ஆனந்த தீபாவளி
(சிறு கதை)
வாசலில்
நின்றிருந்த டூ-வீலரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே தனது கிட்பாக்சை சரி பார்த்துக்
கொண்டான் சீனு. ஆமாம்! எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எதையும் மறக்கவில்லை.
தேணு சொல்லியபடி
பச்சை கலர் பை சுரேஷ் வீட்டிற்கு, நீல கலர் பை சாரா வீட்டிற்கு, ஆரஞ்சு கலர் பை அம்பி வீட்டிற்கு என்று
மனப்பாடம் செய்தபடியே வண்டியை வேகமாக ஓட்டலானான். வாகனம் முன்னோக்கி வேகமாக போகையிலே! அவனது மனமோ சற்று
பின்னோக்கித்தான் போனது.
இதோ பார் சீனு!
நாளும் கிழமை
அதுமா இவங்களை கூட்டிக்கிட்டு ஆஸ்பிட்டலும் கையுமா அலையுறேன். கொடுக்கறவங்க கொடுக்கத்தான்
செய்வாங்க, அதை திண்பது யாரு?
நாம்தானே ? நம்முடைய உடம்பை நாம்தான் பார்த்துக்கணும்.
இவங்களுக்கு ஏற்கனவே சுகர் ஓவர் லோடு! இதுல இன்னும் வாயைக் கட்டாமல் திண்றால்?
யாரு அவஸ்தைப் படுறது. இவர்களோடு சேர்ந்து நானும்தானே! என்று , தனது பெற்றோரை சுரேஷ் திட்டித் தீர்த்தது, நினைவுப் பொறியை பொட்டென்று தட்டி எழுப்பியது அவனுக்கு !
நீச்சல்
தெரியாமல் நினைவு ஆற்றில் விழுந்த சீனு ஒரு வழியாக ஒதுங்கி கரை சேர்ந்தான். வண்டியும்
கரை சேர்ந்தது.
மன்னிக்கவும் மாற்றாக அவனது வண்டி ! சென்று நின்றது சுரேஷ் வீட்டின்
வாசலில் அல்ல!
பழமுதிர்ச் சோலை என்னும்
பழக் கடையின் வாசலில்.
பச்சைக் கலர் பை
நீலக் கலர் பை
ஆரஞ்சுக் கலர் பை
- இந்த மூன்று பைகளிலும் உள்ள தீபாவளி இனிப்புகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக
ஐந்து வகையான பழங்களை வாங்கி நிரப்பிக் கொண்டு கொடுப்பதற்காக அவரவர்கள் வீட்டை
நோக்கியபடி பயணமானான்.
தீபாவளி அன்று
ஆனந்தமாக ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக!
நல்ல கதை. ஆனால் சர்க்கரை நோய்க் காரர்களுக்கு பழங்களும் (ஆப்பிள், சாத்துக்குடி, பப்பாளி தவிர) நல்லதல்ல. பழம் வாங்கிக் கொடுப்பது நிச்சயம் நல்ல பழக்கம் தான். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநல்ல கதை என்றுரைத்த நற்றமிழ் தாயே!
Supprimerஉமக்கு எமது நன்றி!
பயன் தரும் பழங்களை பட்டியலிட்டு தந்தமைக்கு வந்தணம் ஒரு கோடி!
அறிவுப் பூர்வமான கருத்தை வழங்கியமைக்காக வணங்குகிறேன் உங்களை!
வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!
புதுவை வேலு
இது கதை இல்லை.
RépondreSupprimerஆரோக்கியம், நலம், அக்கறை, மனிதநேயம் மற்றும் சந்தோஷம் (ஆயுள் காலம் வரை) போன்ற மனித வாழ்வு சம்பந்தப்பட்ட ஆசையான, அன்பான அறியுரையே. பாராட்ட வேண்டிய அக்கறையான பதிவு புதுவை வேலு அவர்களே.
வாழ்த்துகள்.
sattia vingadassamy
"இது கதை அல்ல நிஜம்" (பதிவு) என்பதை, நண்பர் சத்தியா அவர்களே நீங்கள் கூறும்போது, சமூக அக்கறையுடன் செயல்பட்டால் ஜெயிப்பது நிஜம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
Supprimerஅருமையான கருத்து பதிவிற்கு பெருமை சேர்க்கட்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
புதுவை வேலு
கனியத் தொடங்குகின்றது தங்கள் எழுத்தாற்றல்..
