தும்மல்
நம்மில்
ஒவ்வொருவருக்கும் தும்மல் ஏற்படுகிறது. ஆனால், நாம் அனைவரும் ஒரே மாதிரி தும்முவது கிடையாது. சிலர் தும்மினால் சத்தமே வராது, வேறு சிலர் தும்மினால் இடி விழுந்தது போல சத்தம் வருகிறது. இது எதனால்? என்று என்றாவது நீங்கள் உணர்ந்தது உண்டா? அல்லது இந்த கேள்வியை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்து
உண்டா?
இப்படி விதவிதமாக
தும்மல் ஏற்படுவதற்கு காரணம் என்ன ?
‘நமக்கு நாமே’ என்கிறது அறிவியல்.
நமது உடல்
வாகு மற்றும் தசைகளின் கட்டமைப்பு, சுவாசக்
குழாய் போன்றவை தான் இதற்கு காரணம் என்று அறிவியல் கூறுகிறது.
தும்மல்
எப்படி ஏற்படுகிறது ?
நுரையீரலில்
இருந்து திடீரென வெளிவரும் காற்று வாய் மற்றும் மூக்கு வழியாக வெளிவருவது தான் தும்மல்
எனப்படுகிறது.
தும்மல்
ஏற்படும் போது நமது முகம், மார்பு மற்றும்
தொண்டை போன்ற பகுதிகளில் தசைச் சுருக்கங்கள் தோன்றும்.
ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு மாதிரி தும்மல் ஏற்படுவது ஏன்?
வெளிச்சத்தினால்
கூட தும்மல் ஏற்படும் பெரும்பாலும் தூசு இருக்கும் இடத்தில் தான் தும்மல் வரும் என்று
நாம் கருதுகிறோம். ஆனால், பிரகாசமான வெளிச்சம் தோன்றும் போது கூட தும்மல் ஏற்படுமாம். இதைப் ‘போட்டிக்
ஸ்னீஸிங்க்' என்று கூறுகிறார்கள். இது போன்ற தும்மல் ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுமாம்.
மேலும், ஒவ்வொருவரின் உடலமைப்பை பொறுத்தும், அவர்களுக்கு ஏற்படும் தும்மல் வேறுபடுகிறது. இதற்கு நுரையீரல், சுவாசக் குழாய் ஆகியவற்றின் அளவுகள், மேலும் தொண்டை, மார்பினை சுற்றி அமைந்துள்ள தசைப் பகுதி போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தும்மும்
போது மூக்கிற்கு அழுத்தம் தரவேண்டாம்
ஆய்வாளர்கள், தும்மல் ஏற்படும் போது, அதை தடுக்கும் வகையில் மூக்கிற்கு
அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
இது காதில்
பாதிப்பினை ஏற்படுத்தும் செயல் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
தும்மல்
பற்றிய ஆய்வில்,
அதிக சத்தத்துடன்
தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும்,
குறைந்த
சத்தத்துடன் தும்முவோர் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பதாகவும்
கூறப்பட்டுள்ளது.
உடலுக்கு
ஒத்துக்கொள்ளாத பொருட்கள்,
உடலுக்குள்
குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.
நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில்
அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் உதவுகின்றன.
ஒன்று தோல் பகுதி.
இன்னொன்று மூக்கு.
அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது.
தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த
உதாரணம். ஒரு
சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது.
அதேபோல் மூக்கானது, ஒவ்வாமையை
தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.
ஒரு ஆரோக்கியமான
மனிதனுக்கு தும்மல் என்பது பெரும்பாலும் வரக்கூடாது.
தும்மல்
வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு
ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது.
சிலருக்கு
குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது.
இன்னும்
சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின்
மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது.
இப்படிப்பட்ட
ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.
வரும்முன் காக்க…
தும்மலை வரும்முன் காக்க முடியாது. ஆனால், தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம்.
உதாரணமாக, ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலை, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம்.
இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று சிலர் கேட்கலாம்.
இதற்குப் பதிலாக, தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில், தும்மல் ஒரு நோயல்ல, நோயின் அறிகுறி மட்டுமே.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்.
மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல்
என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும்.
இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர
வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை
அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல்.
நமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும்
காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின்
வேலை. இங்கு
ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது.
அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில்
நுழைந்து விட்டால், இந்தச்
சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக
அளவில் நீரைச் சுரக்கிறது.
இதன் தூண்டுதலால்,
நுரையீரல், தொண்டை வாய்
மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும்
வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன.
இதுதான்
தும்மல். இப்படித் தும்மும்போது அந்த அந்நியப் பொருள்
வெளியேற்றப் படுகிறது.
என்ன காரணம்?
ஒவ்வாமைதான் இதற்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக
வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின்
தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.
அதுபோல் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி
போன்றவற்றின் புகை, வாகனப்
புகை, தொழிற்சாலை
புகை, பூக்களின்
மகரந்தங்கள், பார்த்தீனியச்
செடியின் முள்ளிழைகள், பூஞ்சைகள் முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவிடும்.
படுக்கை
விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில்
காணப்படுகின்ற உண்ணி
(Mites) எனும் பூச்சிகள், வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் உடலிலிருந்து வெளியேறும் செதில்கள், எச்சங்கள், முடிகள்
காரணமாகவும் இந்த நோய் வருவதுண்டு. முட்டை, எலுமிச்சை, தக்காளி
என்று சில உணவுகளாலும் இது தூண்டப்படுகிறது.
தும்மலை
நிறுத்த சில வழிகள்
ஒரு
தேக்கரண்டியில் சமையல் உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை
200 மி.லி. இளம் சூடான தண்ணீரில்
கலந்துகொள்ளுங்கள். இப்போது சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்துப்
பிழிந்துகொண்டு, திரி போலச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசித் துளையிலும் விட்டு
மூக்கைச் சுத்தப்படுத்துங்கள். தும்மல் நிற்கும்.
ஆவி
பறக்கும் வெந்நீரில் ‘டிங்சர்
பென்சாயின்' மருந்தில் 15 சொட்டுவிட்டு ஆவி பிடித்தாலும், தும்மல் கட்டுப்படும்.
‘ஸ்டீராய்டு மருந்து' கலந்த மூக்கு ஸ்பிரேயை மூக்கில்
போட்டுக்கொண்டால், தும்மல் நின்றுவிடும்.
இருசக்கர
வாகனத்தில் பயணம் செய்யும்போது முகத்தில்
சிறு துணியை கட்டிக்கொள்ளலாம்.
இதனால்
தூசுகள் மூக்கின் உள்ளே செல்ல வழி
ஏற்படாது.
நாம்
இருக்கும் இடத்தில் காற்றில் காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த
இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த
வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.
இப்படி
காற்றை சுத்தம் செய்வதைப்பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு
முயற்சி செய்யக்கூடாது. எனவே, தும்மல்
என்பது ஒரு நோயே கிடையாது.
புதுவை
வேலு
நன்றி:(tamildoctor,boldsky.)
பயனுள்ள இதுவரை அறியாத
RépondreSupprimerதகவல்களுடன் கூடிய விரிவான
அருமையான பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
படங்கள் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கும், நல்வாக்கிற்கும் நன்றி அய்யா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
உண்மைதான் தும்மல் ஒரு நோய் அல்ல ...நல்ல விரிவான கட்டுரை...
RépondreSupprimer"நல்ல விரிவான கட்டுரை"
Supprimerநற்சான்று பகன்றமைக்கு நன்றி சகோதரி
நட்புடன்,
புதுவை வேலு
நிறைய தெரியாத தகவல்கள்.... நன்றி ஐயா...
RépondreSupprimerதும்மலின் ஓசையை கேட்டு
Supprimerதுடிப்பான கருத்தினை தந்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படித்து முடிந்தவுடன் தும்மல் வந்துவிட்டது நண்பரே..நல்ல தகவல்..நன்றி!!
RépondreSupprimerசெம்மலர் பூத்த கருத்து
Supprimerசெந்தேன்! நன்றி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை அச்... அச்ச்... அச்ச்ச்...
RépondreSupprimerஅச் அச்ச் அச்ச்ச் என்று தும்மினாலும்
Supprimerஅச்சமில்லை! அச்சமில்லை!
நன்றி வார்த்தைச் சித்தரே
நட்புடன்,
புதுவைவேலு
தும்மலை பற்றி இவ்வளவு விரிவாக தந்தமைக்கு நன்றி! பாராட்டுக்கள்!
RépondreSupprimerதும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்பதை படித்ததும், நமது அய்யன் வள்ளுவர் தும்மலை அடக்கி ஒருவர் பட்ட பாட்டை சொன்ன அந்த 1318 ஆவது குறள் நினைவுக்கு வந்தது!
‘நமது நாசித் துவாரத்தில்’ இந்த பத்தி இரு முறை வருகிறது. அதை எடுத்துவிடுங்கள்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
Supprimerஎம்மை மறைத்திரோ என்று
(குறள்1318)
தலைவியின் ஊடலுக்கு அஞ்சி தலைவன் தும்மலை அடக்கிக் கொள்ள
"உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ"
என்று அழுதாள்.
தெய்வப் புலவர் குறள் தந்து தும்மலின் சிறப்பை நெறிபடுத்து கருத்தினை தந்தமைக்கு நன்றி அய்யா!
தங்களது குறிப்பின்படி சொல்லிய வரிகள் யாவும் நீக்கப் பட்டு விட்டன.
வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தும்மல் ஒரு நோயே அல்ல...எல்லாவற்றிற்கும் காரணம் நமது மாசுற்ற சுற்றுப் புறமே. விளக்கங்களுங்களுடன் கூடிய கட்டுரை..
RépondreSupprimerசுத்தமான காற்று சுகாதரத்தின் நீர் ஊற்று
Supprimerபோற்றும் வகையில் சிறந்த கருத்தினை தந்து
சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தும்மலை பற்றிய விரிவான கருத்து அருமை சகோ.
RépondreSupprimer
Supprimerதும்மலை பற்றிய விரிவான கருத்தினை
செம்மையுற படித்து பாராட்டுக் கருத்து
தந்தமைக்கு நன்றி சகோதரி!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerபயனுள்ள தகவல் என்று சொல்லி
Supprimerபதிவினை சிறப்பித்த செயலுக்கு
செழு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
//அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும்//
RépondreSupprimerநண்பரே நான் தும்மும் பொழுது அதிக சத்தம் வரும் மேலே தங்களது குறிப்பு இப்படி உள்ளதே..
Supprimerதும்மலின் செம்மல்
தன்னம்பிக்கை நட்சத்திரம்
ஒளிர்க!
நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
பின்னூட்டம் இடுவதற்குள் இரண்டுமுறை தும்மலும் ஒருமுறை இருமலும் வந்துவிட்டது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு வந்துவிட்டுச் சென்னை வந்தவுடனேயே காய்ச்சலும் இருமலும் சளியும் என்னைத் தொற்றிக்கொண்டுவிட்டன. பத்துநாள் நிலவேம்புக் குடிநீர் அருந்தியபிறகுதான் காய்ச்சலும் சளியும் நின்றன. வறட்டு இருமல் மட்டும் நீடிக்கிறது. தும்மலுக்கு என்ன காரணம் என்பதை நீங்கள்தான் விளக்கிவிட்டீர்களே! - இராய செல்லப்பா
RépondreSupprimer"நிலவேம்புக் குடிநீர்" குறித்த மருத்தவ தகவலை
Supprimerகுழலின்னிசைக்கு கருத்தின் வழியே தந்தமைக்கும்
பதிவின் பாராட்டுக்கும் நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அச்சக் அச்சக்... அப்பாடியோவ், நான் தும்மிவிட்டேன் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimerஅதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும், குறைந்த சத்தத்துடன் தும்முவோர் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பதாகவும், சொல்வதுதான் ஆச்சரியம். ஏனெனில் இங்கு வளர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் தும்மும் பொழுது அதிக சத்தம் செய்வதில்லை (ஆனால் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்).
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
sattia vingadassamy
தங்களின் கருத்தினை கருத்தூன்றி படித்தேன்.
RépondreSupprimerநியாயங்கள் தண்டிக்கப் படக் கூடாது.
உண்மை தகவலும் அனுபவக் கருத்தாய் தந்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
தும்மலில் இத்தனை கதை இருக்கு என்று இன்று அறிந்தேன் பயன் மிக்க பகிர்வு ஐயா!
RépondreSupprimerபயன் தரும் பதிவு என்று சொல்லி கருத்தினை
Supprimerதந்த நண்பர் தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு
அன்பின் நன்றி.
நட்புடன்,
புதுவை வேலு
தும்மலைப் பற்றி அபூர்வமான பல தகவல்களை தந்து அசத்திவிட்டீர்கள். நண்பரே!
RépondreSupprimerத ம காணவில்லை.
தங்களின் பாராட்டுதலுக்கும், பொருள் பொதிந்த பொன்னான கருத்தினை
Supprimerதந்தமைக்கும் தனிப் பெரும் நன்றி நண்பரே!
த ம பட்டையம் சரியாகி விட்டது. வாக்கினை இப்பொழுது பதிவு செய்ய
விரும்பினால் வாக்கு அளிக்கலாம்.
நட்புடன்,
புதுவை வேலு
பயத்துடன் படித்து முடித்தேன் தும்மல் பதிவை... !
RépondreSupprimerகாரணம்... ஒரு முறை தும்முபவரை... பல முறை தும்முபவரை... ஏன் பல நிமிடங்கள் தும்மும் மனிதர்களை கூட பார்த்திருப்பீர்கள் ! ஆனால் நாள் முழுவதும் தும்மும் மனிதனை தெரியுமா உங்களுக்கு ? ( அட ! கேப்டன் ஸ்லாங் வருதுல ?!!! )
அது அடியேன் தான் ! அப்படி ஒரு அலர்ஜி எனக்கு ! ஆனால் சில காலமாக தும்மவில்லை... உங்கள் பதிவை படித்ததும் ஞாபகம் வந்துவிடுமோ என தூக்கிவாரிப்போட்டது....
ஆனால் தும்மலின்றி படித்துமுடித்துவிட்டேன் !
தும்மலுக்கு பிடித்தவன் என்றாலும் அதனை பற்றி உங்கள் பதிவினால்தான் அதிகம் அறிந்தேன் ! பயனுள்ள பதிவு
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தும்மல் துடைத்தெறிந்த தூயவரின் வருகை
Supprimerமேலும் சிறக்க வேண்டுகிறேன்.
நடைமுறை நிகழ்வினை கோடிட்டு காட்டி பதிவை
சிறப்பித்தமைக்கு நன்றி சாமானியரே!
நட்புடன்,
புதுவை வேலு
பயனுள்ள பல தகவல்கள்.....
RépondreSupprimerநன்றி நண்பரே.
தங்களின் வருகையும், வாக்கும் பயன் தரும் பதிவுக்கு ஓர் ஊன்றுகோல் நண்பரே
Supprimerநன்றி! நட்புடன்,
புதுவை வேலு
காலையில் குளிரில் பால் வாங்கச் சென்று வந்ததும் பெரும்பாலும் தும்மல் வருகிறது;
RépondreSupprimerசற்றுப் பலமாகவே தும்மும் பழக்கம் எனக்குண்டு.
Allegra 120 mg மாத்திரை பாதி அல்லது 1 தும்மல் ஏற்படக் கூடிய காலநிலையில் ஓரிரு நாட்கள் தேவைக்கேற்றபடி விழுங்கலாம்;
நான் தும்மும்பொழுது சில நேரங்களில் ஓசை (இசை) நயத்துடன் தும்முவதுண்டு.
காதையும், மூக்கையும் மறைக்கும்படி சிறிய துணியைக் கட்டிச் செல்லலாம்.