கிருஷ்ண தேவராயர்
ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு போருக்கு புறப்பட்டுப்
போனார்.
போகும் வழியில் ஒரு ஆற்றங்கரையைக் கடக்க
வேண்டிய நேரத்தில், மன்னரை நோக்கி அரசவை ஜோசியர்,
“மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை.
அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால், வெற்றி
நிச்சயம்”
என்று சொன்னார். கிருஷ்ண தேவராயர் குழம்பினார்.
அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகி விடுவான். அவன்
எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின், கிருஷ்ண தேவராயருக்கு சந்தேகம் வந்துவிட்டது. உடனடியாக தெனாலிராமனிடம் அவசர ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை
அழைத்தான்.
“எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும்,
எத்தனை
வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?”
என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்வேன் என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று
வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து,
“இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க
முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
அச்சத்தால் ஜோசியரின்
விழிகள் பிதுங்கின.
ஆரூடத்தை பொய்யாக்க…
“முடியும்.. முடியும்”
என்று அலறினார்.
“மன்னா ஜோசியம்! அவ்வளவுதான்“!
என்று புன்னகைத்தான்
தெனாலிராமன்.
தெனாலிராமனின் தெள்ளத்
தெளிவான செயல்முறை விளக்கத்தை
கண்ட பின்பு, கிருஷ்ண தேவராயர்
ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
தீர்க்கமான தீர்ப்பினைத்
தருவதே நல்ல முடிவு.
நல்ல முடிவினை நாம் எடுப்போம் தோல்வியை தடுப்போம்
வெற்றியைத் தழுவுவோம்.
நன்றி: (அறிவு- கதைகள்)
வெற்றியைத் தழுவுவோம்.
பகிர்வு:
புதுவை வேலு
அறிவுரைக்கதை அருமை ஐயா!
RépondreSupprimerதனிமரம் தந்த முதல் கனி இனிப்பு
Supprimerபணிவுடன் கலந்த நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
மனதை நெருடும் கதை அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை நெருடிய அற்புதத்தை
Supprimerகற்பகத் தரு கருத்தாய் தந்தமைக்கு
மிக்க நன்றி கவிஞரே.
நட்புடன்,
புதுவை வேலு
தீதும் நன்றும் பிறர் தர வாரா...சிந்திக்க வைக்கும் கதை...
RépondreSupprimerயாதும் ஊரே யாவரும் கேளிர்
Supprimerதீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
கணியன் பூங்குன்றனார் அருளிய அமுதக் கருத்தை பருக அளித்த சகோதரிக்கு அன்பு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை ஐயா...
RépondreSupprimerவணக்கம் வார்த்தைச் சித்தரே,
Supprimerவெற்றியைத் தழுவும் கரங்களால்
சாற்றிய அருமை கருத்தை வரவேற்று ஏற்று மகிழ்கிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சரியான இடத்தில் கத்தி வைத்திருக்கிறீர்கள்.....நல்ல கூர்...
RépondreSupprimerகுழலூதும் கண்ணனிடம் ஆயுதம் எதற்கு?
RépondreSupprimerவேண்டுமாயின் ஆயுத எழுத்து இருக்கலாம் நண்பரே!
நல்ல கூர் என்று தாங்கள் கூறுவது
கூர்மையான அறிவு இருக்க வேண்டும் என்பதைத்தானே?
மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...
RépondreSupprimerஇணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html
நன்றி...
அழைப்பிற்கு அன்பு நன்றி!
Supprimerபத்து பதிவாளர்களை தொடர் பதிவிட பரிந்துரை செய்யும்போது , சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. வேண்டுமாயின் பதிவு இடுகிறேன். நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு பாடம் கொடுத்தது வாள் அல்ல கதை
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
‘நல்லவர்கில்லை நாளும் கோளும்’ என்ற சித்தாந்தத்தை தெனாலிராமன் கடைபிடித்தார் போலும். விதியை மதியால் வெல்வோம் என்பதை சொல்லும் இக்கதையாயி பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerமனதை நெருடிய கற்பகத் தரு கருத்தை தந்தமைக்கு
Supprimerமிக்க நன்றி அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான அனைவரும்
RépondreSupprimerஅறிந்திருக்க வேண்டிய கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்வருகை, நற்கருத்து வழங்கியமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தெனாலிராமன் வாளை உருவி ஜோசியர் கழுத்தில் பதித்து, உண்மையை பேசவைத்த கெத்து அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
உண்மை ஊசலாடியதை பார்த்தீரா? நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல கதை....
RépondreSupprimerநன்றி நண்பரே
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerதெனாலி இராமன் புத்திசாலி!
RépondreSupprimerநல்ல கருத்து!
Supprimerநன்றி புலவர் அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
ந்ல்ல கதை..
RépondreSupprimerநன்றி ஆசானே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஜாதகம் என்றுமே நமக்கு பாதகம் என்று அருமையாக விளக்குகிறது இக்கதை .... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer