அகல் விளக்கு
அகல் விளக்கு
வாங்கிவர அங்காடித் தெருவுக்கு சென்றிருந்தான் ஆனந்த்.
அவன் சென்று
வருவதற்குள் வீட்டு வேலைகள் அனைத்தையும் அம்சமாக முடித்துவிட்டு
"வம்சம்" சீரியலை
சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
அப்போது வெளியில்
இருந்து அழைப்பு மணி சத்தம் கேட்கவே...
எழுந்திருக்க
மனமில்லாமல் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த தனது ஆறு வயது மகனை அழைத்து
யாரென்று பார்க்கச் சொன்னாள்.
அம்மா! அப்பாதான்
வந்திருக்கார் என்று சொல்லியபடியே,
கதவின்
தாழ்ப்பாளை திறந்து விட்டு,
விடுபட்ட அவனது
விளையாட்டை தொடர சென்று விட்டான்.
அவர்களது ஒரே
மகன் ருபேஷ்.
என்ன சித்ரா?
அதுக்குள்ள படம்
பார்க்க உட்கார்ந்திட்டியா?
விளக்குதான்
வாங்கி வந்துட்டேனே,
சீக்கிரமா எழுந்துபோய் ஒழுங்காய் ஒவ்வொன்றாய்
ஒளி ஏற்று!
நான் வரும்போதே
பார்த்தேன் !
பக்கத்து வீட்டில்
எல்லாம் ஏற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றான்.
இதோ பாருங்க !
உங்களை, நான் விளக்கு மட்டும்தான் வாங்கிவர சொன்னேனேத்
தவிர
பக்கத்து
வீட்டில் ஏற்றியாச்சா?
கோயிலில் சொக்கப்
பானை கொளுத்தியாச்சா?
தெருவில் பசங்க
எல்லாம் காத்தி சுத்துறாங்களான்னா ?
பார்க்க
சொன்னேன்! என்றாள். அப்போது,
எரியும்
தீபத்தின் திரியை சற்று உள்ளுக்கு இழுத்ததை போன்று வார்த்தை பிரகாசம் குன்றிப்
போய் நின்றான் ஆனந்த்!
"ஆடிப் பாடி
அண்ணாமலை தொழ
ஓடிப்போம்
நமதுள்ள வினைகளே"-
- அப்பர் –
வாக்கின்படி,
பார்க்கும்
இடமெல்லாம் « தீப ஜோதியாய் » இருக்கும்
ஈசனை நினைந்தபடி,
ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம்
என்னும் அறிவொளியை, அவர்களது வீடு முழுவதும்
பரவச் செய்ய, மூவரும் இணைந்து, ஆனந்த் வாங்கி வந்த ‘சிட்டி’ விளக்குகளில்
திருக்
கார்த்திகை தீபங்களை ஏற்றினார்கள்.
அப்போது !
அரசு அறிவித்தபடி
மின்சார பற்றாக்குறையின் காரணமாக அவர்களது வீட்டில்...
மின்சாரம்
காணாமல் போனது !
ஆனால் ?
அவர்களது வீடோ அன்று!
இருளில் மூழ்க
வில்லை!
காரணம் !
உலகிற்கே
படியளக்கும் ஈசன்
இன்று
உலகிற்கு
ஒளியையும் சேர்த்து படி அளந்து விட்டார் போலும்.
‘சிட்டி(அகல்)
விளக்குகளில் சிரித்தபடி’
நடை நல்லா இருக்கு சர சரன்னு போகுது ..
RépondreSupprimerஇன்னும் ஒரு முறை டிராப்ட் அடித்திருந்தால் இதைவிடப் பெரிய ரீச் கிடைக்கும்...
கதைகளில் வெர்சன் டூ வரக்கூடாத என்ன?
நன்றி தோழர்
இன்னும் ஒரு முறை டிராப்ட் அடிக்க நேரமில்லை
Supprimerநேரமில்லை தோழரே!
எனினும் இனி மிகுந்த சிரத்தையுடன் எழுகிறேன்!
உண்மை கருத்து வரவேற்கின்றேன்!
நல்ல விமர்சனங்களை!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerவருகையை கண்டு மகிழ்ச்சி!
Supprimerநூல் இன்னும் கிடைக்கப் பெற வில்லை!
வந்ததும் தெரிய படுத்துகிறேன்.
மிக்க நன்றி !
புதுவை வேலு
மனதில் உள்ள இருள் அகல வேண்டும்...
RépondreSupprimerமனதில் உள்ள இருள் அகல
Supprimerவேண்டுவோம் நண்பரே! நன்னாளில்
நல்ல கருத்தினை தந்தமைக்கு நன்றி
புதுவை வேலு
அழகான நடையில் இனிமையான கதை.. வாழ்க நலம்..
RépondreSupprimerதங்களை போன்றவர்கள் தரும்
Supprimerவிமர்சனக் கருத்துக்களை முன்செல்லும்
படிக் கட்டுகளாக எண்ணி செயல் படுவேன்!
வருகைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஇரசிக்கவைக்கும் கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"சகல கலா ரசிகரே"
Supprimerவணங்குகிறேன்!
வரவேற்கின்றேன் தங்களது கருத்துக்களை!
நன்றியுடன்,
புதுவை வேலு
நல்ல நடையழகு நண்பரே.... வாழ்த்துகள்
RépondreSupprimerநண்பரே!
Supprimerதங்களது மீசை அழகை விடவா?
இனிய கருத்து வழங்கியமைக்கு நன்றி!
புதுவை வேலு
எல்லாவற்றுக்கும் கடவுளைக் காரணம் காட்டும் நல்ல மனப் பாங்கு......!?
RépondreSupprimer"அவனின்றி ஓர் அணுவும் அசையாது"
RépondreSupprimerஅய்யா!
இது எம் கருத்து
நன்றியுடன்,
புதுவை வேலு
கதைக்கு தேவையான நடை அழகு. அப்பர் ஏன் வந்தார் ? என் பாட்டி சொல்வார்கள் கரண்ட் விளக்கை நம்பி எலை போதாதே - காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வை. உண்மை நண்பரே.
RépondreSupprimersattia vingadassamy
"ஆடிப் பாடி அண்ணாமலை தொழ
Supprimerஓடிப்போம் நமதுள்ள வினைகளே"
- அப்பர் –
அகல் விளக்கிற்கு சிறப்பு செய்யவே அப்பர் வந்தருளினார் நண்பரே!
என் பாட்டி சொல்வார்கள் கரண்ட் விளக்கை நம்பி எலை போதாதே - காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வை.
முதியவர்களின் அனுபவ அறிவுரை ஆரோக்கியத்தை அள்ளித் தரும்.
கருத்தினை வழங்கிய நண்பருக்கு நன்றி!
புதுவை வேலு
“அம்சமாக முடித்துவிட்டு வம்சம் சீரியலைப் பார்த்தாள்“ எதுகை மோனையும் சிறுகதையில்!
RépondreSupprimerஅகல் விளக்காக இருந்தாலும் ஒளி அகலும் விளக்காகத்தான் இருக்கிறது.
கதையோடு உங்கள் ஆன்மீக ஒளியையும் சேர்த்துப் பாய்ச்சி விட்டீர்கள்!
உங்கள் விளக்கின் ஒளி இங்கும் வீசுகிறது!
வாழ்த்துகள் அய்யா!
நன்றி
அகல் விளக்கின் வெளிச்சத்தை வெளி உலகிற்கு கொண்டு சென்று
Supprimerஒளி வீச செய்தது அய்யாவின் அருமையான கருத்து!
அறிவொளியும் இறையொளியும் இணைந்தால் ஆனந்தமே!
நன்றியுடன்,
புதுவை வேலு
நன்றி அய்யா!
RépondreSupprimerநல்ல மனப் பாங்கு......
வணங்குகிறேன்!
நன்றியுடன்,
புதுவை வேலு
நல்ல கதை! இருளை நீக்கும் மனத்தின் இருளையும் நீக்கும் அந்த இறைவனின் தீப ஒளி பற்றிய அருமையான கதை..ஐயா!
RépondreSupprimerகதை க்கு விதையானது அய்யா உமது கருத்து,
RépondreSupprimerதொடர் வருகைக்கு மிக்க நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு