பக்ரீத் பண்டிகை
நமது இந்திய நாடு மத சார்பற்ற ஒரு நாடு.இங்கு வாழும் மக்கள் யாவரும் மதத்தால் வேறுபட்டவர்களாக இருப்பினும் இனத்தால் இந்தியர்கள் என்று எண்ணும்போது நமது பாரதத் தாய் நிச்சயம் பெருமை கொள்வாள். அந்த வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப் படும் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் மகிழ்ச்சிமிகு பண்டிகையான பக்ரீத் திருநாளில் வாழ்த்துக்களை வழங்கி அவர்களை சிறப்பு செய்வோம் வாருங்கள்.
அன்பு
இல்லத்தின் நுழைவு வாசல்
இதயத்தின் சுவாச வாசல்
தருவதும்
பெறுவதும்
அன்பின் அழகு!
அன்பைத் தருவோம்
அல்லாவின் அருளை பெறுவோம்!
புதுவை வேலு
வலைதள நண்பர்களே இந்த திருநாளைப் பற்றி அறியாதவர்களுக்கு இன்று சில செய்திகள் இதோ!
தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம்நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
உலகமெங்கும் பக்ரீத் பண்டிகை முகமதியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையன்று ஏழைகள், உறவினர், நண்பர்களுக்கு ஆகியோருடன் சேர்ந்து குர்பானி வெட்டப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் ஓட்டகங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆடுகளை வெட்டுகின்றனர்.
இறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம் இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இசுமாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள் இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்கு கட்டளையிட்டான்.
மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
சிறப்புத் தொழுகை
சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிளேயே நடத்தப்படுகின்றன
பலியிடல்
பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது
இஸ்லாமிய சமூகத்தில் பயன்படுத்தப் படும் வார்த்தைகளும் அதன் தமிழ் அர்த்தங்களும் சில உங்களது பார்வைக்கு:
- நிக்காஹ் -திருமணம் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய, வாழ்வியல் ஒப்பந்தம்.
- வலிமா - திருமண விருந்து, மணமகன் அவரின் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு திருமணத்தை முன்னிட்டு கட்டாயம் அளிக்க வேண்டிய விருந்து.
- மஹர் - தங்கம் அல்லது பணமாக மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் திருமண அன்பளிப்பு. மணமுறிவு ஏற்படும் விடத்து இதனை மணமகன் திருப்பி கேட்க கூடாது என்று வழியுறுத்தப்படுகிறது, அது மலையளவாகினும் சரியே.
- தலாக் - விவாகரத்து, மணமுறிவு.
- கத்னா செய்தல், சுன்னத் கல்யாணம் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள அதிகப்படியான தோலை வெட்டுதல்.
- குலா - பெண் விரும்பி கேட்கும் விவாகவிடுதலை
- பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் பெயரால். இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை துவங்கும் பொழுது சொல்லப்படும்.
- அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
- மாஷா அல்லாஹ் - மனம் திருப்தியாகும்போது
- இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்
- மஸ்ஜித் - பள்ளி,பள்ளிவாசல்-வணக்கத்தலம்
- தொழுகை-இறைவணக்கம்
- மௌலவி – கற்றறிந்தவர்
- பாங்கு, அதான் - தொழுகைக்கான அழைப்பு.
- திருக்) குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். இது 1434 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது.
- ஹதீஸ் - முஹம்மது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள்.
- ஜும்ஆ, ஜும்மா - வெள்ளியன்று நடத்தப்படும் சிறப்பு வழிபாடு
- கைலி - தைக்கப்பட்ட லுங்கி
- சகன், ஸஹன் - நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம். பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டிணம், நாகூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் திருமண விருந்துகளில் இந்த முறையைப் பார்க்கலாம்.
- ஷைத்தான் - தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்
Aucun commentaire:
Enregistrer un commentaire