"இடம் பெயர்வாய் ! இளந் நாராய்!"
வையகத்து வானத்தை
வசப் படுத்தும்
நாராய்!
அங்கும் இங்கும்
திகழ்
சங்கத் தமிழ்
நாராய்!
எங்கும் சென்று
தங்கும்
புள் ளினமே நாராய்!
புலம் பெயர்ந்து
புறப்படு
குலம் தழைக்க நாராய்!
தாய்மண் மறவாத
வாய்மை
குணம், உனதுமனம் நாராய்!
குறையேதும் இல்லாது
குன்றாது
நிறைகுளம், உமதுகுலம் நாராய்!
நாடு விட்டு நாடு
வந்தாய்
இனவிருத்திக்
களமிது நாராய்!
குஞ்சுகளும்
குறிப்பு அறியும்
கூடிவாழும்
படிப்பறியும் நாராய்!
வஞ்சகத்தை
வதைத்து விட்டு
ஒற்றுமை விதைத்துவிடு நாராய்!
விருந்தினை முடித்துவிட்டு
விடியலிலே
புறப்படு நாராய்!
(இன்று! 18/12/2014 - "சர்வதேச இடம்பெயர்வோர் தினம்" )
மனத் துயர் உணர முடிந்தது
RépondreSupprimerஅற்புதமான ஆக்கம்
உணர்வு பூர்வமான கருத்துக்களை உள்ளன்போடு உரைத்தீர்கள்!
Supprimerமிக்க நன்றி!
ஆக்கத்திற்கு ஊக்கமாய் அமைவது தாங்கள் தந்துதவும் கருத்து சிந்தனைகளே! என்பதில் மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை தோழரே!
தோழமையுடன்,
புதுவை வேலு
//வஞ்சகத்தை வதைத்து விட்டு
RépondreSupprimerஒற்றுமை விதைத்துவிடு நாராய்!///
ஆகா
அருமை நண்பரே
தோள் கொடுக்கும் தோழராக வந்தீர்
Supprimerதமிழ் கொண்டு அருங் கருத்தினை ஆக்கத்திற்கு தந்தீர்!
வாழ்த்தும் வகைமையை கற்றேன்!
வணங்குகிறேன் நன்றியினை சொல்லி!
நட்புடன்,
புதுவை வேலு
நாரை புறப்படட்டும் நம்பி தமிழ்மறவா
RépondreSupprimerவேரையிப் பாட்டில் விதைக்கின்றார் - சீருற்றே
எங்கும் இருப்போர்க்கும் என்றும் மனதினித்துத்
தங்கும்தாய் நாடே தலை!
அருமையான கவிதை அய்யா!!!
தொடருங்கள்!
நன்றி!!
"எங்கும் இருப்போர்க்கும் என்றும் மனதினித்துத்
Supprimerதங்கும்தாய் நாடே தலை!"
குறள் போன்ற கருத்தினை குறிப்பாக தந்தமைக்கு
திரண்டு வரும் பாலினில் உருண்டு வரும் வெண்ணெய் போல்
மனம் உருகித்தான் போனேன் அய்யா!
உன் தோளில் சூட்டுவதற்கு நான் தேடுகிறேன் தமிழ் மாலை!
நன்றியுடன்,
புதுவை வேலு
"//தாய்மண் மறவாத வாய்மை
RépondreSupprimerகுணம், உனதுமனம் நாராய்!//"
அருமை. அருமை
இப்படி ஒரு தினம் இருப்பது இப்போது தான் தெரிந்தது.
அருமை நண்பரே!
Supprimer"//தாய்மண் மறவாத வாய்மை
குணம், உனதுமனம் நாராய்!//"
வசப் படும் வரிகளை வகை படுத்திச் சொன்னீர்கள் சொக்கன் அவர்களே!
(இன்று! 18/12/2014 - "சர்வதேச இடம்பெயர்வோர் தினம்" )
நம்மை போன்ற இடம் பெயர்ந்தோர் நினைவில் நீங்காது என்றும் நிற்கும்!.
வலைச் சரத்தில் வலம் வந்தமைக்கு
தமிழ்கூறும் நல்லுலகின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
திரு சொக்கன் அவர்களுக்கு!
தொடர்க! குழலின்னிசையை!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே!
Supprimer"//தாய்மண் மறவாத வாய்மை
குணம், உனதுமனம் நாராய்!//"
வசப் படும் வரிகளை வகை படுத்திச் சொன்னீர்கள் சொக்கன் அவர்களே!
(இன்று! 18/12/2014 - "சர்வதேச இடம்பெயர்வோர் தினம்" )
நம்மை போன்ற இடம் பெயர்ந்தோர் நினைவில் நீங்காது என்றும் நிற்கும்!.
வலைச் சரத்தில் வலம் வந்தமைக்கு
தமிழ்கூறும் நல்லுலகின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
திருசொக்கன் அவர்களுக்கு!
தொடர்க! குழலின்னிசையை!
நட்புடன்,
புதுவை வேலு
சர்வதேச இடம்பெயர்வோர் தினத்தன்று நாரையை உதாரணம் வைத்து எழுதிய கவிதை அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
"நாரை"க்கு நல்லுரை தந்தவரே!
Supprimerநாமகளின் துணையோடு நானுரைப்பேன் நன்றியினை!
வருகைக்கும் அருமைமிகு கருத்து பதிவிற்கும்,
வணக்கம்! நன்றி!
புதுவை வேலு
"சர்வதேச இடம்பெயர்வோர் தினம்"இப்போது தான் இப்படி ஒரு தினம் இருப்பதே தொியும்.மிக அழகான வாிகளை கொண்ட கவிதை. நெஞ்சை தொட்டது.வாழ்த்துக்கள்! நன்றி!
RépondreSupprimerநெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் போல்
Supprimerநெஞ்சை கொள்ளை கொள்ளும் கருத்தினை
வாழ்த்தாக தந்தீர்கள் சகோதரி!
தவறாத வருகைக்கும், மறவாத கருத்திற்கும் மிக்க நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாளான இன்று, இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் நாராய்கள் பற்றி நல்லதோர் கவிதை படைத்துள்ளீர்கள். கவிதையையும் கருத்தையும் இரசித்தேன்.வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்"
Supprimerவள்ளலாரின் வழியொற்றி வாழும் வங்கியாளர் அய்யா!
வணக்கம்!
தங்களின் முதல் வருகைக்கு கண்ணனின்
குழலின்னிசை முதல் மரியாதை செலுத்தி வரவேற்கிறது.
அமரர் கல்கியின் வாசகரான தங்களிடம் உண்மை விமர்சனம்
உலவும் என்பதை நானறிவேன். அத்தகைய அருங்கருத்தை
வழங்க தொடர்ந்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
வருக அய்யா தருக அருங்கருத்தை அழகுற!
நன்றியுடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerசாந்தச்சுவை இரசனை மிக்க வரிகள் மூலம் மனதை நெருடிய வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerநண்பர் திரு ரூபன் அவர்களே!
தங்களது கவிதையை போன்று இனித்தது
அழகிய கருத்து!
வருக! தருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
இடம்பெயர்ந்து வாழ்தல் என்பது அசவுகர்யமான ஒன்று! நாராய் கவிதை மூலம் சிறப்பாய் சொல்லி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது
Supprimerவல்லவன் வகுத்ததடா கண்ணா!
நண்பர் தளீர் சுரேஷ்,
தங்களின் உள்ளத்து அன்பினை போற்றுகிறோம்!
தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
வருகைக்கும் வளமான கருத்துரைக்கும் இனிய நன்றி!
புதுவை வேலு
நேரமிருப்பின் நேராய் பதிவுகளுக்கு அழைக்காமலே வந்துவிடுவேன்! சில நாட்களாய் கூடுதல் பணிச்சுமை காரணமாக ஒழுங்காக இணையம் வர முடியவில்லை! உங்கள் தளத்தில் இணைந்திருப்பதால் பதிவு என் டேஷ்போர்டிற்கு வந்துவிடும்.
