dimanche 5 octobre 2014

வாழ்வின் நெறி (வள்ளலார்)





வாழ்வின் நெறி(வள்ளலார்)




சிந்தனை செய்வாயடி மயிலே
சிந்தையில் இடம் தருவாயடி மயிலே
வந்தணம் புரிவாயடி மயிலே
வாழ்த்தி மகிழ்வாயடி மயிலே

ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே

ஜீவகாருண்யம் புரிந்தாரடி மயிலே
ஜீவநதியாய் தெரிந்தாரடி மயிலே
வாடிய பயிரால் வாடினாரடி மயிலே
வாழ்வித்து மகிழ்ந்தாரடி மயிலே

அருட்பெருஞ்சோதியாய் ஒளிர்ந்தாரடி மயிலே
தனிப் பெருங்கருணை புரிந்தாரடி மயிலே
ஆறுதிருமுறை அருளினாரடி மயிலே
அறம் என்னும் வரம் தந்தாரடி மயிலே

தைப்பூசம் ஒளி மாயர் மயிலே
வடலூர் வள்ளலாரடி மயிலே
அணையா சோதியில் கலந்தாரடி மயிலே
ஆதவனாய் தோன்றுவாரடி மயிலே

புதுவை வேலு


வணக்கம்
வலைதள நேயர்களுக்கு, வள்ளலார் பிறந்த நாளான (05/10) அன்று அவர்குறித்த பதிவினைஅன்றைய தினம் (kuzhalinnisai.blogspot.fr) தந்துள்ளேன்  குலழலின்னிசை வலைதளத்தில் சென்று தயவுசெய்து பார்க்கவும் நன்றி

Aucun commentaire:

Enregistrer un commentaire