கோபமே கோலோச்சாதே!
நாம் எவருமே
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
ஆனால், ஏனோ நமக்கு மனதின்
அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது.
நாம் எப்போதும்
பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிகவும் தவறானது.
‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க
தெரியுமா?
வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம்
உடைஞ்சிருக்கும்.
எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும் என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட,
‘அப்படியா சொல்றீங்க?’ என்று முகம் பூரித்து
பாராட்டு வெளிச்சத்தில் பல் துலக்கி பவர் ஸ்டார் என தன்னை நினைப்பவர்களும் சிலர்
இருக்கத் தான் செய்கிறார்கள்.
‘படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்!
புது இடமில்ல !
வீட்டு படிக்கட்டா இது !
ரெண்டு கையிலயுமா ? இப்படி பொருட்களை வச்சுக்கிறது.
அந்தப் பையை தோளில
மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், ‘யோவ்… (டேய்) உன் வேலையை
பாத்துக்கிட்டு போவியா…
பெரிசா படிக்கட்டு
இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே…’
என்று, தவறை
சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்.
நம் தவறை பிறர்
சுட்டிக்காட்டும் போது,
அதை, ‘ஆமா… நீங்க சொன்னது ரொம்ப சரி…’ என்று ஒப்புக் கொள்ள
முன் வர வேண்டும்.
இதன்மூலம், இரு நன்மைகள்
நிகழ்கின்றன.
‘முதலாவது,
நம் மனம், நமக்குள் சென்று, ‘இனி பார்த்து நட… அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை
மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும்
நிகழ்ந்திருக்கும்…’ என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில்
கல்வெட்டாய் பதிகிறது.
இது, அடுத்தமுறை படிக்கட்டில்
இறங்கும் போது நிச்சயம் பயன்படும்.
இரண்டாவது,
‘என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க…
அப்புறம் நடக்கிறதே வேற…’
என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத
காரணத்தால்,
‘பார்த்துப் போங்க!
ஒரே சகதி! என்று சொல்ல பலரும் முன்
வருவர்.
இது!
நடக்கிற
பாதைக்கு மட்டுமல்ல…
வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான்.
ஆம்!
‘நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார்.
பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்! செயல்படுத்துவார்! நம் அக்கறையை சரி வர புரிந்து
கொள்கிறவர்’ என்பன போன்ற நம்பிக்கைகளை, மற்றவர்களிடையே உருவாக்கும்
ஆனால்,
நல்லது சொல்லுபவர்களின் வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும்,
நல்லது சொல்லுபவர்களின் வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும்,
என்ன நடக்கும்
தெரியுமா?
நாம் பாதிப்பு அடையும்
வரை பார்த்துக் கொண்டிருந்தபின்,
‘இந்தாளுக்கு இதுவும் வேணும்;
இன்னமும் வேணும்…’
என்று உள்ளுக்குள்
மகிழ்கிற கூட்டம் பெருகி விடும்.
நம் முகத்தில் கழுவாமல்
விடப்பட்ட சோப்பு நுரையையே,
பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது,
முதுகின் அழுக்கை யார்தான் சுட்டிக் காட்டுவதாம்?
நல்ல செயலுக்கு, நல்வாய்ப்பு, நல்வரவேற்பு, அமையாதபோது, நடுநிலையோடு நாம் சிந்திக்க வேண்டும்! சிந்திக்கத் தூண்டுபவரின்
தூய உள்ளத்தை போற்றி செயல்பட வேண்டும்.
ஆம்!
அறிவெனும் அகல்விளக்கின் ஒளிபரவி, இருளகல வேண்டுமாயின் தூண்டுதல் அவசியமே!!!
புதுவை வேலு
நன்றி: இணையம்
முடிந்தவரை நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் இருந்தால் நேர்மறையானவை நடக்கும். நன்றி.
RépondreSupprimerநேர்மறையான சிந்தை என்பது கந்தையாகிப் போனாலும்,
Supprimerஅது! பட்டு ஆடையாகவே பளிச்சிடும்.
முத்தாய்ப்பான முதல் கருத்து முனைவர் எழுத்தால்,
எழுந்து நின்று வரவேற்கிறேன். நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்க்கை பாதைக்கு மிகவும் அவசியம் தான் ஐயா...
RépondreSupprimerவாரத்தைச் சித்தரே, வணக்கம்
Supprimerஇந்த பதிவுக்கு பவர் எங்கிருந்து கிடைத்தது என்பதை, நாம் இருவரும் அறிவோம்.
ஆம்!அறிவெனும் அகல்விளக்கின் ஒளிபரவி, இருளகல வேண்டுமாயின் தூண்டுதல் அவசியமே!!!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனால் நம்மில் பலர் பிறர் நமக்கு அறிவுரை கூறுவதை விரும்புவதில்லையே! தன் முனைப்பை (Ego) விட்டோழித்தாலே எல்லாம் சரியாகிவிடும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerதன் முனைப்பை (Ego) முடக்க வேண்டுமாயின்,
Supprimer"அனைவரையும்அரவணைக்கும் அணைப்பு அவசியமே!"
நல்ல கருத்து அரவணைத்து மகிழ்ந்தேன் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பவர் ஸ்டார் என தன்னை நினைப்பவர்களள சிலர் என்ன....பலர் அப்படித்தான் இருக்கிறார்கள் நண்பரே..........
RépondreSupprimerபல பவர் ஸ்டார்களுக்கு பவர் தருவது யார்?
Supprimerபதிவிடும் பதிவுகளுக்கு பாராட்டோடு, பண்பட்ட கருத்தினையும்
பகரும் ஸ்டார்கள் அல்லவா?
நினைவில் நிற்கும் அவர்களின் நிழலுக்கும் வலிமை உண்டு! என்னும்,
அறிவொளி அறிவோம் தோழரே!
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு சிந்தனைப் பகிர்வு! நன்றி!
RépondreSupprimerசிந்தனை சிறகடித்து வந்து "அறிவொளி அறிவோம்" பதிவினை பாராட்டிமைக்கு
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு உளவியல் உண்மையை தந்தீர்கள் நண்பா... அருமை பெரும்பாலும் பலர் அறிவுரையை ஏற்றுக்கொள்வதில்லை பெருமைக்காக சொல்லவில்லை நான் வயதில் சிறியவர் சொன்னாலும் அதில் நமக்கு தெரியாத விடயங்கள் இருக்கின்றதா ? என்று தேடுவேன்.
RépondreSupprimerஉளவியல் உண்மைகள் பொதுவாகவே சிலருக்கு கசக்கவே செய்யும்.
RépondreSupprimerஉணர்ந்தவர்களுக்கு உண்மையில் இனிமையே!
நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நல்ல சிந்தனை... யாவரும் அறிய வேண்டியது. படித்து மகிழ்ந்தேன். த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யாவரும் அறிய வேண்டியதை
Supprimerயாதும் ஊரே! யாவரும் கேளீர்! என கருத்தை பதிவிட்ட கவிஞருக்கு
குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நாம் மனிதர்கள் நன்று புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerநல்லது எது?
Supprimerகெட்டது எது? அறிந்து நல்வழி நடப்பவனே நல்மனிதன் ஆவான்.
அப்படித்தானே? சொல்ல வருகிறீர்கள் நண்பர் சத்யா அவர்களே?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பானதோர் சிந்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
RépondreSupprimerநல்லதோர் சிந்தனை ஐயா...நேர்மறை சிந்தனைகள் நம்மை நல்ல வழியில் பயணிக்க வைக்கும்..
RépondreSupprimer