jeudi 30 octobre 2014

சிக்கனம் சிரிப்பைத் தரும் (சிறு கதை)


சிக்கனம் சிரிப்பைத் தரும்

(சிறு கதை)

 

 

 

 

வீட்டு வரி கட்டுவதற்குரிய கடைசிக் கெடு இன்றுதான். என்ன செய்வது?
வங்கி நிலவரம் படு மோசம் ! யாரிடமாவது கேட்கலாமா?

ஹலோ பாஸ்கர் , நான் சுந்தர் பேசறேன். எப்படி இருக்கீங்க?
மறுமுனையில்...

ஓகே, ஒகே, நல்லாவே போயிட்டு இருக்குது? ஆமாம், என்ன செய்தி?

அது வந்து,

அட சும்மா சொல்லுப்பா!

வேறு ஒண்ணுமில்லை..
நானும் சுத்தமாக மறந்து விட்டேன். இன்றுதான் கடைசி தேதி வீட்டு வரி கட்டுவதற்கு.
கையிலும் பையிலும் சுத்தமாக காசு இல்லை கொஞ்சம் கைமாத்தா ஒரு 500ஈரோ
கடனாய் தந்தால் அடுத்தமாதமே நேர் செய்து விடுவேன்.

இதோ பார் சுந்தர் உனக்கு தெரியாதது எதுவும் இல்லை.
நீயாவது வாடகை வீட்டில் இருக்க! உனக்கு வீட்டுக் குடியிருப்பு வரி மட்டுந்தான் வரும்.
ஆனால், நான் சொந்தவீட்டுக்காரன் எனக்கு இரட்டை வரி வரும். அதாவது குடியிருப்பு மற்றும் வீட்டு வரி.  இப்பத்தான்  கட்டிவிட்டு வர்றேன்.என்னிடம் இல்லையே! என்ன செய்யறது? இருந்தால் கொடுத்துவிட மாட்டேனா என்ன?

பராவாயில்லை! என்னோட நேரம் அப்படி? என்று சொல்லியபடியே அவன்  திரும்பியபோது ?

திருப்புமுனையாக அவனது சட்டைபையிலிருந்து  செல்போனின் "பீப்" சத்தம்!

அவனுக்கு அழைப்பு விடுத்தது.


இதுவேற இந்த நேரங்கெட்ட நேரத்தில்.... என்று சொல்லியபடியே பையிலிருந்து செல்போனை எடுத்துப் பார்த்தான். வந்ததது ஒரு குறுஞ்செய்தி (SMS).

வணக்கம்!
உங்களது அக்கவுண்ட்டில் 500 ஈரோ கிரிடிட் செய்யப் பட்டுள்ளது.- மின்சாரத் துறை-

சிந்தனை செய்தது அவனது மனம்.

பயன்பாட்டிற்கு தகுந்தபடி மாதம்தோறும்  மின்சாரத் துறை  பிடித்து வந்த வருட  கட்டணத்தின் மீதித் தொகையே அது!
ஆமாம்! இது எப்படி சாத்தியமாயிற்று?

இல்லத்தரசியான அவனது மனைவி ராஜ் சுமி அவளது இல்லத்தில் செயல்படுத்திய...

"மின்சார சிக்கனம்" மற்றும் "எரிபொருள்  சிக்கனமே"!


கெடு முடிவதற்குள் கட்டுவதற்காக குடு குடுவென ஓடினான்.

அப்பொழுது அவனது கண்களில் தென்பட்டது ஒரு வாசகம்.
அது!

இன்று "உலக சிக்கன தினம் அக்டோபர் 30.



புதுவை வேலு

( இது ஒரு NRI  சிக்கனம் பற்றிய சிறு கதை)







 

 


14 commentaires:

  1. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. அருந்தமிழ் அன்பர்
      நறுந் தமிழ் கருத்தினை
      விருந்தாய் சமைத்தார்
      பெரு மகனார் வாழ்கவே!

