samedi 28 novembre 2015

"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்"

வாழும் கலைவாணர் என்.எஸ்.கே



1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள,
"நடராஜா கல்வி கழகத்தின்" சார்பில் கலையுலகக் கலைஞர் ஒருவருக்கு ஒப்புயர்வுமிக்க ஒரு பட்டம் கொடுக்கப்பட்டது

அது என்ன பட்டம்? 

பட்டத்தை பெற்றவர் யார்

அறிவோமா?

பட்டம்: கலைவாணர்
பெற்றவர்: N.S. கிருஷ்ணன்
 இன்று தமிழ் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908) 



நினைவில் நின்றவரை,  சிந்தனை சிரிப்பை, சிதறாமல் தந்தவரின் நினைவலைகளில் நீந்துவோம் வாருங்கள்!!!!

"நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்" என்பதன் சுருக்கம்தான் என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும்.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில், 
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார்.
நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர், நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.
அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர் கலைவாணர் அவர்கள்.

இவர், பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கியவர், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அன்றே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.  

 கலை உலகில் ஒரு நடிகராக "சதி லீலாவதி" படித்தின் மூலம் அறிமுகமாகி, பின்னணிப் பாடகரராக 
"பைத்தியக்காரன்" ,
 ரங்கோன் ராதா,  
ஆர்யா மாலா,  
கண்ணகி,  
மங்கையர்க்கரசி,
 அம்பிகாபதி
 பணம்
 ரத்னமாலா,  
ராஜா ராணி,  
பவளக்கொடி
 சகுந்தலை,  
நல்லகாலம்  
போன்ற பல படங்களில் தனது சொந்தக் குரலில், கருத்தாழமிக்க பல பாடல்களைப்  பாடியவர், மற்றும்  இயக்குநராக  பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும்  இயக்கியவர்
 
நாட்டியப் பேரொளி பத்மினியை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் என்.எஸ்.கே அவர்களே!


அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் .
எவர் மனதையும் புண்படுத்ததாமல், பண்படுத்தும் முறையில், நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர்

 பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்றாகும். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கிய வள்ளல் குணம் படைத்த சிந்தனையாளர்.

இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு
 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டி சிறப்பித்துள்ளது

"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்" என்பார்கள். நோய் என்னும்
பிணியை விரட்டுவதையே தனது திரையுலகப் பணியாக செய்து மக்கள் மனங்களில் நிலைத்து வாழ்கிறார் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள்.



வாழும் கலைவாணர் என்.எஸ்.கே அவர்களது புகழ் மேலும்

நீடுழி வாழும்! வளரும்.

புதுவை வேலு



நன்றி:இணையம்/You Tube

21 commentaires:

  1. வாழும் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் பற்றி மிகச்சி(ரி/ற)ப்பான பகிர்வு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "வாழும் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் பற்றி மிகச்சி(ரி/ற)ப்பான பகிர்வு"

      என்.எஸ்.கிருஷ்ணனை பாராட்டுவதற்கு,
      அய்யா கோபால கிருஷ்ணனே வந்தது வரப்பிரசாதம்!

      முதல் வரம்(கருத்து) தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனைப் பற்றி அழகான பதிவு!
    த ம 1

    RépondreSupprimer
    Réponses
    1. "சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனைப் பற்றி அழகான பதிவு!"
      தங்களைப் போன்றோர் தரும் அரிய அற்புதக் கருத்துக்கு குழலின்னிசையின் அன்பு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  3. கலைவாணர் திரு N.S.கிருஷ்ணன் அவர்கள் தன்னிடம் உள்ளதை இறக்கும் வரை பிறருக்கு கொடுத்து உதவியதைப்போல் வேறு யாரும் இதுவரை செய்ததில்லை. அவரது பிறந்த நாளில் அவரை பற்றி எழுதி அவரை நினைக்கவைத்த தங்களுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. ""நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்"
      என்.எஸ்.கிருஷ்ணன்
      அவர்களது பிறந்த நாளுக்கு பெருமை சேர்க்கும் கருத்தினை வழங்கிய,
      அய்யாவுக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கலைவாணர் பற்றிய சிறப்பான பகிர்வு ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. "கலைவாணர் பற்றிய சிறப்பான பகிர்வு"
      வலைச் சித்தர் வழங்கிய விலைமதிப்பில்லத கருத்து
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. குறைபட்டோருக்குக் கொடுத்தார்..
    கொடுத்ததைக் கொண்டு கோட்டைக்கு வழி தேடாத - மாமனிதர்..

    தகவல் களஞ்சியமாக இன்றைய பதிவு.. வாழ்க நலம்..

    RépondreSupprimer
    Réponses

    1. "தகவல் களஞ்சியமாக இன்றைய பதிவு"
      வறட்சி இல்லாமல் வழங்குவதற்கு
      குழலின்னிசை மேலும் மேலும் தேடல் அறிவை பெருக்கிக் கொள்ள தூண்டுக்கோல் கருத்தினை வடித்த அருளாளர் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிறப்பான மனிதரின் நினைவில் ஒரு சிறப்பான பதிவு.

    நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. "சிறப்பான மனிதரின் நினைவில் ஒரு சிறப்பான பதிவு"
      சிந்திக்க வைத்த சிந்தனைச் சிரிப்பு நடிகருக்கு
      சிறப்பான பாராட்டு தெரிவித்து, கருத்திட்டமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்ல தொகுப்பு...உங்களுக்கு பாராட்டுகளும்,,,கலைவானருக்கு அஞ்சலியும்

    RépondreSupprimer
    Réponses
    1. "நல்ல தொகுப்பு"
      பகுத்தாய்ந்து பாராட்டு தெரிவித்த நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கலை வாழும்வரை கலைவாணரின் நினைவுகளும் வாழும் பதிவு அருமை நண்பா

    RépondreSupprimer

  9. "கலை வாழும்வரை கலைவாணரின் நினைவுகளும் வாழும்"
    காண்போர் கருத்தை கவரும் கருத்து!
    நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. நல்ல ஒரு கலைஞனைப் பற்றிய அருமையான பகிர்வு. பொருத்தமான நாளில். நன்றி.

    RépondreSupprimer
  11. கலைவாணர் பற்றிய பதிவினை கண்ணுற்று கருத்தினை மலர்ந்தமைக்கு மிக்க நன்றி
    முனைவர் அய்யாவே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. நகைச்சுவை பிதாமகரைப் பற்றிய பதிவுக்கு பாராட்டுக்கள்

    RépondreSupprimer
  13. கலைவாணர் பற்றிய பதிவினை கண்ணுற்று கருத்தினை மலர்ந்தமைக்கு
    மிக்க நன்றி அய்யா
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. கலை வளர்த்த கலைவாணர் எங்கள் ஊர்க்காரர் என்பதில் எங்களுக்கு பெருமை ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer