jeudi 5 novembre 2015

"பட் பட் படாபட்" - பட்டாம் பூச்சி

'ரோபோட் பட்டாம் பூச்சி'



'ரோபோட் பட்டாம் பூச்சி' எப்படி இயங்குகின்றது என்பதை பின்வரும் காணொளியில் காண்க:-


விலங்குகள் முன்னதாக கங்காரு, கடற்பறவை, டிராகன் பறவை, ஏர்ஜெல்லி போன்றவைகளை ஃபெஸ்டோ நிறுவனம் ரோபோட்களாக செய்திருக்கின்றது.

பட்டாம்பூச்சி 
அந்த வகையில், அந்நிறுவனம், இம்முறை பட்டாம்பூச்சிகளை ரோபோட்களாக செய்திருக்கின்றது.

 காட்சியை பார்க்க அச்சு அசல் பட்டாம்பூச்சி போன்றே காட்சியளிக்கும். 

இந்த ரோபோட்கள் உண்மையான பட்டாம்பூச்சி போன்றே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலையில் கேமரா, ஆப்டிக்கல் சென்சார் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்களை இந்த ரோபோட்கள் கொண்டிருக்கின்றன.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் சர்க்யூட்கள் எந்நேரமும் வேளை செய்து கொண்டே இருக்கும்.

சக்தி வயர்லெஸ் சார்ஜர் பொருத்தப்பட்டிருப்பதால் எங்கும் சுலபமாக இதனை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறி்ப்பிடத்தக்கது.

தானியங்கி  முறையில் செயல்படும் என்றும், கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈமோஷன் பட்டர்ஃப்ளைஸ் முன்பே உறுதி செய்யப் பட்ட பாதையில் பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்றது. 
மேலும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃப்ராரெட் கேமரா ஜிபிஎஸ் கருவியாகவும் பயன்படுகின்றது.

இறக்கை 20 இன்ச் இறக்கை கொண்ட இந்த ரோபோட் நொடிக்கு 2.5 மீட்டர் வரை பறக்க முடியும் என ஃபெஸ்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்கை 20 இன்ச் இறக்கை கொண்ட இந்த ரோபோட் நொடிக்கு 2.5 மீட்டர் வரை பறக்க முடியும் என ஃபெஸ்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.





 ரோபோட் பட்டாம்பூச்சி எப்படி இயங்குகின்றது  காணொளியில் காண்க:-





தகவல்

புதுவை வேலு
 நன்றி:(tamilgizbot)

24 commentaires:

  1. காணொளி கண்டு வியந்தேன் நண்பரே
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. பட் பட் படாபட் பட்டாம் பூச்சியின் - காணொளி கண்டு வியந்து
      கருத்து விருந்து முதலில் தந்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. தமிழ் மணம் வாக்கு அளித்து சிறப்பித்தமைக்கு
      நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பட்டர் பிளை ,ஓ ..பட்டர் பிளை....இது விஞ்ஞானத்தின் வியப்புக் குறியீடு :)

    RépondreSupprimer

  4. விஞ்ஞானத்தின் வியப்பு "பட்டர் பிளை" பறந்து சென்று குழலின்னிசை- யின் பக்கம்
    பகவான் ஜி சொல்லி அழைத்து வந்த பதிவை எண்ணி வியக்கின்றேன்.
    வருகைக்கு நன்றி ஜி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. இயற்கையைத் தோற்கடிக்கும் அளவு உள்ளதே. ஆச்சர்யம்தான். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. விஞ்ஞானத்தின் வளர்ச்சி வியப்புக்குரியதே!
      விரும்பும் கருத்தை கரும்பாய் தந்தீர்
      முனவர் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இந்த பட்டர்பிளை ,ஜோக்காளியின் தோளில் வந்தமர மறுக்கிறதே:)

    RépondreSupprimer
    Réponses
    1. ஜோக்காளியின் தோட்டத்தை சுற்றி இந்த பட்டாம் பூச்சி கவித்தேன் வடித்துள்ளதே!
      ஜோக் - விரும்பும் பட்டாம் பூச்சி
      காளி - பெயர் சொல்லி பயமுறுத்தாமல் இருந்தால்
      தோளில் அமர்வது நிச்சயம் நிகழும்!
      நன்றி பகவான் ஜி அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. எங்க வீட்டு தோட்டத்துல பறக்கவிட ஒன்னு வாங்கனும். விலை என்ன? தீபாவளி தள்ளுபடி உண்டா?

    RépondreSupprimer
    Réponses
    1. ஆன் லைன் வியாபாரம் மட்டும்தான்
      வாங்கி சீக்கிரம் தீபாவளிக்கு ராக்கெட்டுக்கு பதிலாய்
      பட்டாம் பூச்சியை உங்களது தோட்டத்தில் பறக்க விடுங்கள்
      நண்பரே!
      விஞ்ஞான வியாபாரம் விறுவிறுப்பாகும்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நம்ம மனம் மறுக்கின்றது நண்பரே.... இன்னும் எத்தனை அதிசயங்கள் நிகழப் போகின்றதோ....

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டவன் பெயரைச் சொல்லி அதிசயம் நிகழும்போது
      விஞ்ஞானத்தின் பெயரில் அதிசயம் நிகழ்வது போற்றுதலுக்குரியதே
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அட்டகாசம் நண்பரே!
    த ம 5

    RépondreSupprimer
    Réponses
    1. வியப்புக்குரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை,
      விரைந்து வந்து கருத்தினை பதிவு செய்து சிறப்பித்தமைக்கு,
      இனிய நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி
      புதுவை வேலு

      Supprimer
  11. பசியாற்றும் படைப்பிருந்தால் பதியுங்கள்...
    பட்டாம்பூச்சிகள் அழகு...
    உங்கள் பதிவைப்போலவே...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்,
      தங்களது வாழ்த்தினை வணங்கி ஏற்கிறேன்.
      ஊக்கம் உயிரினும் பெரியது என்பதை,
      தங்களைப் போன்றோர் பகரும்
      உயரிய கருத்துக்களே உரைக்கின்றன்.
      பசியாற்றும் பதிவினை நிச்சயம் பகிர்வேன்.
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. காணொளியில் அந்த இயந்திர பட்டாம்பூச்சிகள் பறப்பதை கண்டு இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி. இருப்பினும் கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா என்றே சொல்ல /பாடத் தோன்றுகிறது!

    RépondreSupprimer
    Réponses
    1. கண்ணால் காணும் காட்சியை,
      தங்களை போன்றோர் தரும்
      கருத்து மாட்சியை காணும்போது
      வலைப் பூவின் ஆட்சி வாழ்க!
      என்றே சொல்லத் தோன்றுகிறது அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. அருமையான காணொளி. உண்மையான பட்டாம்பூச்சி போலவே இருக்கிறது...

    RépondreSupprimer
    Réponses
    1. காணொளியை கண்டு ரசித்து கருத்தினை வடித்தீர் நண்பரே!
      நன்றி.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer