lundi 20 octobre 2014

மனதில் மகிழ்ச்சி மலரட்டும்பார் போற்றும் பாவேந்தர் பாரதிதாசனார் கண்டெடுத்த கவி மகனார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்  பகிர்ந்தளித்த தீபாவளி  பாடல் இது!
வசந்தத்தைத் தேடி மகிழ்வுடன்கூடி இனிய நாளில் இப்பாடலை மனதில் நிறைத்து இன்புற்று மகிழ்வோமே!
                                    புதுவை வேலு

 


நேயர் விருப்பம்


உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா 

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?

வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா

வளர்ந்தாலே போதுமடா 


சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு?

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு?

மின்னொளி வீசும் உன்னெழில் கண்டால்

வேறென்ன வேண்டுமடா வேறென்ன வேணுமடா?

வேறென்ன வேண்டுமடா வேறென்ன வேணுமடா?


உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா

  

பாடல்: உன்னைக் கண்டு நானாட -

திரைப்படம்: கல்யாணப் பரிசு

பாடியவர்: P.சுசிலா

இயற்றியவர்: பி. கலியாண சுந்தரம்

இசை: ஏ.எம். ராஜா

ஆண்டு 1959


                                     புதுவை வேலு                                    

16 commentaires:

 1. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
 2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 3. பட்டுக் கோட்டை சினிமாவுக்கு எழுதிய பாடல்..தற்போது தங்களுக்கும் தீபாவளிக்கும் பயன்பட்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. பாட்டை தந்தவரால் பயன் அடைந்தோமே நாம்!

   ஓட்டை தந்துவிட்டு ஓட்டாண்டி ஆவதனால் என்ன பயன்?
   வலிப் போக்கரே வாரி விடும் உம் கருத்தை தீப் பிழம்பாய்!
   வருகைக்கு நன்றி! தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
   புதுவை வேலு

   Supprimer
 4. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!]


  subbu thatha

  RépondreSupprimer
  Réponses
  1. வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன் எளிமையுடன்.
   நல்லாசிக்கு நயமிகு நன்றி உரித்தாகுக!
   புதுவை வேலு

   Supprimer
 5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  தங்களின் இந்த கண்ணன் பாடல் அருமை. ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses
  1. இனிய வருகை இன்பத்தை ஈட்டித் தந்ததது. தொடர் ஆதரவு வேண்டுகிறேன்.நற்கருத்தை நயம்பட இனி உரைப்பீர்!
   வாழ்த்துக்கள் வளம் சேர்க்கட்டும் வாழ்வில்.
   நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 6. மாதவக் கண்ணனவன் மீட்டுகுழ லின்னிசையை
  யாதவன் நம்பி இணையத்தில் - வேதனைகள்
  வெல்லுதமிழ்த் தீபா வளிவாழ்த்துச் சொல்லிமகிழ்
  நல்லுரைக்கு நன்றிசொல்வேன் நான்!

  எரியட்டும் தீமை! ஏறட்டும் அன்பு!
  புரியட்டும் உண்மை பலர்க்கு! - திரியிட்டே
  எங்கும் ஒளிபரப்பு முங்கள் பணிசிறக்கத்
  தங்கு தமிழ்வாழ்த்தி து!

  வாழ்த்தும் தங்கள் மனம் போல் வாழ்க !

  நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. ஊமைக் கனவு கண்டால் மாயக் கண்ணனவன்
   போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும்
   தீயினுள் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
   புரியும் உண்மை புலப் படும் திசை யெது?
   அன்பின் அடையாளம் நீ உதிக்கும் திசையோ?

   தங்கள் வாழ்த்தின் வாசம் உலகமெங்கும் வீசும்
   தென்றலாய், தேன் நிலவாய், தேவாமிர்தமாய்!
   நன்றியுடன்
   புதுவை வேலு

   Supprimer
 7. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவா்களின் பாடல் மூலம் தீபாவளி வாழ்த்து கூறிய சகோதரா் திரு.வேலு அவா்களுக்கு நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
 8. தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
  வருகையை கண்டு ஆனந்தம் நல் ஆனந்தமே!
  நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer
 9. குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் என் வண்ணமயமான தீபாவளி வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே. நல்ல பாட்டை தேர்வு செய்து, தகுந்த படங்களை கோர்த்து, முதல் தீபாவளி திருநாளை யாதவன் நம்பி சிறப்பு செய்தவிதம் அழகு.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. ஏட்டை எழுதுபவனுக்கு பாட்டை பயிலுவிக்கும் பாவலர் தாங்கள்.
   தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 10. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

  தீமை இருள் அகன்ற இந்த நன்னாளில் உலகெங்கும் மனிதநேய ஒளி பரவட்டும் !

  RépondreSupprimer
 11. மனித நேயத்தின் ஒளி வரும் திசை, நீங்கள் இருக்கும் திசைதான் என்பதை என்றோ நான் அறிவேன். உதவிக்கோர் உருவம் உண்டென்றால் அது நீவீர்தான் அய்யா!
  நன்றி!
  புதுவை வேலு

  RépondreSupprimer