      புதிய வருகை பொதிகையாய் பொங்கட்டும்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிக்கன எண்ணத்தை வெளிப்படுத்தும்
    சிறந்த கதை
    கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. படிக்க தூண்டும் பதிவு என்று பகன்றீர்கள்.
      மிக்க நன்றி பாவலரே!
      வணங்குகிறேன் வாசல் வந்து!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. சிக்கன தினத்தை முன்னிட்டு உருவான வெளியான சிறப்பு சிறுகதை. அருமை! வாழ்த்துக்கள். நன்றி !

    RépondreSupprimer
    Réponses
    1. "சிக்கனம் சிரிப்பைத் தரும்" - சிறுகதையின் சிறப்புக்கு சிறப்பு சேர்த்தீர்கள் சகோதரி,
      சிக்கன தினத்தை முன்னிட்டு உங்களுக்கு சிறப்பு நன்றிகள்!
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்ல கதை, எதார்த்த பதிவு, ஆனால் சில முரண்பாடுகள் உள்ளது. இரட்டை வரி கட்டுபவர்கள் எப்படியும் வீடு சொந்தமே, ஒரு வரி காட்டுபவன் பாடு திண்டாட்டம், முடிவில் ஒன்றும் இல்லை, இரட்டை வரி கட்டும் நபர் பெரும்பாலும் இரு சம்பள குடும்பமாக இருக்கும், ஒரு வரி கட்டுபவன் ஏதோ நிரந்தர அல்லது நிரந்தரம் இல்லா ஏழையை போல் அமைதி இல்லாத ஒரு ஆபத்தான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயம். அப்படி பட்டவன் உணவை, மின்சாரத்தை, தண்ணீரை குரைத்தால் ஒழிய சேமிப்பு என்பது சாத்தியம் இல்லை. இதுவும் NRI பதிவு. மறுக்க முடியாத உண்மை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. சொந்த வீட்டில் உள்ளவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை எப்படி நண்பரே? உங்களால் முன்னூதாரணங்கள் தந்து கருத்திடமுடிகிறது.
      தங்களின் மூன்றாவது கண் விழித்து விட்டத?
      என்கே தேடுவது சாம்பலை?
      சம்பல் பள்ளத் தாக்கிலா?
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கதையாவே இந்த சிக்கன தினத்தை பற்றி சொல்லிட்டீங்களா. பேஷ், பேஷ்.
    அருமையான கதை.

    RépondreSupprimer
  6. சிக்கன தினத்தை சிறப்புற வரவேற்றால் திருமிகு.சொக்கனின் வருகை
    எக்கணமும் நிகழும் அல்லவா?
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. அங்கிட்டு பணத்தை திருப்பி தரும் வாரியம்
    இங்குட்டு பீசை புடுங்கும் வாரியம் ..
    நல்ல கதை தொடர்க

    மலர்த்தரு

    RépondreSupprimer
    Réponses

    1. உள்ளார்ந்த கருத்தை உள்ளன்போடு சொன்னீர்கள்
      சொல்லோடு நில்லாமல் பொருளுணர்ந்து சொன்ன விதம்
      எதார்த்ததை எடுத்துரைத்த உம் கருத்து
      நாடு போற்றும் நற்கருத்து என்பேன் நான்!

      தங்களின் தரமிகு வருகை குழலின்னிசைக்கு பெருமை சேர்க்கட்டும்.
      வருகை தொடர்க! நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  8. மின்சார வாரியம் பணத்தை திருப்பித் தருகிறதா ,எந்த நாட்டில் அய்யா இந்த அதிசயம் நடக்கிறது ?அங்கே நானும் நிரந்தரமாய் வந்து விடுகிறேன் !

    RépondreSupprimer
  9. "சிக்கனம் சிரிப்பைத் தரும்" (சிறு கதை) இதனை
    தொடர்ந்து வந்த எனது பதிவில்....
    "விடுதலைத் திருநாள் "(புதுவை சுதந்திர நாள்) -ல் உள்ளது அய்யா அந்த அதிசயம் நிகழும் நாடு. வாருங்களேன் வந்து நிரந்தரமாக தங்குவதற்கு. எப்பொழுது அய்யா விசாவுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள்?
    வருகைக்கு மிக்க நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer