jeudi 26 novembre 2015

சிட்டி விளக்குகளில் சிரித்த படி! ‘சிவன்’
அகல் விளக்கு (சிறு கதை)


அகல் விளக்கு வாங்கிவர அங்காடித் தெருவுக்கு சென்றிருந்தான் ஆனந்த்.
அவன் சென்று வருவதற்குள் வீட்டு வேலைகள் அனைத்தையும் அம்சமாக முடித்துவிட்டு "வம்சம்" சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
அப்போது வெளியில் இருந்து அழைப்பு மணி சத்தம் கேட்கவே...
எழுந்திருக்க மனமில்லாமல் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த தனது ஆறு வயது மகனை அழைத்து, யாரென்று பார்க்கச் சொன்னாள்.
அம்மா! அப்பாதான் வந்திருக்கார் என்று சொல்லியபடியே,  கதவின் தாழ்ப்பாளை திறந்து விட்டு,  விடுபட்ட அவனது விளையாட்டை தொடர சென்று விட்டான் ! அவர்களது ஒரே மகன் ருபேஷ்.
என்ன சித்ரா?
அதுக்குள்ள படம் பார்க்க உட்கார்ந்திட்டியா?’
விளக்குதான் வாங்கி வந்துட்டேனே !!!
சீக்கிரமா எழுந்துபோய் ஒழுங்காய் ஒவ்வொன்றாய் ஒளி ஏற்று!

நான் வரும்போதே பார்த்தேன் !
பக்கத்து வீட்டில் எல்லாம் அகல் விளக்குஏற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றான்.

இதோ பாருங்க !!
உங்களை,  நான் விளக்கு மட்டும்தான் வாங்கிவர சொன்னேனேத் தவிர
பக்கத்து வீட்டில் ஏற்றியாச்சா? 

கோயிலில் சொக்கப் பானை கொளுத்தியாச்சா?

தெருவில், பசங்க எல்லாம் காத்தி சுத்துறாங்களான்னா?  
பார்க்க சொன்னேன்! என்றாள். 
 
அப்போது! எரியும் தீபத்தின் திரியை, சற்று உள்ளுக்கு இழுத்ததை போன்று, ஆனந்த் தனது வார்த்தையின் பிரகாசம் குன்றிப் போய் நின்றான்.


 
"ஆடிப் பாடி அண்ணாமலை தொழ

ஓடிப்போம் நமதுள்ள வினைகளே"-

- அப்பர் வாக்கின்படி

பார்க்கும் இடமெல்லாம் தீப ஜோதியாய்  இருக்கும்
'ஈசனை' நினைந்தபடிஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற 
தீய குணங்களை பொசுக்கிஞானம் என்னும் அறிவொளியைஅவர்களது வீடு முழுவதும் பரவச் செய்ய,  மூவரும் இணைந்து,
வாங்கி வந்த சிட்டிவிளக்குகளில் திருக் கார்த்திகை தீபங்களை ஏற்றினார்கள்.

அப்போது !
அரசு அறிவித்தபடி மழை வெள்ளத்தினால் ???
அவர்களது வீட்டில்...
மின்சாரம் காணாமல் போனது
ஆனால் ?
அவர்களது வீடோ அன்று!
இருளில் மூழ்க வில்லை!
காரணம் !
உலகிற்கே படியளக்கும் ஈசன்
இன்று  (‘திருக்கார்த்திகைத் திருநாள்’) இவர்களுக்கு, ஒளியையும் சேர்த்து படி அளந்து விட்டார் போலும்.....
சிவன்
சிட்டி விளக்குகளில் சிரித்த படி!


புதுவை வேலு (ஒரு சிறிய மாற்றத்துடன் எனது மறுபதிவு)


25 commentaires:

 1. தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்..

  RépondreSupprimer
  Réponses
  1. திருமலை தரிசனம் கண்டவரின் கருத்து
   திருப்பதி லட்டு கிடைத்த அருளுணர்வு
   வாழ்த்துக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. பதிவின் நடையில் வித்தியாசம் மெறுகேறி இருக்கின்றது ரசித்தேன் நண்பா... வாழ்த்துகள் தொடர்க....

  RépondreSupprimer
  Réponses
  1. முறுகேறிய மீசையொடு மெருகேறிய வாழ்த்தை சொன்னமைக்கு நன்றி நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

  RépondreSupprimer
  Réponses
  1. தீபத் திருநாளில் திருவிளக்கு ஒளி (கருத்து) ஏற்றியமைக்கு நன்றி நண்பரே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. திருநாளின் திருவாழ்த்துக்கு நன்றி நண்பரே
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 5. வணக்கம் வித்தியாசமான நடை தொடர வாழ்த்துக்கள்
  என்றும் ஒளிமயமம் ஆகட்டும் வாழ்வு !

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் நண்பர் சீராளன்,
   ஒளி மயம் தொடர வாழ்த்திய தங்களுக்கு
   குழலின்னிசையின் நன்றி! தொடர்க...
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  மிகக் குறிப்பாக கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses
  1. திருநாளில் திருவாழ்த்து நன்றி கவிஞரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. கார்த்திகைப் பதிவு நல்ல நடையில் அழகாக அமைந்திருந்தது. நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. தங்கள் கருத்தினை கவரும் வகையில் எழுத்து நடை அமைந்திருப்பது
   இறைவன் தந்த பெரும்பேறு!
   நன்றி முனைவர் அய்யா
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. ‘எல்லாம் வல்ல ஈசன் நாள் தோறும் படியளப்பான்’ என்ற சொல்லாடலை திருக்கார்த்திகையோடு, இணைத்து, புனையப்பட்ட கதை அருமை. வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் அய்யா
   என்போன்ற தருமிகளுக்கு
   சொக்கனாய் வந்து கருத்திட்டு,
   ஊக்கத்தை ஊதியமாக தந்தமைக்கு
   நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. Réponses
  1. திருநாளில் சிறப்பு கருத்துடன் அமைந்த வாழ்த்து வழங்கியமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. அருமை ஐயா... தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

  RépondreSupprimer
  Réponses
  1. வார்த்தைச் சித்தரின் வாழ்த்து வணங்கி ஏற்கிறேன் நண்பரே
   நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. Réponses
  1. அம்சமான பதிவு என்று!
   அகல் விளக்கின் சிறப்பு ஒளி ஏற்றியமைக்கு,
   நன்றி அம்மா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. சூழ்நிலைக்கு ஏற்ற கதையின் முடிவு அருமை, புதுவை வேலு அவர்களே.

  RépondreSupprimer
  Réponses
  1. "அரசு அறிவித்தபடி மழை வெள்ளத்தினால் ???
   அவர்களது வீட்டில்...
   மின்சாரம் காணாமல் போனது "
   சூழ்நிலைக்கேற்ப கதையின் முடிவு அமைந்துள்ளது என்று துல்லியமான கருத்தினை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. சிறப்பான பதிவு;வாழ்த்துகள்

  RépondreSupprimer
  Réponses
  1. சிறப்பான சிறுகதை என்று சிறப்பித்து வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer