jeudi 18 décembre 2014

ஆன்மிகப் பண்பாட்டு விழிகள்.(திருப்பாவை/திருவெம்பாவை.)


திருப்பாவை/திருவெம்பாவை.

 

 



 நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை.

திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை.


 பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும்  தமிழகத்தின்  இரு ஆன்மிகப் பண்பாட்டு விழிகள்.




மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர்.

குதிரைக்குரிய பணத்தில் அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார்.

கோதையோ கடவுளுக்கான மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாச்சாரத்தில் பிழைப்பட்டாள். 

மணிவாசகரை சிவபிரான் ஆட்கொண்டார்!

சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார்.

இருவருமே இறைஒளியில் கலந்தபெருமை கொண்டவர்கள் . 








திருப்பாவை - பாசுரம் 04 



ஸ்ரீ ஆண்டாள் அருளிய 


ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந்தோளுடைப் பத்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:

உலகில் நல்ல செயலைச் செய்யத் 
தொடங்கினால் பலரும் வந்து தன்னாலியன்ற உதவியைச் செய்வார்கள்.

நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர் நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான்.

அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள்.

 மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல் மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும். நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு!

ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல்; ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு; மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு; பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு!

ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்! 

நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள்.

பிறருக்கு உதவுவதே நம் கடமையாகும்.

(இந்தப் பாசுரம் "திருவனந்தபுரம்' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.)





திருவெம்பாவை-பாடல்( 04 )




அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

 
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவுங்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.



விளக்கம்: 

ஒளியுடைய முத்துப்போன்ற பல்லினை யுடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையோ? (என்று பல மாதர் ஒருத்தியை எழுப்புவாள் வினவ, அவள்) 
அழகிய கிளிபோன்ற சொல்லினர் எல்லாரும் வந்துவிட்டார்களா? (என்று கேட்கப் பிறர் கூறுவார்கள்)

வந்தவர்களைக் கணக்கிட்டுக்கொண்டு, உள்ளபடி சொல்கிறோம். அதுவரையும், கண்ணினைத் துயிலச் செய்து, வீணாக நேரத்தைக் கழித்துவிடாதே.





விண்ணவர்கள் யாவர்க்கும் ஒப்பற்ற அமுதமாய் உள்ளவனை, இனிய காட்சி தருவானை, நாம் பாடி அழுது மனம் முழுதும் கனியும்படி உருகுவோமாக.

நாங்கள் வந்திருக்கிறவர்களை எண்ணமுடியாது. நீயே எழுந்துவந்து அவர்களை எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் (மீண்டும் போய்த்) தூங்குக.

குறிப்பு: 
இப்பாடல், பலவிகரணி, கலவிகரணியைத் துயிலுணர்த்துவதாகக் கூறுவர்.

                                                           தொடரும்!

புதுவை வேலு

(நன்றி: தினமலர்)

12 commentaires:

  1. படித்து மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. ஆதவன் போல் உதயமாகி
      ஆதரவு ஓளியினை குழலின்னிசை யின் மீது படரும்
      கரந்தையார் என்னும் கதிரவனை நாளும் போற்றி
      நன்றியினை நாமுறைப்போம்!
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களையும் அதற்கான அருமையான விளக்கத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யா தங்களது வருகையால் குழலின்னிசை மகிழ்வுறுகிறது!
      ஆன்மீக இலக்கியத்தை பாராட்டி ரசிக்கத் தக்க வகையில் இனிய கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!
      இவ்வளவு காலம் தங்களைப் பற்றி அறியாதது
      குழலின்னிசையின் அறியாமை!
      வருகைக்கும் வளமான கருத்திற்கும் மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  3. வாழ்க உங்கள் திருத்தமிழ் தொண்டு....

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. சமம் மதம் என்று சொல்லி சம்மதம் தந்த சாமானியரே!
      போற்றுகிறேன் !
      நற்புகழுடன் வாழ்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையான விளக்கம் ஐயா! நாலாயிரமும், நாயன்மாரும் என்ன தமிழ் இல்லையா ஐயா! தமிழ் கொஞ்சி விளையாடி அதுமட்டுமல்ல...அந்த இறையுணர்வு...சொல்லி மாளாது ஐயா...அருமையான பதிவு...

    RépondreSupprimer
    Réponses
    1. ஆசானே!
      திருப்பாவையோடு
      திருவெம்பாவையும் ஓத சொன்னவரே தாங்கள்தானே அய்யா!
      தங்களால்தான் இது இன்று சாத்தியமாயிற்று.
      அரும்புகழை அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி!
      அன்பை நாடும்,
      புதுவை வேலு

      Supprimer
  5. "திருப்பாவை/திருவெம்பாவை" இரண்டினையும் ஒரே பதிவில் சோ்த்து படிக்கும் போது ஹரியும் சிவனும் ஒன்றாய் மனதில் தோன்றி ஆன்மிக ஆனந்தத்தை அள்ளி தருகிறாா்கள்.அருமையான பதிவு! பாடல்களை விளக்கத்துடன் அறிந்தோம். நன்றி!

    RépondreSupprimer
  6. நன்றி சகோ!
    ஹரியும் சிவனும் ஓன்னு!
    அறியாதவன் வாயின் மண்ணு! என்று சொல்லுவார்கள்!
    நீங்கள் இருவரையும் நினைந்து நினைந்து மனம் உருகியுள்ளீர்கள்§
    பொன்னான வாழ்வு மலர வாழ்த்துகிறேன்!
    வருகைக்கு மிக்க நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  8. நண்பரே!
    அரும்புகழை அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி!
    அன்பை நாடும்,
    புதுவை வேலு

    RépondreSupprimer