்ட 99 மலர்கள் பற்றிய பதிவை சிறப்பித்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் - சிவகுமார், சில மேடைகளில் இத் தொகுப்படங்கிய பாடலை கூறுவதைக் கேட்டதாக ஞாபகம்.
RépondreSupprimerயூரியூப்பில் தேடவேண்டும்.
வணக்கம்!
Supprimerஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் "கபிலர்" எழுதிய குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்ட
"99" வகை மலர்களை பற்றி நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் பேசியதை வீடியோவில் பார்த்து இருக்கிறேன் நண்பரே!
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
98 மலர்களின் பெயர்தான் உள்ளது.47வத மலரின் பெயர் இல்லை.
RépondreSupprimerமிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு ஐயா
RépondreSupprimer