mardi 7 octobre 2014

பெருமை பேசும் பொறுமை(சிறுகதை)




பெருமை பேசும் பொறுமை

 

 

கமலியின் வருகைக்காக மனோ காத்திருந்தான். அலை வருகிறது போகிறது அவள் ஏன் வர வில்லை? என்னை காக்க வைப்பதில் அப்படி என்ன ஒரு கலக்கல் சந்தோஷம்?

கடற்கரை மணலில் புதைந்திருந்த சங்கை கண்டெடுத்து தன் நெஞ்சக் குமுறலை
ஊதித் தீர்த்தான்.
கரையை நோக்கி பாய்ந்து வரும்  அலைபோல்  என்னை நோக்கி அவள் வருவாளா? அவள் வருவாளா? ஹிட் பாடலை ஹம் செய்தபடியே திரும்பியபோது ஆச்சரியம் அங்கே... சிலை போல் கமலி நின்றுகொண்டிருந்தாள்.

ஹேய்! நீ எப்ப இங்க?
அதுவா! நீ அலைகிட்ட என்னைபத்தி உலை வைக்கும்போதே வந்திட்டேன்.
சாரி டியர் ! நான் என்ன செய்யுறது? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே?
அதான் அப்படியெல்லாம் அர்ச்சனை செஞ்சிட்டேன். கோபம் வேண்டாமே பிளீஸ் என்றான்.
சரி போகட்டும் நீ லேட்டாய் வந்த காரணந்தான் என்ன?
அதுவா! நாளைக்கு நீ எங்கே போற?
இன்டர்வியூ-க்கு
இன்டர்வியூ-ல எத்தனை பேர் வருவாங்க?
பத்துக்கு ஒருத்தர்னு கணக்கு செய்தாக்கூட சுமார் ஒரு நூறு பேர் வரலாம்
அங்கு உன்னை எத்தனையாவதா கூப்பிடுவாங்கன்னு தெரியுமா?
தெரியாது!
உன்னை அவர்கள் கடைசியாய் கூப்பிட்டு உன் பொறுமைக்கு உலை வச்சா என்ன செய்வ?  உன்னோட பொறுமையை சோதிக்க நான் வைத்த டெஸ்ட்டுதான் இது.

ஆஹா!
ஒன் டே டெஸ்டில் ஓடாமலே பெற்ற வெற்றியை போல் உணர்ந்தான் 

அதுசரி இன்டர்வியூ-ல் நான் ஒகே தானே என்றான் மனோ.

ஒகே என்றாள் கமலி!

மறுநாள்  பொறுமை அவனுக்கு,
வேலையை பெற்றுத் தந்தது பெருமையுடன்.


புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire