mercredi 29 octobre 2014

உலக சிக்கன தினம்







 



இன்று உலக சிக்கன தினம் அக்டோபர் 30


உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படும் இந்த நாளைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் சிலவற்றை பார்ப்போம்.

சேமிப்பு:

சிக்கனத்தின் அடித்தளம் எது என்றால் அது சேமிப்பு தான் என்பதை எவரும் அறிவர்.
நாம் அன்றாட வாழ்வில், பல இடங்களில் சேமிப்பை கண்டு, அல்லது சேமிப்பில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். 

சேமிப்பு என்பது உண்டியலில் சிறுக சேமிப்பது முதல் அஞ்சல் நிலைய சிறு சேமிப்பு, வங்கி நிலை , பொன் சேமிப்பு ,அணைகள் நீர் தேக்கங்கள், உணவு கிடங்கு, நுகர்வோரை வாடிக்கையளர் ஆக்குவது ,இவ்வாறாக வாழ்வின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பவரே  1611ல் முதன் முதலாக சேமிப்பு பற்றிய ஒரு திட்டத்தை எழுத்து வடிவில் முன் வைத்தவராவார்.

முதலாவது சேமிப்பு வங்கி 1778ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


வரலாற்றில், கி.பி. 4ம் நூற்றாண்டில் (கி. பி. 303 – 331) ஆட்சிபுரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ன மன்னனால் பொறிக்கப்பட்ட தோணிக்கல் சிலாசனத்தில் பயறு, ளுந்து, சாமை,  போன்ற திணைப் பயிர்த் தானியங்கள், சேமிக்கப்பட்டதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐந்தாம் தம்புலு அரசன் கால கல்வெட்டுக்களிலும் சேமிப்பின் அவசியம் பற்றிச் செதுக்கப்பட்டுள்ளதாக அறியப் படுகிறது.


சிக்கனச் சிந்தையோடு வாழ்க்கை நடத்துவதற்காக, சேமிப்பானது மனித சமுதாயத்தோடு பின்னிப் பிணைந்துள்ளதாகவே நாம் கருத வேண்டியுள்ளது என்பது, மறுக்க முடியாத உண்மையாகும்.







தேனீதேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும்மழையின் போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும்,   சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும்.


தன் கையில் பொருள் கொண்டு ஒருவன் ஒரு செயலைச் செய்தல், மலை மீது ஏறி நின்று, யானைகள் போர் புரிவதை அச்சமின்றிக் காண்பது போன்றதாகும்  என்பதை,

« குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. » என்று,
திருக்குறள் நன்கு நமக்கு உணர்த்துகிறது.

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை நாம் இனங்காணலாம்.

(1) கஞ்சத்தனம், 
(2) சிக்கனம், 
(3) ஆடம்பரம்
(4) ஊதாரித்தனம்.


கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது.
கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகையாகும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டு தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வதாகும்.

ஆடம்பரம் என்பதுஅண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவகையறியாமல் நடை உடை பாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது.  இது நம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றிகட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது ஆகும்.

சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை, போதும் என்ற மனம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரிடும்.




தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். பல விஞ்ஞான சாதனங்களை உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடுபணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

 இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில்சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது எனலாம். தாமஸ் ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.

எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள நல்ல பழக்கமாகும்.

பிடியரிசி என்பது பண்டைக் காலம் முதல் இருந்துவந்த ஒரு பழக்கமாகும்இந்தப் பழக்கம் சிக்கனத்தையும்அதே நேரம் சேமிப்பையும் வலியுறுத்தி வந்துள்ளது எனலாம். 

மனிதன் தனது வருமானத்தின் ஒரு பகுதியை நுகர்வுக்கும் இருபகுதிகளை முதலீடுகளுக்கும். எஞ்சும் பகுதியை திடீர் அவசரத் தேவைகளுக்குமாக சேமிக்க வேண்டுமென கெளதம புத்தர் உபதேசித்துள்ளதாக சில வரலாற்று  நூல்கள் கூறுகின்றன.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்.
மேலும் குடி வாழ்க்கையின் சிறப்பையும் மழுங்கடிக்கச் செய்யும் என்பது ஆங்கிலக் கவி. ஷேக்ஸ்பியரின் கருத்தாகும்

( “NEITHER A BORROWER NOR A LENDER BE; FOR LOAN OF IT LOSES BOTH ITSELF AND FRIEND; IT ALSO DULLS THE EDGE OF HUSBANDRY” )



சீன அரசு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் எரிபொருள் சிக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தொலை நோக்கு திட்டத்திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். நாமும் அதுபோன்றதொரு முயற்சியை மேற்க்கொண்டால் பயன் பெறலாம்.




  

சிக்கனத்தை பற்றிக் கூறும் சினிமா:

மக்களைப் பெற்ற மகராசி  திரைப் படத்தில் 'திரைக்கவித் திலகம்' என அழைக்கப்பட்ட கவிஞர் மருதகாசியின் வரிகளில் மின்னிய அருமையான விவசாயம் சார்ந்த சினிமாப் பாடல்,
சிக்கனத்தின் சிறப்பை சீதனமாக தந்து நிற்கும். அந்த பாடல் :


மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு.


தொடர்ந்து, சிக்கனத்தின் சிறப்பை அருமையான வரிகளில் வருடி விடுவார். அது!

சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமாஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணுஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.





ஆஹா! சிக்கனத்தின் சிறப்பம்சம் பெண்கள்தான் என்பதை எவ்வளவு எளிமையான வரிகளின் மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார் பாருங்கள். எனவே,








இன்றைய உலக சிக்கன தினத்தில் நாமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்க முயல்வோமாக.

புதுவை வேலு


நன்றி:desam/punniyameen
 




24 commentaires:

  1. இன்று சிக்கன தினம் என்று உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்துகொள்ளமுடிந்தது. அருமையான ஒரு விழிப்புணர்வு கட்டுரை. எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. எக்கணமும் வருகை தந்து
      சிக்கனத்தின் சிறப்புரைத்த
      சொக்கனுக்கு சொல்லுகிறேன்
      இக்கணமே நன்றியினை,
      புதுவை வேலு

      Supprimer
  2. தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன் தகுந்த நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான பதிவு அருமை வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
    Réponses
    1. விழிப்புணர்வோடு திகழும் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்!
      சிக்கனத்தை மட்டும் கடைபிடித்து சிற்ப்போடு வாழியவே!
      புதுவை வேலு

      Supprimer
  3. உலக சிக்கன நாளில்
    ஓர் உறைப்பான பதிவு
    அதிலும்
    "அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு" என்ற
    கவிஞர் மருதகாசியின் வழிகாட்டல் நன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிஞர் மருதகாசியின் புகழுக்கு மணி மகுடம் சூட்டியது தங்களின் பாராட்டுரை!
      சிக்கனத்தின் சிறப்புக்கு சிம்மாசனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
    2. http://yppubs.blogspot.com/2014/10/blog-post_28.html என்ற எனது பதிவில் தாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் வழங்கியுள்ளேன்.

      Supprimer
    3. மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. ஏற்கனவே..இருக்கிற .கோவணத்தையும் உருவிப்பிட்டு அம்மணமா ஆக்கிபுட்டானுக..ஆட்சி செய்யும் பேர்வழிகள்..அம்மணமா இருக்கிறவுக...இனி என்னத்த..எப்படி..? சிக்கனமா இருக்கிறது...??

    RépondreSupprimer
  5. ஆட்சி செய்யும் மாட்சியினை காட்சி போட்டு கருத்துரைக்கும் வலிமைமிகு மனம் படைத்த தோழரே!
    இதுபோன்றவர்களின் இழிசெயலை எடுத்துரைக்க ஏணிந்த சிக்கனமோ?
    (கருத்து பதிவு)
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. நல்ல பதிவு தோழர்...
    வாழ்த்துக்கள் தொடர்கிறேன்

    மலர்த்தரு

    RépondreSupprimer
    Réponses
    1. தோள் கொடுத்த தோழருக்கு
      நன்றி இசை வாசிப்பான்
      குழல் ஊதும் கோகுலக் கண்ணன்.
      தொடர் வருகைக் கண்டால்
      சிந்தனைப் பறவை விரிக்கும் அதன்
      படைப்புச் சிறகை.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. உலக சிக்கன தினத்துக்கும் வரலாறு இருப்பது என்பதை அறியும்போது பிரமிப்பாக உள்ளது. சிக்கனம் என்பது சேமிப்பு மட்டும் இல்லை, இருக்கும் வளத்தை பாதுகாத்து தேவை அறிந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி வளத்தை பெருக்குவதும் சிக்கனமே. (நான் அரசியலை சொல்லவில்லை, மக்களின் சேமிப்பை ஊக்கபடுத்தி அதையும் அரசியல்வாதிகள் கொள்ளை அடித்துவிடுவார்கள்). அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. சிக்கனம் என்பது சேமிப்பு மட்டும் இல்லை, இருக்கும் வளத்தை பாதுகாத்து தேவை அறிந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி வளத்தை பெருக்குவதும் சிக்கனமே. என்னதொரு அருமயான விளக்கம் நண்பரே! தங்களின் கருத்துக்கள் யாவும் திகட்டாத தீந்தமிழ் கற்கண்டு.
      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
    2. அரசியல் திருடர்களில் முதலீடு அதை பற்றி எதுவுமே சொல்லவில்லை, ஏன் தயக்கம் புதுவை வேலு அவர்களே !

      sattia vingadassamy

      Supprimer
    3. அரசியல் திருடர்களில் முதலீடு அதை பற்றி எனது கருத்து:
      (தயக்கம்) எனது தாயகம்
      மெளனம் எனது தாய்மொழி
      கலக்கம் எனது காவியம்
      நான் (அரசியல் சாயம் படாத )ஓவியம்.

      நானே எனக்கு பகையானேன் - என்

      நாடகத்தில் நான் திரையானேன்
      தேனே உனக்கு புரியாது-அந்த
      தெய்வம் வராமல் விளங்காது

      நன்றி: பாடல் கண்ணதாசன்(சில வார்த்தைகள் தவிர)

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிக்கனம் பற்றித் தெரியும்! ஆனால் இத்தனைத் தகவல்களா!? அருமையான தகவல்கள்! வலைமையான கருத்துக்களும் கூட! மிக்க நன்றி அருமையான கட்டுரைக்கு!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யாவின் வருகையில் தாமதம் ஏனோ?
      சிக்கனமாக கருத்தை பதிவு செய்வது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விட்டீர்களா? அய்யா!
      வருகைக்கும் வளமான கருத்து பதிவிற்கும் உளமான நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. செலவின் வகைகள் குறித்து விளக்கியவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் வருகை "குழலின்னிசைக்கு பெருமைமிகு வரவு.
      வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கின்றேன். நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சேமிப்பும் சிக்கனமும் இரு கண்கள் அல்லவா?

    சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    RépondreSupprimer
    Réponses
    1. "இராஜராஜேஸ்வரி "அன்னையின் வருகை தரிசனம் ,அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித் தந்ததது.
      சேமிப்பும் சிக்கனமும் இரு கண்கள். ஆம் இந்த இரு கண்களின் பார்வை வெளிச்சம்
      பாரெல்லாம் பரவட்டும்.
      தொடர் வருகை தொடரட்டும். நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. இன்று உலக சிக்கன தினம் என்று தங்கள் பதிவு மூலம் தொிந்துக் கொண்டேன்.சிக்கன தினத்தை பற்றி சிக்கனமாக இல்லாமல் எங்களுக்காக விாிவாக எடுத்துரைத்ததற்கு நன்றிகள்.சிக்கனம், சேமிப்பு பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !
    "கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்".முற்றிலும் உண்மையான கருத்து.
    நன்றி!

    RépondreSupprimer
  12. உண்மையான கருத்தை, மெண்மையான கருத்து பதிவின் மூலம் தந்தீர்கள். மிக்க நன்றி!
    சகோதரியே! தாங்கள் எப்படி இன்னொரு "ராஜ் சுமி"யா? அது உண்மையாக இருப்பின்,
    விரைவில் இரட்டை வரி அரசுக்கு கட்டுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer