dimanche 21 décembre 2014

" இந்திய தேசிய கணித தினம் " (கணக்கதிகாரம் கணக்கு)



 " இந்திய தேசிய கணித தினம் "

 

 




 

நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு!
அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம் என்று சொல்லுவோர்க்கு, நாம் தந்தாக வேண்டிய மதிபெண்கள் எவ்வளவு தெரியுமா?
நூற்றுக்கு நூறு   (100/100).


உலகின் கணித வளர்ச்சிக்கு, நமது இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது என்றல் அது மிகையன்று!

பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். 

அந்த வகையில்,  ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ஒரு இந்தியனுக்கு உண்டு என்று  வரலாறு பதிவு செய்துள்ளது !
 
யார் அந்த இந்தியன்?

ஆம் அவர்தான் கணித மேதை "ராமானுஜன் "


எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும் (number theory),  (செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுஜன் அவர்கள் பெயரால் "The Ramanujan Journal"  எனும் கணித ஆய்விதழ் ஒன்றும் தொடங்கப் பட்டுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி:

இராமானுசன் ஐயங்கார் டிசம்பர் 22 அன்று 1887 ல், ஈரோடு,( இந்தியா) பிறந்த ஒரு இந்திய கணிதவியலாளர். 

அவர்  கும்பகோணத்தில் உள்ள  பள்ளியில்      கல்வி பயின்றார்.  ராமானுஜன் நன்றாக தொடரும் பின்னங்கள் மற்றும் hypergeometry தொடர் அவரது முயற்சியால் கண்டரியபட்டது. 
  
ராமானுஜன் பதின்மூன்று வயது இருக்கும்  போதுஅவர் எந்த உதவியும் இல்லாமல்  "ட்ரிக்னோமென்ட்ரி" பயிற்சிகள் மேற்கொண்டார். அவரால்  பல பிரமாண்டமான முறைகள் மற்றும் புதிய இயற் கணித தொடர் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

இத்தகைய கணித மேதை வாழ்ந்த நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொண்டு அவரது பிறந்த இந்நன்னாளில்  (22/12/ ) 

« இந்திய தேசிய கணித தினமான » இன்று " அவரை நினைவு கொள்வோமாக! 



« கணிதப் புனிதரின் » புகழை போற்றுவோமாக!

 





உலகில் உள்ள கலை இலக்கியங்கள் யாவற்றிற்கும் தலைமை பதவி வகிப்பது யாதெனில் அது எண்ணும்/எழுத்துமேயாகும்.

இதைத் தான் நமது தெய்வப் புலவர் திருவள்ளுவர்/

எண்ணென்ப ஏனை எழுத்தெண்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு 

 -என்று கணிதத்திற்கு அடிபடை காரணியான எண்னின்
சிறப்பை குறள் அமுதமாக தந்துள்ளார்.

மேலும்,

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

"எண்ணெழுத் திகழேல்"-போன்ற மூதுரைகள் கணிதத்திற்கு கண்போல் 

திகழும் எண்னின் சிறப்பை எடுத்தியம்ப எழுந்தவைகளே எனலாம்.





கணக்கதிகாரம் கணக்கு?








காலத்தால் அழிக்க முடியாத அதிகாரம் படைத்த நூல் எது ? என்று கேட்போரின் கேள்விக்கு விடை « கணக்கதிகாரம் » என்று  சொன்னால் முற்றிலும் சரியான விடை என்றே சொல்லலாம்.

வாய்மொழிக் கணக்கு!
மனக் கணக்கு!
வாய்ப்பாட்டுக் கணக்கு  என்று நாம் கேட்டதுண்டு!


"பலாப் பழம் கணக்கு என்று ஒன்று இருப்பதை நாம் அறிந்ததுண்டா?

"கொறுக்கையூர் காரி நாயனார்

அருளிய கணக்கதிகாரம்  என்னும் நூலில்  உள்ளது. 
வாருங்கள் பலாப் பழம் கணக்கிற்கு,

விடை காண்போம்!

கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூலாகும். 



 பாடல்:



"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை

ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே

வேறெண்ண வேண்டாஞ் சுளை"







பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது. 

ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள்  எத்தனை  உள்ளன? என்பதனை கண்டு பிடிப்பதற்கு காம்பைச் சுற்றிலும்  உள்ள முட்களை முதலில் எண்ணிப் பார்க்க வேண்டுமாம்.

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.

அதாவது,
பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100


இதை 100 x 6 = 600


600 வகுத்தல் 5 =120


விடை=120


(பின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 100 x 5 = 500 , 20 x 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது)   
 
இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.



கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூலாகும். 

அன்று!

இயற்கை நமக்கு ஈந்த இன்பத்தை பலாப் பழத்தை முக்கனிகளில் ஒன்றாக வைத்து தமிழர்கள் நாம் சிறப்பித்தோம்! ரசித்தோம் புசித்தோம்!
கணக்கதிகாரம் அதிகாரமிக்க ஆட்சி செய்தது அன்று!


ஆனல்! இன்று?

செயற்கையான உரங்கள்?

வணிக நேக்கத்தோடு மட்டுமே பயிரிடப் படும் பழ வகைகள்

செயற்கையான முறையிலும் பழம் பழுக்க செய்யும் மந்திரங்கள்/தந்திரங்கள்
போன்றவற்றால் முள்ளில்லாத பலாப் பழம் பழுத்தாலும்

நாம் அச்சர்யப்பட அச்சமில்லை! அச்சமில்லை!

இன்று...

கணக்கதிகாரம் கணக்கு?,,?,,?


புதுவை வேலு

18 commentaires:

  1. நானும் இந்த பலா கணக்கை கேள்விபட்டிருக்கிறேன்....அருமையான பகிர்வு...வாழ்த்துகள் சகோ:)

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி சகோதரி!
      பலா பழம் கணக்கை கேள்வி பட்டதோடு சரியா?
      விடியலிலே வந்தீரே!
      விடை சொல்ல வேண்டாமா?

      பின்னூட்டம் பாருங்கள்
      விடை தெரியும்!
      தொடர் வருகை தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் புகழ் பாடுவோம்

    RépondreSupprimer
    Réponses
    1. கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் புகழினை
      கரந்தையாரே!
      தங்களோடு இணந்து நாங்களும் போற்றுகிறோம்!
      நன்றி நண்பரே!
      வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உலகில் கணிதம் என்றும் அழிவதில்லை. அதே போல் கணித மேதை "ராமானுஜன் " அவா்களின் புகழும் என்றும் அழிவதில்லை.நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
    "பலாப் பழம் கணக்கை பாிசோதித்து பாா்க்க ஆசை.." நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பு சகோதரியே!

      "பலாப் பழம் கணக்கை பாிசோதித்து பாா்க்க ஆசை.."
      பரிசோதித்த பின்பு விடை சரியாக இருந்தால் எனக்கும் ஒரிரு பலா சுளை
      பார்சல் PLEASE!
      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. கணித மேதை இராமானுஜம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!
    பலாச்சுளை எண்ணிக்கையை அறிய உதவும் பாடலை படித்தபோது எனக்கு ஆரம்பப் பள்ளியில் படித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
    அப்போதெல்லாம் பள்ளியில் சில கணக்குகளை வேடிக்கையாய் பாடல் மூலம் சொல்லி விடை கண்டுபிடிக்க சொல்வார்கள். அப்படி நான் படித்தபோது எங்கள் ஆசிரியர் போட்ட கணக்குப் புதிர் பாடலை கீழே தந்திருக்கிறேன்.

    ‘கட்டியால் எட்டுக்கட்டி,
    கால், அரை, முக்கால் மாற்று,
    செட்டியார் சென்று போனார்,
    சிறுபிள்ளை மூன்று பேரு,
    கட்டியும் உடைக்கொணாது,
    கணக்கையும் போடவேண்டும்.’

    இறந்துபோன செட்டியார் ஒருவர்க்கு மூன்று பிள்ளைகள். அவர் விட்டுச்சென்ற எட்டு தங்க கட்டிகளை சமமாக பிரிக்கவேண்டும். அதுதான் கணக்கு.

    இதுபோல் எத்தனையோ பாடல்கள் உண்டு. நினைவலைகளை மீட்டியமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா திரு நடன சபாபதி அவர்களுக்கு,
      வணக்கம்!

