dimanche 1 novembre 2015

"ஆன்மாக்களின் திருநாள்"



கல்லறைத் திருநாள்




மெழுகாய் உருகி
அழுகை பெருகி
தொழுகை செய்வார்
உயர் உள்ளம்

மரித்தவர் மாண்பு
சரித்திரம் காணும்
கல்லறை வழிபாடு
நல்லற செயல்பாடு

ஆன்மாவை அன்பால்
ஆராதனை செய்திடுக!
தூய மலர்த்தூவி
புனிதஜெபம் புரிந்திடுக! 

கல்லறையில் கண்ணுறங்கும்
நல்லறமிகு ஆன்மாக்களை
இரக்கமுள்ள இயேசு
இளைப்பாற்றி அருள்வார் 

மரித்தவர் மீண்டும் எழுவர்
விண்ணுலக வாழ்வில் நுழைவர்



புதுவை வேலு


22 commentaires:

  1. Réponses
    1. அன்பின் பரிசு கண்ணீர் என்பதை
      உணர்த்தும் உன்னத திருநாள்
      "கல்லறைத் திருநாள்"
      வருகைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. கல்லறைத் திருநாளின் கண்ணீர் வரிகள்
      காரிகன் வருகையின் பன்னீர் கருத்து
      வருகைக்கு வணக்கமும், நன்றியும் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான வரிகள் நண்பரே!

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களை வழிபடும்
      "கல்லறைத் திருநாள்"
      தலைசிறந்தொரு வாழ்வியல் நெறி!
      வருகை தந்து கவிதை வரிகளை சிறப்பித்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. உண்மை முன்னோர்களை வழிபடும் நாள்...தலைசிறந்ததொரு வாழ்வியல் நெறியே...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் வருகையும், பொருள் பொதிந்த கருத்தும்
      குழலின்னிசைக்கு என்றும் தேவை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. சமய நல்லிணக்கத்தின் இமயத்தை தொட்ட வருகை!
      சிறப்பு!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அர்த்தமுள்ள வரிகள் நன்று நண்’’பா’’

    RépondreSupprimer
  7. அர்த்தமுள்ள வருகை
    அன்பின் நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. வணக்கம்
    ஐயா

    அற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  9. வாருங்கள் கவிஞரே,

    "மரித்தவர் மாண்பு
    சரித்திரம் காணும்"

    அற்புத வரிகளாய்,
    சிறப்பினை கண்டு
    கருத்தினை தந்தமைக்கு,
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. நினைவுகூர்ந்த விதம் நன்று.

    RépondreSupprimer
  11. வணக்கம் முனைவர் அய்யா,
    தலைசிறந்ததொரு வாழ்வியல் நெறியை
    உணர்த்தும் உன்னத தினம் "கல்லறை தினம்"
    "இன்று இவர் நாளை நாம்"
    என்பதை உணர்ந்தால் உள்ளம் உண்மையை உயர்வடைய செய்யும் அல்லவா?
    உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. அழகான வரிகளுடன் இந்நாளை நினைவு கூர்ந்தமை நன்று

    RépondreSupprimer
  13. பதிவினை நினைவுகூர்ந்து
    பாராட்டுக் கருத்தினை தந்தமைக்கு
    மிக்க நன்றி ஆசானே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. அவர்கள் அங்கே (கல்லறையில்) புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள்.

    கவிதை நன்று.பாராட்டுக்கள்!

    RépondreSupprimer

  15. கவிதை நன்று.பாராட்டுக்கள்!

    பாராட்டுக்கள் முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள்
    நன்றி அய்யா

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. பதிவினை நினைவுகூர்ந்து
    பாராட்டுக் கருத்தினை தந்தமைக்கு
    மிக்க நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer