vendredi 20 novembre 2015

"மழையே! உன்னை மறவேன்!"





பருவத்தே மழையாக உருவெடுத்து வந்த பருவ மழையை பார்த்து, ஏதும் செய்ய இயலாமல் பரிதவித்து நிற்கும் நிலை? இன்றையை தமிழக மக்களின் நிலை!
தண்ணீர் கேட்டு கோர்ட் வாசல்படி ஏறி நீதி வேண்டிய காலம் போய்,
தண்ணீர் சேதத்திற்கு (மழை)  மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கும்  நிலை?
இன்றையை நிலை!
நீயா? நானா? என ஒருவரை ஒருவர் குறைக் கூறி காரணம் கற்பிக்கும் காலம் இனி என்றுதான் மாறும்?
தொலைநோக்கு சிந்தையோடு சிந்திக்கும் அறிவாற்றல் இருந்தாலும், அதை அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த பின்பு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியை
 மழைநீர் சேமிப்புமக்கள் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் தீட்டுகிறார்களா, என்றால் ?
அவ்வளவாக இல்லை! என்றே சொல்லலாம்.
பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு 
மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
 
சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வேளையில், இப்போது பெய்த

மழையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் 

இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டு வருகிறது என்பதை 

படிக்கும்போது மனம் பரிதவித்து போகிறது.

மழை தொடர்பாக படித்தறிந்த சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



ஒரே நிமிடத்தில் 4000 லிட்டர் தண்ணீர் மாயம்... சென்னையில் இது சாத்தியமா?

இன்று மழையால் தமிழகம் எதிர்கொள்ளும் முதல் பிரச்னை, தண்ணீர் தேங்கியிருப்பது.  
நகர்ப்புறம்முழுக்க தண்ணீர் தேங்கி நிற்க, பரிசல் பயணம் தவிர, எதுவும் சாத்தியமில்லை 
என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இதற்கு முறையான தீர்வு தருகிறது 'டார்மாக்'.

இங்கிலாந்தில் இருக்கும் கட்டுமான நிறுவனமான 'டார்மாக்'கின்  பிரபல கண்டுபிடிப்புதான் 'டாப்மிக்ஸ் பெர்மிபில் கான்கிரீட்'. 
அதாவது நீர் ஊடுருவும் கான்கிரீட் அமைப்பு

தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடும் கதையெல்லாம் இங்கு நடக்காது
இந்த முறையில் சாலைகளை அமைத்தால் நீர் நேரடியாக உறிஞ்சப்பட்டு, அந்த நீர் நாம் அமைத்திருக்கும் சேமிப்பு நிலையம் அல்லது வடிகால் வழியாக, நேரடியாக ஆறு, ஏரி, குளம், கடல் என சென்று சேர்ந்து விடும்.

தற்போதுள்ள நீர் மேலாண்மை முறையினால் முழு மழை நீரும் முறையான இடத்திற்கு சென்று சேர்வது கிடையாது. நகர் முழுக்க கழிவு நீராக மாறி, அது நீர்நிலைகளில் கலக்கிறது. நிலத்தடிக்கும் முழுமையாக செல்வதில்லை. இது அனைத்திற்கும் தீர்வு கண்டிருக்கும் முறைதான் இந்த டாப்மிக்ஸ் கான்கிரீட்.
எப்படி செயல்படுகிறது?

மூன்று முக்கிய அடுக்குகளாக இதை பிரிக்கலாம். முதல் அடுக்கு கூழாங்கற்கள் மற்றும் சிமெண்ட் கலந்த கலவை. இது தண்ணீரை முழுமையாக உள்ளே செலுத்தும். இரண்டாவது அடுக்கு தண்ணீரை முழுதாக உறிஞ்சாமல் மணல் போல குறிப்பிட்ட அளவு மட்டுமே உறிஞ்சும். மீதி நீர் நிலத்தின் கீழேயே ஓடி, ஒன்று சேர்ந்து வெளியேறி விடும். இதில் வெளியேறாத நீர் மற்றும் இரண்டாவது அடுக்கால் உறிஞ்சப்பட்ட நீர் நேரடியாக மூன்றாவது அடுக்கில், நிலத்தடியில் சென்று விடும். இது கூரை போன்ற  மேற்பரப்புக்கு ஒத்துவராது. அதே போல மிகவும் பனிபொழியும் அல்லது குளிர்ந்த இடங்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் தண்ணீர் கீழே வழியாமல் உறைந்து விட்டால், சாலையில் வெடிப்புகள் விழுந்து விடும்.

எங்கெல்லாம் சாத்தியம்?

பார்க்கிங் செய்யும் இடங்களில் இதை செய்யலாம். விளையாட்டு மைதானங்களில் சோதனை முயற்சியாக இது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல நகர்ப்புறங்களில் முழுமையாக செய்தால், வெள்ளம் போன்ற நேரங்களில் பெரும் விபத்துக்களையும், சேதங்களையும் தவிர்க்கலாம். முழுமையான மழைநீர் மேலாண்மை மூலம், தண்ணீரை சேமிக்க நினைத்தாலும் இதை செய்யலாம்.

              



(காணொளியைக் காணுங்கள்  ஒரு நிமிடத்தில்  4000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது.)


 இதோ! மழை தொடர்பான மற்றொரு செய்தி

சென்னையில் மழை நீரைப் பார்த்தும், வெள்ளத்தைப் பார்த்தும் மக்கள் கடுப்பாகி, கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால் ஜப்பானில் வெள்ளம் குறித்து  கவலை இல்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள். காரணம், அந்த நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அட்டகாசமான ஒரு அமைப்பு.
அதாவது, தரைப்பரப்பில் மழை மற்றும் வெள்ளத்தால் தாறுமாறாக குவியு்ம் தண்ணீரை சுரங்கக் குழாய்கள் மூலமாக சேகரித்து அழகாக ஆற்றுக்குக் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சொட்டு கூட சிந்தாமல் சிதறாமல் இந்த மழை நீர் வெள்ளமானது, ஆற்றுக்குப் பத்திரமாக போய் விடுகிறது. இது பாதாள சுரங்க அமைப்பாகும். .
இதை பூமிக்குக் கீழே அமைத்துள்ளனர். நான்கு மைல் நீளத்திற்கு இது இருக்கிறது.
ராட்சத சுரங்கக் குழாய்கள் பூமிக்குக் கீழே ஏராளமான ராட்சத சுரங்கக் குழாய்களை நிர்மானித்துள்ளனர். இந்த சுரங்க உருளையின் மையப் பகுதியானது நான்கு டர்பைன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. போயிங் 737 விமானத்தில் பயன்படுத்தப்படும் அதே ரக என்ஜின்தான் இது.
கால்பந்து மைதானத்திற்குக் கீழே டோக்கியோவுக்கு வெளியே ஒரு சிறிய அரசு அலுவலக கட்டட வளாகத்தில்தான் இந்த சுரங்கத்தை நிர்மானித்துள்ளனர். அங்குள்ள கால்பந்து மைதானத்திற்குக் கீழே இந்த சுரங்கம் உள்ளது.
அபாரமான பொறியியல் அற்புதம் மிகச் சிறந்த அபாரமான பொறியியல் அற்புதமாக இது திகழ்கிறது. ஜப்பானில் வெள்ளமும், புயல்களும் அதிகம். ஆனால் இப்படிப்பட்ட சிக்கலான நிலையிலும் கூட வெள்ள நீரை அழகாக திசை திருப்ப அவர்கள் செய்துள்ள இந்தப் பணி அசர வைக்கிறது.
எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கும் டோக்கியோ நகர மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதை இந்த சுரங்க மழை நீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்கிறது.
3 பில்லியன் டாலர் செலவில் இந்த சுரங்க மழை நீர் சேகரிப்பு அமைப்பானது 1993ம் ஆண்டு தொடங்கி 2006ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவுத் தொகை 3 பில்லியன் டாலராகும்.
அட்டகாசம் இந்த சுரங்க கட்டமைப்புக்குள் எட்டிப் பார்த்தால் ஜேம்ஸ் கேமரூன் படம் பார்ப்பது போலவே இருக்கும். அப்படி ஒரு ஹை பையான கட்டமைப்பு இது. சயின்ஸ் பிக்ஷன் படம் போலவே இதன் கட்டமைப்பு உள்ளது.
ஐந்து அடுக்கு மாடிக் கட்டடத்தை விட உயரம் ஒரு மாபெரும் தண்ணீர்த் தொட்டியின் நீளம் 320 அடியாகும்.
ஐந்து அடுக்கு மாடிக் கட்டடத்தை விட உயரமானது இது.
குழாய் மூலம் ஆற்றுக்குப் போகும் வெள்ளம் இங்கிருந்து நான்கு மைல் தூரத்திற்கு பைப்புகள் போட்டுள்ளனர். அதன் மூலமாகத்தான் நகரில் சேகரமாகும் வெள்ள நீரானது இடோ ஆற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலங்கள் வழக்கமாக டோக்கியோவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் நாகா ஆற்றுப் படுகையில் பெரும் சேதங்கள் ஏற்படும். தற்போது அது தவிர்க்கப்படுகிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனவாம்.
'இடோ ஆறு' இங்குள்ள தண்ணீத் தொட்டிகளில் நீர் நிரம்பியதும் டர்பைன் மூலம் இந்த சுரங்க என்ஜினை இயக்கி சேகரமான தண்ணீரை இடோ ஆற்றுக்குக் கொண்டு செல்கின்றனர்.
ஜப்பானின் பெருமை எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் அதை இதை வைத்து சமாளிக்க முடியும் என்று ஜப்பானிய பொறியாளர்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.
உண்மையில் சென்னை, மும்பை போன்ற இந்திய நகரங்களுக்குத்தான் இது முதலில் தேவை.         

பகிர்வு:

புதுவை வேலு

நன்றி; இணையம்/You Tube



28 commentaires:

  1. எழுத்துகள் மிக சிறியதாக இருக்கின்றனவே, ஏன்? என்னால் படிக்க முடியவில்லை.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களது கருத்தை கவனத்தில் கொண்டேன்!
      மாற்றியும் வடிவமைத்து தந்துள்ளேன்.
      அறிவுறுத்தியமைக்கு அன்பு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பெருமூச்சு தான் வருகிறது ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. "மழையே! உன்னை மறவேன்!"
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இவைபோன்ற தொழில்நுட்பங்கள் நமக்குத் தேவை.

    RépondreSupprimer
    Réponses

    1. தொழில்நுட்பங்கள் நமக்குத் தேவை.
      துயரத்தை தூர விரட்ட தொலை நோக்குப் பார்வை அவசியமே அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பதிவைப் படித்ததும் பெருமூச்சு தான் விட முடிகிறது. செவ்வாய் கோளுக்கு செல்லும் அளவுக்கு அறிவியல் திறமை உள்ள நாம், ஏன் இந்த வாராது வந்த மழை நீரை வீணாக்காமல் சேமிக்க முடியவில்லை என தெரியவில்லை. வந்ததை வைத்து காப்பாற்றமுடியாத நாம் அண்டை மாநிலங்களில் நீருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறோம்.

    RépondreSupprimer
    Réponses

    1. நச் என்று சொல்லியுள்ளீர்கள் அய்யா! அருமை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இன்றைக்கு தேவைப்படும் அத்தியாவசிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இதப் பற்றி விரிவாக கட்டுரை எழுதியுள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. இதுகுறித்து தாங்கள் எழுதிய கட்டுரை பதிவின் சுட்டியை தாருங்களேன் நண்பரே!
      வருகைக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நீயா? நானா? என ஒருவரை ஒருவர் குறைக் கூறி காரணம் கற்பிக்கும் காலம் இனி என்றுதான் மாறும்?///
    நீங்க டார்மாக் சொன்னீர்கள்....டாஸ்மாக் இருக்கும் வரை இவர்களுக்கு வேறொன்றும் தோன்றாது....உங்கள் யோசனை மெச்சத்தக்கது....

    RépondreSupprimer
    Réponses

    1. வருகைக்கு நன்றி நண்பரே!
      தங்களது இந்த கருத்தில் கடவுளைக் கண்டேன்!
      உண்மை வடிவம்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பிறகு வருவேன் நண்பா

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் நண்பா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஆக்கறமிப்போர் உள்ளவரை மழைநீர் வீணாக்கப்பட்டு வருகிறது.
    ஜப்பான் மற்றும் இங்கிலாந்து தொழில்நுட்பம் இங்கு வருமா? புதுவை வேலு அவர்களே.
    ஊழல் இல்லா ஆட்சி வந்தால், நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பொறுப்புகளை கொடுத்தால், நாட்டுக்கு பல தொலைநோக்கு பார்வை கொண்ட ப்ராஜெக்ட்களை வகுக்கப்பட்டால், நாம் மேலைநாட்டின் கண்டுபிடிப்புகளை மிஞ்சிவிடுவோம் என்பதே உண்மை.
    எல்லாம் எதிர்கால '...தால்,...தால், ...டால்' கனவாக இருக்கிறது. நல்ல தகவல்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஊழல் என்னும் ஊறுகாய் போட்டு ஊறிப் போனவர்கள் சிலர் இருக்கும் வரை
      நாம் பெருமூச்சு மட்டுமே விட முடியும் நண்பரே!
      அட்டகாசமான கருத்து அருமை நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பயனுள்ள தகவல்கள்! முறையான திட்டமிடல் இருப்பின் தமிழகம் மழை நீரை சேமித்திருக்க முடியும்! வீணாக கடலில் கலந்து போனது நிறைய!

    RépondreSupprimer
    Réponses
    1. கடலுக்கு காணிக்கைத் தரும் கருணை உள்ளம் கொண்டவர்கள் அல்லவா?
      நமது நாட்டை ஆள்கிறார்கள், நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சமயத்துக்கு தகந்த பதிவு நண்பரே காணொளி அருமை நான் சொல்ல நினைத்ததை நண்பர் திரு. செல்வா அவர்கள் சொல்லி விட்டார்கள்

    RépondreSupprimer
  11. வணக்கம்
    ஐயா
    நல்ல தகவலை பகிரந்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன்...வாழ்த்துக்கள் த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி! கவிஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. படத்தை பார்த்தாலே...தெரிகிறதே..மறக்க முடியாதுன்னு...

    RépondreSupprimer
    Réponses
    1. "மழையே! உன்னை மறவேன்!"
      நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. சிறப்பான திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியும் காண்பிக்கிறார்கள் வெளி நாட்டவர்கள்..... நம் ஊரில் திட்டமிடுவதும் இல்லை. திட்டமிட்டாலும் செயல்படுத்துவதில்லை. செயல்படுத்தினாலும் சுரண்டுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்..... :(

    RépondreSupprimer
  14. நம்மூரில் சிட்டி ப்ளானிங்க் என்பதே இல்லையே ஐயா! வெளிநாட்டவர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்கள். அள்ளுவது அதிகமாக இருக்கும் போது மக்கள் நலன் எங்கு வரப் போகின்றது...

    அருமையான காணொளிகள்...திட்டங்கள்...இங்கு நீங்கள் பகிர்ந்த காணொளியை முகநூலில் பகிர்ந்துள்ளொம்...தங்களையும் குறிப்பிட்டு...
    இவை ஏங்க வைத்துப் பெருமூச்சு விடத்தான் முடிகின்றது...
    மிக்க நன்றி

    RépondreSupprimer
  15. மழை நீரை ஆறு, குளம்,குட்டை என்று எங்கெல்லாம் சேமிக்க வேண்டுமோ அங்கெல்லாம் வீடுகளை கட்டி விட்டோம் .. எனவே இனி மழைநீரை கடல்களில்தான் சேமிக்க வேண்டும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer