dimanche 29 novembre 2015

"குளிர் சாதனப் பெட்டி" - பராமரிப்பும் பாதுகாப்பும்


குளிர் சாதன பெட்டியை ஆரோக்கியமான முறையில் எப்படி
எப்படி பராமரிக்கலாம்?



உணவுகள் கெட்டுப் போகாமல் வைத்து சாப்பிடவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்தான் குளிர் சாதன பெட்டியானது நமக்கு பயனளிக்கிறது. ஆனால், பலரும் அதை தவறாகவே பயன்படுத்துகிறார்கள்.
வீட்டில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்து, அதில் அப்படியே அடைத்து வைத்துவிடுவார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். காய்கறி, பழங்களை ஒன்றாக வைக்க கூடாது, இறைச்சியை சரியான முறையில் பேக் செய்து வைக்க வேண்டும். பிரட், ஊறுகாய், நெய், போன்றவற்றை குளிர் சாதன பெட்டியில் வைக்கவே தேவை இல்லை.
எனவே, எந்த உணவை எப்படி  குளிர் சாதன பெட்டியில் ஆரோக்கியமான முறையில் வைக்க வேண்டும் ? என்ற பராமரிப்பு செய்முறை செய்திகளை தெரிந்து கொள்வோமே!


குளிர் சாதன பெட்டியின் கதவு
நீண்ட நேரம் குளிர் சாதன பெட்டியின் கதவை திறந்த நிலையில் வைக்க வேண்டாம். பொருளை எடுத்தவுடன் கதவை மூடிவிடுவது நல்லது.
ஏனெனில் சூடான காற்று உட்சென்றால் குளிர் சாதன பெட்டியின் செயல்பாட்டு திறனில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இடைவெளி
குளிர் சாதன பெட்டியில் உணவு பொருட்களை வைக்கும் போது சரியான இடைவெளி விட்டு வைக்க வேண்டும், இடம் இல்லாமல் நெருக்கி அடைத்து வைப்பது, தவறான முறையாகும். மேலும், ஒரே வகையான உணவுகளை ஒரே இடத்தில் வையுங்கள். இதனால் உணவில் வேறு வாடை ஏற்படாமல் இருக்கும்.



காய்கறி பழங்கள்
காய்கறி மற்றும் பழங்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். இவை வாயுவை வெளியிடும் குணம் கொண்டவை என்பதை மறந்திட கூடாது. அதே போல குளிர் சாதன பெட்டியில் வைக்கும் முன், பழங்களை கழுவி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்து பயன்படுத்தும் போது கழுவினால் போதும்.

முட்டைகள்
முட்டைகளை குளிர் சாதன பெட்டியின் கதவில் கொடுக்கப் பட்டுள்ள மேற் புறத்தில் வைப்பது தான் சரியானது. மற்ற இடங்களில் இடம் இருக்கிறது என அடைத்து வைக்க வேண்டாம். குளிர் நிலையின் மாற்றம் இதில் தாக்கம் ஏற்படுத்தலாம்.



சுத்தம் செய்தல்
மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதே போல, சுத்தம் செய்யும் போது, கழற்றி சுத்தம் செய்யுங்கள், சுடுநீரை பயன்படுத்த வேண்டாம். மேலும் டிடர்ஜெண்ட் பவுடர் பயன்படுத்தி கழுவ வேண்டாம்.



இறைச்சி உணவுகள்
இறைச்சி உணவுகளை குளிர் சாதன பெட்டியில் வைக்கும் போது தான் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதில் இருந்து பாக்டீரயா தாக்கம் வெளிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இதை சரியான முறையில் பேக் செய்து நன்கு குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்க வேண்டும்.



சாக்லேட்
சாக்லேட் போன்ற உணவுகளை குளிர் சாதன பெட்டியில்
வைக்கலாம் ஆனால், ஃப்ரீசரில் வைக்க கூடாது. சாதாராண குளிரில் வைத்தாலே போதுமானது.

குளிர் சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும்.
அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து  கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளது.

சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.
குளிர் சாதன பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும்.

ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை எடுக்க கத்தியை கொண்டு குத்தக்கூடாது.

அடுக்குத் தட்டை( tray)  வைக்கும் முன் ஒரு பழைய காஸ்கட்டை சிறிய கல் உப்பைத் தூவியோ அல்லது எண்ணெய் தடவியோ வைத்தால் எளிதில் எடுக்க வரும்.

குளிர் சாதன பெட்டியில் சில கரித்துண்டுகளை போட்டு வைத்தால் துர்நாற்றம் மறைந்துவிடும். கீர் வகைகள், பழபாயாசம், போன்றவைகளை  விரைவாகக் குளிர்ச்சியாக்க அடி அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில்  வைத்தால் 5 நிமிடங்களில் குளிர்ச்சியாக்கிவிடும்.

குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை மூடியே வைக்க வேண்டும்.

 சூடான பொருட்களை வைக்ககூடாது.

அப்பளத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து  எடுத்துப் பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.

"குளிர் சாதன பெட்டியை பராமரிப்போம்"

"பாதுகாப்பான உணவினை உட்கொள்வோம்".


தகவல்
புதுவை வேலு
நன்றி: (படங்கள்: இணையம்)


28 commentaires:

  1. குளிர் சாதன பெட்டி பராமரிப்பு பதிவு எல்லோருக்கும் பயன் படக்கூடியது. அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி சகோதரி
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பாதி எலுமிச்சை பழம் வைத்தால் தூர்நாற்றம் வரவே வராது...

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி நண்பரே
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. என்னைப்பொறுத்தவரை அதை விலைகூடிய குப்பைத்தொட்டி என்றே நினைத்திருந்தேன்...ஆனால் அதை பராமரிக்கும் முறை அறிந்தேன்...நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பயனுள்ள குறிப்புகள்.. அருமை..

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி அய்யா
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி அய்யா
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பயனுள்ள பகிர்வு.நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி அய்யா
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பயனுள்ள பதிவு அனைவரும் படிப்பது நல்லது

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி அய்யா
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அனைவருக்கும் பயன்படும் விடயங்கள் நண்பா நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி நண்பா
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நண்பர் யாதவன் நம்பி,

    குளிர் சாதனப் பெட்டி புவி வெப்பமயமாவதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு தொண்டு இந்த பூமிக்கு செய்ய வேண்டும் என்று நினைத்து(!) நான் அந்தப் பெட்டியை இதுவரை வாங்கவேயில்லை.

    RépondreSupprimer
    Réponses
    1. புவி வெப்பமயமாதல் குறித்த சிந்தை வெகு அபூர்வம் நண்பரே!
      பிரான்ஸில் அதுகுறித்து பேச "COPE 21" - ஆய்வு மாநாட்டில் உலகத் தலைவர்கள் குழுமியுள்ள வேளையில்.....
      தங்களிடமிருந்து இத்தைகைய கருத்து வெகு சிறப்பு!
      நன்றி தொடர்க!!!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி
    தம+1

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி நண்பரே
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. இவ்ளோ இருக்கா....மிக்க நன்றி.....

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கு மிக்க நன்றி சகோதரி
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வீட்டில் இருக்குஇஇஅதப் பற்றி எனக்கு தெரியவில்லை ..தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்நண்பரே.....

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், வாக்கிற்கும், மிக்க நன்றி நண்பரே
      தொடர்க...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. பயன்தரும் யோசனைகளுக்கு நன்றி.

    RépondreSupprimer
  15. மன்னிக்கவும். தமிழ் மணத்தில் ஓட்டு போட இயலவில்லை. ஓட்டு போட்டதும் 'No such post' என்று காட்டுகிறது.

    RépondreSupprimer