      ‘கட்டியால் எட்டுக்கட்டி,
      கால், அரை, முக்கால் மாற்று,
      செட்டியார் சென்று போனார்,
      சிறுபிள்ளை மூன்று பேரு,
      கட்டியும் உடைக்கொணாது,
      கணக்கையும் போடவேண்டும்.’


      விடை:
      முதல் பிள்ளைக்கு =1/4 +1/4 +1/4 +1/4 = 4 கால் கிலோ தங்கக் கட்டிகள்
      இரண்டாவது பிள்ளைக்கு = 1/2 + 1/2 = 2 அரை கிலோ தங்கக் கட்டிகள்
      மூன்றாவது பிள்ளைக்கு = 3/4 + 1/4 = 1 முக்கால் கிலோ + 1 கால் கிலோ தங்க கட்டிகள்
      மூன்று பிள்ளைக்கும் தலா 1 கிலோ தங்கத்தை செட்டியார் அவர்கள்
      2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு பரிசாக வழங்கி விட்டார். போதுமா அய்யா!
      அறிவுக்கு வேலை தந்த அய்யாவுக்கு,
      புதுவை வேலு வின் புத்துணர்ச்சி வணக்கங்கள்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    அரிய தகவல் அறியப்பெற்றேன் தங்களின் பதிவு வழி.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் அருமைமிகு நல்ல கருத்து பதிவிற்கும்,
      நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!
      தொடர் வருகை தருக! தொடர்ந்து கவி புனைக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிறப்பான தகவல்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. மணக்கும் மல்லிகையாய்
      வந்தது நண்பரே! தளீர் சுரேஷ் அவர்களே!
      தங்களது கருத்து! மிக்க மகிழ்ச்சி!
      வருக! கருத்தினை தருக!
      தளீர் நோக்கி குழலின்னிசை நாதம் இனி இசைக்கும்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நிறய தகவல்கள் அருமையான கதம்பம்..
    கணக்கதிகாரம் இப்போது கிடைக்குமா என்று தேட விழைகிறேன்
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பு தோழர் மது அவர்களுக்கு,
      தவறாது வருகை தந்து எனது தமிழை தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்தி வரும் தங்களை வணங்கி வழிபடுகின்றேன்!
      நன்றி தோழரே!
      கணக்கதிகாரம் தொகுப்பு நூல் கிடைக்கும் தோழரே!

      கணக்கதிகாரம் : தொகுப்பு நூல் /
      Kaṇakkatikāram : tokuppu nūl

      Auteur :
      பதிப்பாசிரியர், சத்தியபாமா காமேஸ்வரன். சத்தியபாமா காமேஸ்வரன் ; ; Cattiyapāmā Kāmēsvaran̲.

      Éditeur :
      சரசுவதி மகால் நூலகம், Tañcāvūr : Caracuvati Makāl Nūlakam, 1998.

      Édition/format :
      Livre : Tamoul

      வருகைக்கு நன்றி,
      புதுவை வேலு

      Supprimer
  8. கணித மேதை திரு ராமானுஜர் பற்றிய தகவல், திருவள்ளுவரின் கணித பார்வை, பலாப்பழத்தின் சுவையான கணக்கதிகாரம் மற்றும் உண்மையான முடிவுரை அற்புதம். நாட்களை தேடி பெருமை சேர்க்கும் விதம் அழகு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்து மேதை சத்தியா அவர்களே!
      ஒட்டுமொத்த பதிவினயும் பாராட்டி, நிறை மற்றும் குறைகளைஎல்லாம்
      எப்படி ஒரிரு வரிகளிலே எழுத முடிகிறது உம்மால்!
      எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் தந்தால் நன்றாக இருக்குமே?
      தருவீர்களா? நண்பரே?

      புதுவை வேலு

      Supprimer
  9. பலாப்பழம் இனிக்கும் சுவையான பழம். அப்படிப்பட்டப் பழத்தை வைத்துக் கசக்கும் கணக்கைச் சொல்லியிருக்கின்றீர்களே...அஹ்ஹஹாஹ்ஹ ஐயா இது சும்மா தமாஷ்....

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
  10. நன்றி ஆசானே!
    மேலான வருகை புரிந்து
    மேல் மக்கள் மேல் மக்களே
    என்று உணர்த்தி விட்டீர்கள்!
    வாட்டத்தை போக்கும் உன்னதமான கருத்தினை தந்தீர்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer