முண்டாசுக் கவி பாரதி
(இன்று பாரதி பிறந்தநாள்
டிசம்பர்: 11)
பா ரதம் ஓட்டிய
சாரதியே
நா மகள் போற்றும்
நற்றமிழே
வாழ்க! நின்புகழ்
இவ்வையகத்தே!
***
முண்டாசுக் கவி பாரதிக்கு
தமிழ் முடிசூட்டி, என் கவிமுகம் காண கண்ணாடி பேழை கொண்டு என் முன்னாடி வந்து நின்றார். அன்னப்
பறவையின் குண அழகையொத்த வண்ணமிகு வானவில் படைப்பாளர் ஏழு வகை ஏற்புடைய திறனாளர்
என் அருமை நண்பர் திரு. ஜோசப் விச்சு
அவர்கள் அவரது வேண்டுதலை ஏற்று அவர்போல்
அல்லாது எளிய நடையில் சிறு துளிக்
கவிதையாக வடிகின்றேன். "பார் போற்றும் பாரதி"யை படித்த நீங்கள் இதற்கும்
கருத்து வடிப்பீர்கள் என நம்புகிறேன்.
ஏனெனில் "நம்பிக்கைதான் நம் வாழ்க்கை. நன்றி!
-புதுவை வேலு-
நற்றமிழ்
புலவன் பாரதி
நானிலம் போற்றும் நற்கவி பாரதி
பொற்கிழியின்றி புதுவையில் வாழ்ந்தே
சொற்ப தாகத்திற்கு தமிழைக் குடித்தே
கவி அமுதை அளித்தே மகா கவியானார்.
பாஞ்சாலி சபதம் நூலின் சாரதி பாரதி
குயில் பாட்டின் குருபீடம் பாரதி
பயிலும் பாட்டை தனியாய் தந்தவன் பாரதி
மக்கள் நெஞ்சம் மகேசன் மஞ்சம்யென
பாக்கள் வடித்த மாகவி பாரதியை
பூக்கள் போல பூப்பெய்தி-தமிழ்
ஈக்கள் போல் மொய்த்திடுவோம்
புதுவை வேலு
(முதல் பதிவு mardi 16 septembre 2014)
வணக்கம்
RépondreSupprimerபிறந்த நாளில் பாரதிக்கு சாத்திய கவி மாலை
மலர் மாலையாக மலர்கிறது..அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம் திரு ரூபன் அவர்களே!
மகா கவிக்கு சாற்றிய கவிதை மாலையின் வாசத்தை உலகறிய செய்ய வந்த தங்களது வாசமிகு கருத்துக்கு புதுவை வேலுவின் பாசமிகு நன்றிகள்!
என்றும் அன்புடன்,
புதுவை வேலு
பாரதியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து பாடிய கவி அருமை.
RépondreSupprimerபாரதியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து நண்பர் சொக்கன் அவர்களே
Supprimerதங்களது "எண்ணங்களை" கருத்தாக தந்தமைக்கு மிக்க நன்றி!
தொடர் வருகை தருக!
என்றும் அன்புடன்,
புதுவை வேலு
பாரதிக்கு மறுபடியும் புகழ் சேர்க்கும் புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.
RépondreSupprimerகண்ணன் பாட்டின் குழலின்னிசை பாரதியா புதுவை வேலுவா?
உங்கள் நண்பர் திரு. ஜோசப் விஜு அவர்களுக்கு மரியாதை செய்த விதம் அருமை.
மத்திய அரசு பாரதிக்கு பெருமை செய்த விதம் மறக்க முடியுமா நண்பரே?
கவிதைக்கு மரியாதை நன்று.
sattia vingadassamy
நண்பர் சத்தியா அவர்களே!
Supprimerகுழலூதும் கண்ணன் தந்ததுதானே குழலின்னிசை!
நாதத்தை செவி மடுப்போம்! புவியில் சிற்ப்போம்!
நல்லவர் நட்பை நானிலம் போற்ற பேணிடல்தானே
நற்றமிழர் பண்பாடு! அதனால்தான் இந்த கவிதையின் வெளிப்பாடு!
கருத்திட்ட நல்ல இதயத்திற்கு இனிய நன்றி!
புதுவை வேலு
பாரதியின் பிறந்தநாளுக்கு அருமையான பரிசு!
RépondreSupprimerபாரதியின் பிறந்தநாளுக்கு அருமையான பரிசு கவிதை என்பதை போல்
Supprimerசகோதரியே! தங்களின் வருகையும், கருத்தும்,
"குழலின்னிசை"க்கு அன்பு பரிசு
என்பதில் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் எனப்து இல்லையே!
நன்றியுடன்,
புதுவை வேலு
சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
RépondreSupprimerபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Supprimer"தீதும் நன்றும் பிறர் தர வாரா
நல்லது/ அல்லது இது போன்ற
கருத்துக்களை நீங்கள் வழங்காமல்
பெறுவது அரிதினும் அரிது அய்யா!
இனியவருகை புரிந்து பாரதியின் புகழுக்கு
மேலும் சிறப்பு செயத சிறந்த நல் உள்ளத்திற்கு நன்றி அய்யா!
புதுவை வேலு
மகாகவி பாரதியைப் பற்றிய கவிதை நன்று
RépondreSupprimer"பிடிவாதம்" செய்யாமல் "சொல்வீரே நல்லோரே"
Supprimer"புயல் மழைக் காலங்களில்" மட்டும் சொல்லாமல்
என்றும் நல்ல பல கருத்துக்களை குழலில்
இன்னிசையாக இசைப்பீரே!
வருகை தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
பாரதி போற்றுவோம்
RépondreSupprimerபாரதி போற்றுவோம்
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!" - பாரதியார்
Supprimerகரந்தையாரின் நட்பு இருக்கையிலே!
வருகை தந்து பாரதியின் பிறந்தநாள் பதிவிற்கு கருத்தினை
தந்தமைக்கு நன்றி நண்பரே!
புதுவை வேலு
சிறப்பு... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerதங்களை பற்றிய சிறப்பு சிந்தனகளை
தமிழ் ஆர்வலர்கள் மூலம் அறிந்து வருகிறேன்.
மகிழ்ச்சி!
காணும் இடமெல்லாம் தங்களின் கருத்து நட்சத்திரம்
ஒளி வீசுவதை நானறிவேன்.
எங்கும் நீக்கமற நிறைந்தவருக்கு நிறைவான நன்றி!
வருகை தொடரட்டும்!
புதுவை வேலு
மிகவும் சிறப்பான பாரதியைப் பற்றிய கவிதை!
RépondreSupprimerவணக்கம் அய்யா!
RépondreSupprimerநலம் நாடி நட்பு பேணும் நல்ல உள்ளம் படைத்த
தங்களை காணாமல் வலை தள உலகம்(தமிழ்)
கருத்து கணிப்பை நடத்த இயல வில்லை அய்யா!
என்னாயிற்று? எதுவாயினும் தங்களது அந்த...
ஹா! ஹா- ஹா...... குறும்பு சிரிப்பு ஒன்றே போதும்
எறும்பாய் சுறுசுறுப்புடன் எவரும் உழைப்பதற்கு.
வாருங்கள்! வளமான கருத்துப் பேழையினை என்றும் தாருங்கள் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
முண்டாசுக் கவி பாரதிக்கு தாங்கள் பாடிய பிறந்தநாள் கவி அருமை! நன்றி!
RépondreSupprimerஅன்பு சகோதரியே!
Supprimerமுண்டாசுக் கவி பாரதி கண்ட புதுமை பெண் வடிவாய்
வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெற்று வளமுடன் வாழ
பாரதியின் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
வருகைக்கும் தவறாத கருத்து பதிவிற்கும் நன்றி!
புதுவை வேலு
பாரதியை புகழும் கவிதை அருமை!
RépondreSupprimerபசுமையான கருத்தை நெஞ்சில் பதியும் வகையில் கருத்தாக தந்த
RépondreSupprimerநண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி!
என்றும் அன்புடன்,
புதுவை வேலு
பாரத நாட்டின் பார’’தீ’’க்கு பாரீசிலிருந்து புகழ்மாலை சூடிய பாண்டிச்சேரி பாவலரே நீர் வாழ்க ! உமது கவித்துவம் வளர்க ! என அரபுத்’’தீ’’விலிருந்து வாழ்த்துகிறேன்.
RépondreSupprimerஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
RépondreSupprimerநன்றி!
திரு கில்லர்ஜி அவர்களே
அரபு வயலின் தமிழ் மரபு நாயகனே!
பொங்கட்டும் பொங்கு தமிழ்!
திக்கெட்டும் பெருகட்டும்
தீந்தமிழால்!
உனது பணி வலைச்சரத்தில்!
வாழ்க! வளர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
அய்யா,
RépondreSupprimerமரபின் வாசலை விடாது தட்டும் உங்கள் பாரதியின் கவிதை நன்று.
அதிலென்ன திருஷ்டிப் பரிகாரம் போல் என் பெயர்?
வேண்டாமே.....!!!!
அருள்கூர்ந்து அதையெல்லாம் விடுத்து உங்களது திறமைகளை இன்னும் மிளிரச் செய்யுங்கள் அய்யா!
அதுவே தமிழுக்கு மேலதிகத் தேவையுள்ளது.
நன்றி!
அய்யா, தன்னடக்கம் தகுதிக்கு விண்ணையளக்கும் வித்தையை தரும்
RépondreSupprimerஎன்பதை சொல்லாமல் சொல்லி சென்றுள்ளீர்கள் நண்பரே!
அருள்கூர்ந்து அதை போற்றுகிறேன்.
திறமைகளை இன்னும் மிளிரச் செய்ய குழலின்னிசை இனிமை குன்றாது என்றும் இசைக்கும்.
வருகை தந்து கருத்து பகன்றமைக்காக சாற்றுகிறேன் நன்றி என்னும் மாலையை !
நன்றியுடன்,
புதுவை வேலு
முண்டாசுக்கவிஞனின் பிறந்த நாள் பரிசாக நீங்கள் கோர்த்த பாமாலை மணம் வீசுகிறது. வாழ்த்துகள்....
RépondreSupprimerமனம் வீசும் கருத்தினை
Supprimerஅருந்தமிழில் அருளிய அன்பு நண்பருக்கு
மிக்க நன்றி!
தொடர் வருகை தருக!
புதுவை வேலு