RépondreSupprimerதொடருங்கள் அன்பரே!
எழுத்தின் எழுச்சி எழுந்து வந்து பாராட்டும் போது,
Supprimerகழுத்தை கீழ் நோக்கித் சாய்த்து, வணங்கி வரவேற்பதைத் தவிர,
வேறு ஏதேனும் வழி உண்டா?
தொடர்ந்து செயல்பட தொட்டு ஆசிர்வதித்து தொடர் ஆதரவு தாருங்கள் நண்பரே!
நன்றியுடன்!
புதுவை வேலு
கதை வடிவில் மிக அருமையான சமூக ஆலோசனை ! ஆமாம், அனைத்து பண்டிகைகளிலுமே பட்சணங்கள் பாதி என்றால் பழங்கள் பாதி என்றுகூட கலந்து கொண்டாடலாம் தானே ?
RépondreSupprimerநன்றி
சாமானியன்
சமூக அக்கறையுள்ள சங்கத்தில் (ACLI - Association pour le continuum des langues Indiennes, FRANCE) பொருளாளராக பொறுப்பேற்றதனால் வந்த வடிவமோ என்னவோ தெரியவில்லை நண்பரே!
Supprimerபண்டிகையின்போது பட்சணங்களாக சாமானியர் இருந்தால் பழங்களாக இருப்பதற்கு நானும் தயார்.
கதைக்கும் சாமானியர் பதில் சொல்ல வந்திருப்பது பாதி+பாதி= முழு மகிழ்ச்சியைத் தருகிறது.
வருகைக்கும் வளமான கருத்து பதிவிற்கும் மனமார்ந்த நன்றியுடன்,
புதுவை வேலு
நல்லொதொரு விழிப்புணர்வு கதை.
RépondreSupprimerசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பண்டிகை நாட்களில் செய்யப்படும் இனிப்புகளை கண்டால், வாயில் எச்சில் ஊருவது இயல்பு தானே.
இனிப்புகளுக்கு மாறாக பழங்கள் - சிறந்த யோசனை.
நல்லொதொரு விழிப்புணர்வு கதை என்றுரைத்த மொழி உணர்வுமிக்க நண்பரே!
Supprimerஉமக்கு மிக்க நன்றி!
"நோயற்ற வாழ்வே
குறையற்ற செல்வம்"
பழமொழிக்கேற்ப செயல்பட்டு சிறப்புற வாழ்வோமாக!
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerசிறந்த யோசனை
தஞ்சை தந்த தமிழ் நேசரே
Supprimerநெஞ்சை அள்ளும் குறுங் கருத்தினை
நாளும் தவறாது பகிர்ந்தளித்தவரை
வேலவன் போற்ற நின்புகழ் வாழி!
புதுவை வேலு
அருமையான கருத்துள்ளக் கதை! நல்ல ஆரோக்கியமான தீபாவளி! இப்போதெல்லாம் நாங்களும் அப்படித்தான்! சிறு குழந்தைகள் உள்ளவர்களுக்கு பலகாரங்களும், நடுத்தர, பெரிய வயதுக்காரர்களுக்கு பழங்களும் தான் கிஃப்ட்!
RépondreSupprimerதாங்கள் இதை அழகிய பதிவாக இட்டதற்கு நன்றி! ஐயா!
கருத்துள்ளக் கதை நான் புனைந்து
Supprimerநல்ல ஆரோக்கியமான தீபாவளி!யை நீவீர் கொண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பம்
வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
புதுவை வேலு
கனி போன்று சுவைான சத்தான கதை. ஆனந்த தீபாவளியாக மட்டும் இல்லாமல் ஆரோக்கிய தீபாவளியாகவும் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு உருவான அருமையான கதை. நன்றி !
RépondreSupprimerகனி போன்று சுவைான, சத்தான கதையின் மூலம், இந்த தீபாவளியானது,
RépondreSupprimerஆனந்த தீபாவளியாக மட்டும் இல்லாமல், ஆரோக்கிய தீபாவளியாகவும், தங்களை போன்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான கதையாக
நான் நினக்கின்றேன் சகோதரியே!
நன்றி!
புதுவை வேலு