RépondreSupprimer
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இடம் பெயர்ந்தோர் படும் மன வேதனையையும், ஏக்கத்தையும் வார்த்தைகளால் பகிர்ந்த விதம் சிறப்பாக உள்ளது.
RépondreSupprimerஅய்யா!
Supprimerதங்களின் வருகையை வாசல் வந்து வரவேற்போம்!
எங்களை நேர்படுத்த என்றென்றும் வருகவே!
நன்றியுடன்,
புதுவை வேலு
கவிதை நன்று
RépondreSupprimer
Supprimerகவியாழி கண்ணதாசனின் வருகை
குழலூதும் கண்ணனுக்கு இனிமையை மேலும் சேர்க்கும்!
அருமை கருத்தினை அருந்தமிழில் சொன்னீர்!
நன்றிகள் கோடி வருமே உம்மைத் தேடி!
நட்புடன்,
புதுவை வேலு
இதுகுறித்து ஒரு பாடம் இருக்கிறது தமிழக பத்தாம் வகுப்பில் ...
RépondreSupprimerகவிதை அருமை..
நன்றி
தோழரே!
Supprimerதங்களது கருத்தினை காணும்பொழுது
ஆங்கில படம் பார்ப்பது போன்றதொரு உணர்வு
உள்ளிருந்து வருகிறது. ஆம்! சஸ்பென்ஸ் அதிகமாகி கொண்டே போகிறது.
வில்லிருந்து புறப்படும் பாணத்தை போன்றதொரு பாய்ச்சல்/வேகம்.
வருக! அன்பரே! தருக! அருங்கருத்தை நாளும். நன்றி!
புதுவை வேலு
இடம் பெயர்ந்து வாழ்தலின்
RépondreSupprimerஇன்னல் சொன்னீர் இன்று
இன்னாள் அதற்கு என்று
எடுத்து இயம்பினீர் நன்று.
அருமையான கவிதை தந்தீர்.
நன்றி சகோதரி!
RépondreSupprimerஇல்லம் போற்றிடும் இனிய கருத்தினை தந்தீர்!
நல்லறம் போற்றியே இனிய நலமுடன் வாழ்க!
தொடர் வருகை புரிக! புதுமைமிகு கருத்தினை தருக!
புதுவை வேலு
அழைப்பிற்கு நன்றி. இப்படி ஒரு தினம் இருப்பதை உங்கள் மூலமே அறிந்தேன். புலம்பெயர்வோரின் இன்னல்கள் தீரப்பிரார்த்தனைகள். வேறு ஏதோ மொழியில் அறிவிப்புகள் வருகின்றனவே! ஜெர்மன்? ப்ரெஞ்சு?? தெரியலை. ஆங்கிலம் இல்லை.
RépondreSupprimerதங்களின் வருகையை வணங்கி வரவேற்கிறேன்!
Supprimerபுலம் பெயர்ந்து வாழும் மக்களின் இன்னல்கள் திர நல்ல பல வழிகளை தந்தீர்கள்!!!தங்களது பிரார்த்தனை பலிக்கட்டும்!
வாழ்வில் விடியல் விடியட்டும்!
தொடர் வருகையை தாருங்கள்§
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமை அருமையான கவிதை ஐயா! இப்படித்தானே மக்களும் புலம் பெயர்ந்து.....எத்தனை எத்தனை துயருக்கு ஆளாகின்றனர். நாரைகள் இனப்பெருக்கத்திற்காகவும், இரை தேடியும் புலம் பெயர்வதுண்டுதான்...மனிதரும் பணம் ஈட்ட...என்று புலம் பெயர்தல்...அருமை அருமையான உணர்வுகளைச் சொல்லிய கவிதை ஐயா...
RépondreSupprimerஅய்யா!
RépondreSupprimerஎங்களை நேர்படுத்த என்றென்றும் வருகவே!
நன்றியுடன்,
புதுவை வேலு