"இனிக்கும் பழ மொழிகள்"
தமிழுக்கு விழுக்காடு பெற்றுத் தந்த நூல்களுள் ஒன்று
மூன்றுறை
அரையனார் தந்த பழமொழி நானூறு என்னும்
பதிணென் கீழ்க்
கணக்கு வகையினை சேர்ந்த நூலினை
நாம் அறிவோம்!
அறிவின் ஆற்றலை
செம்மை படுத்தி நினைவில் நிற்க செய்யும் தகுதி தமிழ் தந்த
பழமொழிகளுக்கு உண்டு.
அந்த வகையில்
மூன்றுறை அரையனாரை முன்னுதாரணமாக கொண்டு
பழக்க
வழக்கத்தில், புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளை !
இப்போது நாம்
பார்ப்போமே!
செம்மொழியாம் நம்
தமிழ் மொழியின் உயிராக நிற்கும் எழுத்துக்களை... அதாவது,
உயிர் எழுத்துக்களை
முதல் எழுத்தாக கொண்டு ஆரம்பிக்கும்
பழமொழிகளில் சில உங்களின் பார்வைக்காக
இதோ! அவைகள்!
அறிவுக்கு முன் செல்லும் நாக்கு, அதை உடையவன் மக்கு.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
அருமை இல்லாதவன் வீட்டில் எருமையும் குடி இருக்காது
அடாது தடை வரினும் விடாது முன்னேறு
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
ஆழமற்ற அறிவு சாரமற்று நகைக்கும்
ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்து
ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ? நான் யாரோ?
இல்லையென்ற உண்மை நாளையென்ற பொய்யைவிட மேல்
இறைத்த கேணி ஊறும்; இறையாத கேணி நாறும்.
இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பின்னால் ஆகாது.
இரண்டு தப்புகள் ஒரு ஒப்பு ஆகாது
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
ஈக்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
ஈட்டி எட்டும் மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்.
ஈர நாவுக்கு எலும்பு இல்லை
உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்
உளவு இல்லாமல் களவு இல்லை.
ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லும் பல்லி கூழிலே விழுந்ததாம்
ஊரார் நாய்க்குச் சோறிட்டாலும் அது உடையவன் வீட்டில்தானே குரைக்கும்?
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்
ஊன்றக்கொடுத்த தடி என் உச்சியை உடைக்கிறது
எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்!
எல்லாம்
அறிந்தவனும் இல்லை, எதுவுமே அறியாதவனும் இல்லை.
எழுதுகிறது
பெரிதல்ல, இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
எடுப்பாரும்
பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் மெத்த உண்டு.
ஏறச்சொன்னால்
எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
ஏவுகின்றவனுக்கு
வாய்ச்சொல், செய்கின்றவனுக்கு தலைச் சுமை.
ஏடு அறியாதவன்
பீடு பெறாதவன்
ஏறவிட்டு ஏணியை
வாங்கினது போல
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்து வரைதான் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்களி.
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
ஐயோ என்றாலும் ஆறு மாதம் பாவம் பிடிக்கும்
ஒட்டைக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
ஒடிந்த கோல் ஆனாலும்
ஊன்றுகோல் ஆகும்
ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழைந்து விடும்
ஒளி இல்லாவிட்டால் இருள்; இருள் இல்லாவிட்டால் ஒளி.
ஓட்டைக் கப்பலுக்கு ஒம்போது மாலுமி
ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை
புதுவை வேலு
நன்றி: (பட உதவி கூகுள்/AND-பழமொழிகள்)
பழமொழிகளை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimerநெஞ்சில் வைத்து போற்றுகிறேன்!
Supprimerஉமது படைப்புகளை அய்யா!
வருகைக்கு மிக்க நன்றி!
தங்களுக்கு உண்மையானவன்,
புதுவை வேலு
அனைத்துமே நல்லத் தகவல்களை நயமாகச் சொல்கிறது.நன்று தொடர்ந்து எழுதுங்கள்
RépondreSupprimerநல்ல ஊக்கம் தந்து
Supprimerஎமது ஆக்கத்தை அதிகம் செய்வதற்கு
துணையாக நிற்கும் தங்களுக்கு மிக்க நன்றி!
தொடர் வருகை தருக!
புதுவை வேலு
பேச்சுக்கு பொருள் சேர்க்கும் அறிய பழமொழிகள் பல அறிய முடிந்ததது:)
RépondreSupprimer**உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்** இது தான் புரியல!
சகோதரியே!
Supprimerபேச்சுக்கு உயிர் கொடுத்தது
தங்களது வருகையும் கருத்தும்.
மிகவும் உயரத்தில் இருந்து பார்க்கும் போது
பெரியது சிறியதாக தெரிவது இயல்புதானே
(இது எனது சிற்றறிவுக்கு எட்டிய கருத்து)
வருகை தொடரவும்,
நன்றியுடன்,
புதுவை வேலு
இப்போ புரியுது:) நன்றி சகோ!
Supprimerபழமொழிகள் தமிழின் பெருமையல்லவா
RépondreSupprimerநன்றி நண்பரே
கரந்தை மாமனிதர்கள் வரிசையில்
Supprimerதங்களது படைப்பின் மூலம் இணையும் நாள்
வெகுதொலைவில் இல்லை நண்பரே!
வருகைக்கு நன்றி!
புதுவை வேலு
அருமையான தொகுப்பு ...
RépondreSupprimerநன்றி
சிறந்த கருத்தினை தொடுத்து
Supprimerசிறப்புற வழி நடத்தும் வருகைக்கு
மிக்க நன்றி தோழரே!
புதுவை வேலு
அனைத்தும் அருமை... உண்மை... சேமித்துக் கொண்டேன்...
RépondreSupprimerசிற்றெறும்பை போன்று
Supprimerசெயலாற்றும் சிறப்பினை
உம்மிடமிருந்துதான் நாங்கள்
கற்றுக் கொள்ள வேண்டும் .
நண்பரே உமது சேமிக்கும் பாங்கு மற்றும் சுற்சுறுப்பு
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஎல்லாம் உண்மைதான்
பழமொழிகள் பொய் என்றால் பழச்சோறு சுடும் என்பார்கள் அருமையாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்..
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அய்யா!
Supprimerவருகைக்கு மிக்க நன்றி!
தங்கள் பக்கம் வந்து கருத்தினை
வழங்கியுள்ளேன்!
வருகை தொடரவும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
பழமொழிகளை படிக்கும்போது சிலவற்றை நான் கடந்து வந்ததாகவே உணர்கிறேன். இன்னும் சில தத்துவம்போல் உள்ளது. மேலும் சில வாழ்வியல் நெறியை சொல்கிறது. ஒரு பழமொழி மட்டும் (4, 5 முறை படித்தேன்) ஆபத்தை உணர்த்துவதாக உள்ளது (ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்து).
RépondreSupprimerபழமொழிக்கு புதுமொழியும் தேவைப்படுமே எழுதுங்கள் புதுவை வேலு அவர்களே. அருமை.
sattia vingadassamy
மிகவும் ஆழ்ந்து உணர்ந்து பழமொழிகளை உள்வாங்கி படித்துள்ளீர்கள்
Supprimerவாழ்த்துக்கள்!
அச்சம் கொள்ளற்க நண்பரே!
வாழ்வியல் நெறி என்பது நம்மை நெறி படுத்த உதவுமே
அன்றி அச்சத்தை தெளிவுறுத்தம் அவ்வளவே!
வருகை தந்து கருத்து பகன்ற தங்களுக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
பல பழமொழிகள் புழக்கத்தில் இருப்பவை. சில புதிதாய்க் கேட்பவை. பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerநன்றி அய்யா!
RépondreSupprimerதங்களை போன்றவர்களின் வருகை புழக்கத்தில் இருக்கவே
குழலின்னிசை வேண்டுகிறது.
நாளும் நல்ல பல கருத்தினை வழங்கி வரும் தங்களுக்கு மிக்க நன்றி! அய்யா!
புதுவை வேலு
அறிவுக்கு விருந்தாகும் பழமொழிகள்
RépondreSupprimerஔடதமாய்த் தந்தீர்கள்!
புதிய மொந்தையில் பழைய கள், அருமை!
நன்றி
அறிவுக்கு நல்விருந்து படைக்க ஔவை வந்துவிட்டார்!
Supprimerஎனது வலை படைப்பை நாடி!
எங்கே தேடுவேன் தமிழில் நனைந்தூறிய உயர் நெல்லிக் கனியை
பாராட்டி தருவதற்கு?
புதிய மொந்தையில் பழைய கள்('ளை)
ஔடதமாய்த் தந்தீர்கள்!
நன்றி அய்யா!
புதுவை வேலு
சிலபழமொழிககள் கேட்டதுண்டு. பல பபுதியவையே! எங்களுக்கு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
RépondreSupprimerபழமொழிகள் குறித்து இனிய கருத்து தந்த தகைமைமிகு அய்யா அவர்களுக்கு
Supprimerமிக்க நன்றி!
வருகை தொடர்க!
புதுவை வேலு
.உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்டு ஆரம்பிக்கும் பழமொழிகளை அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறீா்கள். "இனிக்கும் பழ மொழிகள்"
RépondreSupprimerஉண்மையாகவே இதை படிக்கும் போது மனம் இனிக்கத்தான் செய்தது.மிக மிக அருமை! நன்றி!
"இனிக்கும் பழ மொழிகள்" என்று சொல்லி இனிய கருத்தினை பதிவு செய்துள்ளீர்
Supprimerசகோதரி!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான பழமொழிகள். சில இதுவரை கேட்டிராதவை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
RépondreSupprimerவருகை தந்து கருத்து பகன்ற தங்களுக்கு மிக்க நன்றி!
Supprimerவருகை தொடர்க!
புதுவை வேலு