இந்த நாள் இனிய நாள்
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்!
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
(விதி விலக்கானவர்கள் விலகி நிற்கட்டும்!
அவர்களுக்கும் அனனத்து நாட்களும் நல்ல நாட்களாகவே அமையட்டும்)
அதற்கான எளிய வழி இதோ !
வாரத்தின் ஏழு நாட்களும் நாம் சொல்ல,
ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றி தந்துள்ளார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள்,
பலன் அதிகம் தரும் ‘படைவீட்டு வாரப்பாடல்கள்’ என்றே போற்றப்படுகின்றன
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். ஆரோக்கிய வாழ்வினை நோக்கி செல்லுங்கள்!
ஏழ்மையை வெல்லுங்கள்! துன்ப இருளை போக்கி இன்ப ஒளியை
தீபத்திருநாளில் ஏற்றுங்கள். நம்பிக்கை வெளிச்சம் பரவட்டும், நன்மைகள் நம்மை நோக்கி வந்தடையட்டும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும்
இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய்
ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள்
பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம்
வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால்
உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை
வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர்
தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை
வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய
திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும்
ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத
பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை
வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன்
பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு
அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம்
அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில்
வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும்
இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம்
திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை
முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை
வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும்
ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா
வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர்
வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை
வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி
தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில்
நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால்
அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில்
வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
ஆகா...! நன்றி...
RépondreSupprimerசனிவாரமதில் வந்து கருத்தருளிய
Supprimerநண்பர் திண்டுக்கல் தன்பாலன் அவர்களே
உம்மை போற்றி!
போற்றுகிறேன்!
நன்றி!
புதுவை வேலு
நன்றி நண்பரே
RépondreSupprimerசனிவாரமதில் வந்து கருத்தருளிய
Supprimerகரந்தை ஜெயக்குமார் அவர்களே
உம்மை போற்றி!
போற்றுகிறேன்!
நன்றி!
புதுவை வேலு
அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் இயற்றிய வெண்பாக்களை வழங்கியமைக்கு நன்றி..
RépondreSupprimerவாழ்க நலம்!..
துன்பத்தை துடைக்கும் இந்த இறை துதியினை,
Supprimerஅருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் புகைழினை போற்றி
சனிவாரமதில் வந்து கருத்தருளிய
துரை செல்வராஜூ அவர்களே
உம்மை போற்றி போற்றுகிறேன்!
புதுவை வேலு
சிறந்த பதிவு வாழ்த்துகள் நண்பா.
RépondreSupprimerநன்றி நண்பரே
RépondreSupprimerசனிவாரமதில் வந்து கருத்தருளிய
உம்மை போற்றி போற்றுகிறேன்!
புதுவை வேலு
எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய கிழமைதோறும் வாரியரின் துடிகள்.
RépondreSupprimerஷண்முக கடவுளின் அருள் பெற புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
sattia vingadassamy
தமிழ்க் கடவுள் முருகனின் அருளை அனைவரும் வேண்டுவோம்!
Supprimerவேண்டிப் பெறுவோம்.
அழகிய கருத்தினை அள்ளித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
துன்பத்தை துடைக்கும் இந்த இறை துதியினை,
RépondreSupprimerநாளும் தவறாது துதித்து, இடையூறு இல்லாமல், இன்பத்தை இனிதே ஈட்டுகிறோம் அய்யா!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerஅய்யா!
தங்களது கருத்தினை கண்ணுற்றேன்!
நம்பிக்கை வெளிச்சம் பரவட்டும், நன்மைகள் நம்மை நோக்கி வந்தடையட்டும்.
என்று சொல்லுவது போல் உள்ளது உமது கருத்து.
ஏற்கின்றேன்! எழுச்சியுடன்!
தவறாது வாருங்கள்! தனித் தமிழை தாருங்கள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
பல்வேறு சமயங்களை கொண்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சார்ந்த மதபோதகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார் சுவாமிகள். முருகன் புகழ் பாடிய அவரது வாய் என்றும் மததுவேசம் பேசியது இல்லை. அப்படிப்பட்டவர் அருளிய துதிகள் பாடி நாளும் நலம் பெறுவோம்.
RépondreSupprimerநன்றி
சாமானியன்
RépondreSupprimerமததுவேசம் பேசாத மனிதரை!
கிருபானந்த வாரியார் சுவாமிகளை
மனதுக்கு இதமாக புகழ்ந்துரைத்த
பண்பினை வாழ்த்துகிறேம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களது படைப்பையும்,
இங்கே கருத்தினையும் தந்தமைக்கு பாராட்டுக்கள்§
நன்றியுடன்,
புதுவை வேலு
"படைவீட்டு வாரப்பாடல்களை" நமக்கு இயற்றி தந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவா்களுக்கும் அதை குழல் இன்னுசையில் பதிவு செய்து முருக பெருமானின் அருள் கிடைக்க எங்களுக்கு வழி தந்த சகோதரா்க்கும் எனது நன்றிகள்!
RépondreSupprimer
RépondreSupprimerமுருக பெருமானின் அருள் கிடைக்க வாழ்த்துகிறோம்!
வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரி!
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி ஐயா! பகிர்ந்தமைக்கு அதுவும் முருகனை அனுதினமும் நினைத்துத் துதித்த வாரியாரின் படை வீட்டு வாரப்பாடல்களை....முருகனை அனுதினமும் துதிக்கும் நாங்களும் குறித்துக் கொண்டோம்..மிக்க மிக்க நன்றி!
RépondreSupprimerகந்தன் கருனை கிடைக்கும் அய்யா!
RépondreSupprimerநன்றியுடன்,
புதுவை வேலு